Thursday, March 1, 2018

62- குங்கும மப்பிக் குளிர்சாந்தம் மட்டித்து

குங்கும மப்பிக் குளிர்சாந்தம்  மட்டித்து
மங்கல வீதிவ லம்செய்து மணநீர்
அங்கவ னோடுமு டஞ்சென்றங்கானைமேல்
மஞ்சன மாட்டக் கனாக்கண்டேன் தோழீ

குங்குமம் அப்பிக் குளிர் சாந்தம் மட்டித்து- உடல்முழுதும் குங்குமம் அப்பிக் குளிர்ச்சியான சந்தனமும் பூசி
மங்கல விதி வலம் செய்து மணநீர்-(தோரணம் கட்டப்பட்ட) மங்கலகரமான வீதிகளில் வலம் வந்து ,நறுமணம் கொண்ட (வாசனைத் திரவியங்கள் சேர்த்த) நீரினைக் கொண்டு
அங்கவனோடி உடன் சென்று அங்கு ஆனை மேல்-காண்ணுடன் சேர்ந்து யானைனின் மீது ஏறி வலம் வந்தபோது
மஞ்சனமாட்டக் கனாக் கண்டேன் தோழீ-எங்களுக்கு மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ

உடல் முழுதும் குங்குமம் அப்பி, குளிர்ச்சியான சந்தனமும் பூசி , கண்ணனுடன் யானை மீது ஏறி (தோரணங்கள் கட்டிய) மங்கல வீதியில் வலம் வந்த போது,நறுமணம் கலந்த நீரினைக் கொண்டு திருமஞ்சனம் செய்வது போலக் கனாக் கண்டேன் தோழீ

(திருமஞ்சனம் என்பது அபிஷேகம்.வைணவத்தலங்களில் திருமஞ்சனம் எனப்படுகிறது)

No comments:

Post a Comment