Thursday, March 1, 2018

59-வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்

வாய்நல்லார் நல்லம றையோதி மந்திரத்தால்
பாசிலை நாணல்ப டுத்துப்ப ரிதிவைத்து
காய்சின மாகளி றன்னானென் கைப்பற்றி
தீவலம் செய்யக்க னாக்கண்டேன் தோழீ

வாய் நல்லார் நல்ல மறையோதி மந்திரத்தால்-நங்குக் கற்றறிந்த வேதம் ஓதுவாரைத் தொழிலாகக் கொண்டவர்கள் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசு இலை நாணல் படுத்துப் பரிதி வைத்து-தீக்குண்டத்தைச் சுற்றி பசுமையான நாணலைப் பரப்பி, சின்னச் சின்ன மரக்குச்சிகளை அதில் வைத்து
காய்சின மாகளிறு அன்னான் என் கைப்பற்றி-கடுங்கோபம் கொண்ட பெரிய யானையைப் போன்ற கண்ணன் என் கைப்பற்றி
தீவலம் செய்யக் கணாக் கண்டேன் தோழிநான் -அந்தத் தீக்குண்டத்தை சுற்றிவர கனாக் கண்டேன் தோழி நான்

(யானை கம்பீரம்.ஆனால்..கடுங்கோபம் கொண்ட யானையின் அருகில் செல்ல நமக்கு பயம்தானே! அதேபோல ஆஜானபாகுவாய்த் திகழ்ந்த கண்ணன்)

No comments:

Post a Comment