Friday, March 23, 2018

143- பருந்தாட் களிற்றுக் கருள்செய்த

பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே

பருந்தாட்களிறுக்கு அருள் செய்த - பருத்த கால்களையுடைய யானைக்கு அருள் செய்த

பரமன் தன்னை பாரின் மேல் - பரமன் தன்னை உலகினில்

விருந்தாவனத்தே கண்டமை - விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி

விட்டு சித்தன் கோதை சொல் - விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை சொல்

மருந்து ஆம் என்று தம் மனத்தே -  மருந்து என்றே கொண்டு தம் மனத்தே

வைத்துக் கொண்டு வாழ்வார்கள் - நினைத்து வாழ்பவர்கள்

பெருந்தாள் உடைய பிரானடிக் கீழ் - பெரிய திருவடிகளையுடைய எம்பெருமானின் அடிக் கீழ்

பிரியாது என்றும் இருப்பாரே - பிரியாமல் என்றும் இருப்பார்கள்

பருத்த கால்களையுடைய யானைக்கு அருளிய பரமனை, விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி, பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன பாடல்களை . வாழ்வு சிறக்கும் மருந்தென்று மனதில் எண்ணி வழிபட்டு, வாழ்பவர்கள், திருமானின் திருவடிகள் கீழ் என்றும் பிரியாமல் இருக்கும் நிலை எய்துவர்

இத்துடன் பதினான்காம் திருமொழியும், நாச்சியார் திருமொழியும் நிறைவுபெற்றது

Thursday, March 22, 2018

142 - நாட்டைப் படையென்று அயன்முதலா

நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்முடிய
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே  கண்டோமே

நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை

நளிர் மா மலருந்தி - குளிர்ந்த தொப்புள் கொடியிலே உந்தை படைத்து ,(அந்த பிரம்மன் மூலம் பல உயிர்களை பிறப்பித்து)

வீட்டைப் பண்ணி விளையாடும் - பிறப்பு முதல் வீடு பேறு பெரும்வரை ஒருவரின் வாழ்வில் விளையாடும்

விமலன் தன்னை கண்டீரே - விமலனைப் பார்த்தீர்களா?

காடடி நாடித் தேனுகனும் - காட்டில் சென்று தேனுகன் என்ற அசுரனையும்

களிறும் புள்ளும் உடன் முடிய - குவலயபீடம் என்ற யானையையும், பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும்

வேட்டையாடி வருவானை - வேட்டையாடி வந்தவனை

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை ,குளிர்ந்த தொப்புள் கொடியிலே உந்தை படைத்து (அந்த பிரம்மன் மூலம்) பல உயிர்களை பிறப்பித்து, பிறப்பு முதல் வீடு பேறு பெரும்வரை ஒருவர் வாழ்வில் விளையாடும் விமலனைப் பார்த்தீர்களா?

பதில் - காட்டில் சென்று, தேனுகன் என்ற அசுரனையும், குவலயபீடம் என்ற யானையையும், பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும், வேட்டையாடி வந்தவனை விருந்தாவனத்திலே கண்டோமே

141 - வெளியே சங்கொன்றுடையானைப்

வெளியே சங்கொன்றுடையானைப்
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங்குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

வெளியே சங்கொன்று உடையானை - வெண்ணிற சங்கொன்று உடையவனை

பீதக வாடை யுடையானை - மஞ்சள் ஆடை உடுத்தியவனை

அளிநங்கு உடைய திருமாலே - இரக்கம்,அன்பு கொண்ட திருமாலை

ஆழி யானைக் கண்டீரே- சக்கரம் உடையவனைக் கண்டீரே

களி வண்டு எங்கும் கலந்தாற்போல - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தது போல

கழம் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட - மணம் கமழும் பூக்கள் அவனது பெரிய தோள்களை அலங்கரித்து மிளிர விளையாடிக் கொண்டிருப்பவனை

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி - வெண்சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை,இரக்கம் அன்பு கொண்ட திருமாலை (இரக்கமில்லாவதன் என முன்னர் கூறியவள்..இப்போது இரக்கம் கொண்டவன் என் கிறாள்.ஆண்டவ்ன் மீது கொண்ட காதல்..மாறி மாறி பேசத் தோன்றுகிறது) சக்கரம் கொண்டவனைக் கண்டீர்களா?

பதில் - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தாற்போல, மணம் கமழும் பூக்கள் அவன் தோள்களை அலங்கரிக்க விருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருப்பவனைக் கண்டோமே

140 - பொருத்த முடைய நம்பியை

பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்
கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை - உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பியை, உடல் போல உள்ளமும் கருப்பானவனை

கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மாமுகிலைக் கண்டீரே- தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத அந்தக் கரிய நிற முகில் நிறத்தவனைக் கண்டீர்களா

அருத்தித் தாரா கணங்களால் - அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்களால்

ஆரப் பெருகு வானம் போல்- நிறைந்து வழியும் வானத்தைப் போல

விருத்தம் பெரிதாய் வருவானை - பெரிய கூட்டத்துடன் வருபவனை

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவத்தில் கண்டோம்

(ஆண்டாளின் மனநிலையைப் பாருங்கள்.இவள்..கற்பனை உலகில் அவனுடன் வாழ்ந்தாள்.ஆனால்..அவன் வராததால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் என் கிறாள்.உள்ளும் புறமும் கருப்பானவன் என்கிறாள்/ மு ந்தைய பாட்டில் அழகற்ற புருவம் என்றாள்//இப்பாடலில் பொருத்தம் உள்ள நம்பி என் கிறாள். அவள் மனநிலையைப் பாருங்கள்.அவல் படும் வேத்னை புரியும்)

கேள்வி - தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத, அந்த கரிய முகில் நிறத்தவனை, உடல் போலவே உள்ளமும் கருப்பானவனைக் கண்டீர்களா?

பதில் - அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்கள் நிறைந்த வானம் போல..த்ன்னை சுற்றிக் கூட்டத்துடன் விருந்தாவனத்தில் அவன் வருவதைக் கண்டோம்

139 - தரும மறியாக் குறும்பனைத்

தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சாரங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த
மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம் செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோமே

தருமம் அறியா குறும்பனை - நியாயம் என்பதே என்ன என அறியா குறும்பனை

தன் கை சாரங்கம் அது போல- தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல

புருவ வட்டம் அழகிய பொருத்த மிலியைக் கண்டீரே - புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா?

உருவு கரிதாய் முகம் செய்தாய் - உருவம் கரியதாக, முகம் செம்மையாக

உதயப் பரப்பதத்தின் ;- மலையின் மீது

மேல் விரியும் கதிரே போல்வானை - விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்

கேள்வி - (தான் அவன் மீது அவ்வளவு காதல் கொண்டும் மதிக்கத் தெரியாதவன்.தரும சிந்த்னையற்றவன் என்றெல்லாம் ஆண்டாள் கோபத்தில் சொல்வதெல்லாம் அவன் மீது கொண்ட காதலால்)நியாயம் என்றால் என்னவென்றே தெரியாதவன், தன் கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போன்று புருவத்தினைக் கொண்ட அழகற்றவன் ..அவனைக் கண்டீர்களா (அழகன் என்று சொல்லிவந்தவள்..கோபத்தால்..இப்படி சொல்கிறாள்)

பதில் - உருவம் கரியதாக, முகம் செம்மையாக, மலையின் மீது..விரிகின்ற சுரியனின் கதிரைப் போன்ர முகம் கொண்டவனை விருந்தாவனத்தில் கண்டோம்


Wednesday, March 21, 2018

138 மாத வன்என் மணியினை

மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

மாதவன் என் மணியினை - மாதவன் என் மணியினை

வலையில் பிழைத்த பன்றிபோல - வலையில் இருந்து தப்பி பிழைத்த பன்றி போல

ஏது ஒன்றும் கொளத்தாரா - ஏது ஒன்றும் நாம் கொள்ள, கைக்கு பிடி தராமல் செல்லும்

ஈசன் தன்னை கண்டீரே - இறைவனைக் கண்டீர்களா?

பீதக வாடை உடைதாழ - தனது மஞ்சள் பட்டாடை தாழ

பெருங்கார் மேகக் கன்றே போல் - பெரும் கார் மேகக் கன்றே போல் (கருமை நிற கன்றினைப் போல)

வீதியார வருவானை - வீதியில் நிறைந்து வருபவனை

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோம்


 கேள்வி - மாதவன் என் மணியினை (மணி என மாதவனை கொஞ்சுகிறாள்), வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல (உடனேயே பன்றிக்கு ஒப்பிடுகிறாள்? ஆனாலும் பன்றி அவதாரமே எடுத்தவர்.ஆகவே நாம் தவறாக எடுக்கக் கூடாது )நமது கைப்பிடியிலிருந்து தப்பி ஓடியவர்..அவனைக் கண்டீர்களா?

பதில் - பெரும் கருமை நிறக் கன்று போல, மஞ்சள் பட்டாடை உடுத்தி, வீதியில் வலம் வந்துக் கொண்டிருந்தவனைக் கண்டோமே

137 -கார்த்தண் கமலக் கண்ணென்னும்

கார்த்தண் கமலக் கண்ணென்னும்
நெடுங்கயி றுபடுத்தி என்னை
ஈர்த்துக் கொண்டு விளையாடும்
ஈசன் றன்னை கண்டீரே
போர்த்த முத்தின் குப்பாயப்
புகர்மால் யானைக் கன்றேபோல்
வேர்த்து நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

கார்த்தண் கமலக் கண்ணன் என்னும் - கருத்த மேகத்திலே குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்ணினால்

நெடுங்கயிறு படுத்தி என்னை - நீளமான கயிறைக் கொண்டு என்னைப் படுத்தி

ஈர்த்துக் கொண்டு விளையாடும் - என்னைக் கவர்ந்து கொண்டு என்னுடன் விளையாடும்

ஈசன் தன்னைக் கண்டீரே - இறைவன் தன்னைப் பார்த்தீர்களா

போர்த்த முத்தின் குப்பாய - போர்வை போர்த்தியது போல முத்துக்களால் ஆன சட்டையுடன்

புகார்மால் யானைக் கன்றே போல் - ஒளி ர்கின்ற யானைக் கன்றினைப் போல

வேர்த்து நின்று விளையாட - வேர்க்க விறு விறுக்க நின்று விளையாட

விருந்தா வனத்தே கன்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்

கேள்வி -  கருத்த மேகத்திலே, குளிர்ந்த தாமரை மலர் போன்ற கண்களாய், என்னைக் கவர்ந்து...நீளமான கயிறினால் கட்டிப் போட்டு என்னுடன் விளையாடும் இறைவனைக் கண்டீர்களா

பதில் - ஒளிர்கின்ற யானைக் கன்றினைப் போல வியர்த்து விறுவிறுக்க , வியர்வை முத்துகள் மேயின் போர்வை போர்த்தியது போல தோன்ற விருந்தாவனத்தில் விளையாடுபவனைக் கண்டோம்

136 - மாலாய்ப் பிறந்த நம்பியை

மாலாய்ப் பிறந்த நம்பியை
மாலே செய்யும் மணாளனை
ஏலாப் பொய்க ளுரைப்பான
இங்கே போதக் கண்டீரே
மேலால் பரந்த வெயில்காப்பான்
வினதை சிறுவன் சிறகென்னும்
மேலாப் பின்கீழ் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

மாலாய்ப் பிறந்த நம்பியை - கருமையாய் பிறந்த நம்பியை

மாலே செய்யும் மணாளனை - மயக்கம் செய்யும் என் மணாளனை

ஏலாய் பொய்களுரைப்பான் - ஏற்றுக் கொள்ள முடியாத பல பொய்களை உரைப்பவனை

இங்கே போதக் கண்டீரே - இங்கே வரப் பார்த்தீர்களா

மேலால் பரந்த வெயில் காப்பான் - வெயில் உடலில் படாது காப்பவன்

வினதை சிறுவன் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடனின்

சிறகென்னும் மேலாப் பின் கீழ் வருவானை - மேலாக விரித்த சிறகின் அடியில் கீழ் வருவானை

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்


கேள்வி - கருமையாய் பிறந்த நம்பி, என்னை மயக்கம் கொள்ள வைத்த என் மணாளன், ஏற்றுக் கொள்ள முடியா பல பொய்களை உரைப்பவன், இங்கே வரப் பார்த்தீர்களா?

பதில் - வினதை என்ற பெண்ணின் மகனான கருடன், மேலாக விரித்த சிறகின் கீழ், வெயில் உடலில் படாது வந்தவனை விருந்தாவனத்தில் கண்டோமே

(வினதை- கருடனின் தாய், காசிபர் - கருடனின் தந்தை, வினடஹி சிறுவன் - கருடன்)

கண்ணனுடன் கற்பனையில் வாழ்ந்தவள்.பல விதங்களிலும் வேண்டியும், பிரார்த்திதும், தூது அனுப்பியும் வராதவன்...ஆகவே இப்பாடல்கள் மூலம், பொய்யன், .வெண்ணெய் மணத்தவன் குட்டக்காளை என்றெல்லாம் அம்னம் போனபடி செல்லமாக திட்டுகிறாள்  

135 - அனுங்க வென்னைப் பிரிவுசெய்

அனுங்க வென்னைப் பிரிவுசெய்
தாயர் பாடி கவந்துண்ணும்
குணுங்கு நாறிக் குட்டேற்றைக்
கோவர்த் தன்னைக் கண்டீரே
கணங்க ளோடு மின்மேகம்
கலந்தாற் போல வனமாலை
மினுங்க நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

அனுங்க என்னைப் பிரிவிசெய்தாய் - என்னை வருந்த என்னை பிரிவு செய்து

ஆயர்பாடி கவந்துண்ணும் - ஆயர்பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும்

குணுங்கு நாறிக் குட்டேற்றைக் கோவர்த்தன்னைக் கண்டீரே - வெண்ணெய் மணம் கொண்டவன் , குட்டைக்காளை கோவர்த்தனனைக் கண்டீர்களா?

கணங்களோடு மின் மேகம் கலந்தாற்போல _ தன் நண்பர் கூட்டத்தோடு , மின்னும் மேகம் கலந்தாற்போல

வனமாலை மினுங்க நின்று விளையாட - கருத்த தேகத்தில் பல பூக்கள் கலந்த மாலைகள் மினுங்க அங்கு நின்று விளையாடிய (வனை)

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோமே

கேள்வி - என்னை வருத்தமடைய வைத்து, பிரிந்த, ஆயர்பாடி மக்களைக் கவர்ந்து உண்ணும், வெண்ணெய் மணம் கொண்ட குட்டைக்காலை கோவர்த்தனனைக் கண்டீர்களா?

பதில் - தன் நண்பர் கூட்டத்தோடு, மின்னும் மேகம் கலந்தாற்போல, கருத்த தேகத்தில் பலநிற பூக்கள் கலந்த மாலைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தவனை விருந்தாவனத்திலே கண்டோமே

134 - பட்டி மேய்ந்ததோர் காரேறு

(பதினான்காம் பத்து ஆரம்பம்)
கடைசி பத்து.திருமாலின் அவதாரங்களை கோதை புகழ்ந்தாலும், அவள் மனம் நாடுவதோ கண்ணனை.
இப்பத்துப் பாடல்களில், அவள் கண்ணனியப் பார்த்தீர்களா? எனக்கேட்பது போலவும்..அப்படி கேட்கப்பட்டவர்கள் பார்த்ததாகக் கூறுவது போலவும் பாடல்கள் அமைந்துள்ளன.
ஆனாலும், ஆண்டாள் இறுதிவரை அவனைப் பார்த்ததாக எந்த இடத்திலும் குறிப்பிடவில்லை.அவள் மனம் தவிப்புடனேயே இருந்திருக்கிறாள்.
ஆனாலும், நமக்கு அவளை, பெருமாளிடம் இருந்து பிரித்து அறியமுடியவில்லை

இனி கடைசி பத்துப் பாடல்களைக் காணலாம்..

பட்டி மேய்ந்ததோர் காரேறு
பலதே வர்கோர் கீழ்க்கன்றாய்
இட்டீ றிட்டு விளையாடி
இங்கே போதக் கண்டீரே
இட்ட மான பசுக்களை
இனிது மறித்து நீரூட்டி
விட்டுக் கொண்டு விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

பட்டி மேய்ந்ததோர் காரேறு - தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை

பலதேவர்க்கு ஓர் கீழ்க்கன்றாய் - பலதேவருக்கு ஒரு நல்ல தம்பியாய்

இட்டீறிட்டு விளையாடி - செருக்குடன் விளையாடு

இங்கே போதக் கண்டீரே - இங்கே வரக் கண்டீர்களா?

இட்டமான பசுக்களை - தனக்கு விருப்பமான பசுக்களை

இனிது மறித்து நீரூட்டி - இனிமையாகப் பேசி, தடுத்து, அவற்றிற்கு நீரூட்டி

விட்டுக் கொண்டு விளையாட - மேய விட்டுக் கொண்டு விளையாட

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்திலே நாங்கல் கண்டோம்

கேள்வி - தொழுவத்தில் மேய்ந்த ஒரு கருங்காளை, பலதேவரின் நல்ல த்ம்பியாய், செருக்குடன் (சற்றே மிதப்பௌடன்) விளையாடி இங்கே வரக் கண்டீர்களா?

பதில்- தனக்கு விருப்பமான பசுக்களை, மேயச் செல்லும் போது, நிறுத்தி, அவற்றிற்கு நீர் வைத்து,பின் மேய்விட்டு அவன் விளையாடுவதைக் கண்டோம்

Tuesday, March 20, 2018

133 - அல்லல் விளைவித்த பெருமானை

அல்லல் விளைவித்த பெருமானை
ஆயர் பாடிக் கணிவிளக்கை
வில்லி புதுவை நகர்நம்பி
விட்டு சித்தன் வியன் கோதை
வில்லைத் தொலைத்த புருவத்தாள்
வேட்கை யுற்று மிகவிரும்பும்
சொல்லைத் துதிக்க வல்லார்கள்
துன்பக் கடலுள் துவளாரே

அல்லல் விளைவித்த பெருமானை - துன்பம் கொடுத்த பெருமானை

ஆயர் பாடிக் கணிவிளக்கை - ஆயர்பாடியின் அழகான விளக்கை


வில்லி புதுவை நகர் நம்பி விட்டு சித்த்ன் வியன் கோதை - வில்லிப்புத்தூர் நகர நம்பி விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வாரால் பெருமைப் பெற்ற கோதை

வில்லைத் தொலைத்த புருவத்தாள் - தன் வேதனையால் வில்லைனைப் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள்

வேட்கையுற்று மிக விரும்பும் - வேட்கைக் கொண்டு மிகவும் விரும்பும்

சொல்லைத் துதிக்க வல்லார்கள் - சொல்லை (பாடலை) பாட வல்லவர்கள்

துன்பக் கடலுள் துவளாரே - துன்பம் எனும் கடலில் துவள மாட்டார்கள்

(கோதைக்கு ) துன்பம் அளித்த பெருமான், ஆயர்பாடியின் அழகான விளக்கு, வில்லிப்புத்தூர் விஷ்ணு  சித்தன் பெரியாழ்வாரின் மகள்
  கோதை விரும்பும் அழகன், அவன் நினைவால் தன் வில்லைப் போன்ற புருவ அழகைத் தொலைத்தவள் பாடிய பாடல்களை பாடுபவர்கள் (திருமாலின் மீதான பாடல்கள்) துன்பம் எனும் கடலில் துவள மாட்டார்கள்

பதின்மூன்றாம் பத்து முடிவுற்றது)

132 - கொம்மை முலைக ளிடர்தீரக்

கொம்மை முலைக  ளிடர்தீரக்
கோவிந் தற்கோர் குற்றேவல்
இம்மைப் பிறவி செய்யாதே
இனிப்போய்ச் செய்யும் தவந்தானென்
செம்மை யுடைய திருமார்வில்
சேர்த்தானேலும் ஒருஞான்று
மெய்ம்மை சொல்லி முகம்நோக்கி
விடைதான் தருமேல் மிகநன்றே

கொம்மை முலைகள் இடர் தீர - திரண்டு பருத்த முலைகள் துன்பம் தீர

கோவிந்தற்கு ஓர் குற்றேவல் - கோவிந்தனுக்கு ஒரு தொண்டு

இம்மைப் பிறவி செய்யாதே இனிப் போய்ச் செய்யும் தவம் தான்  என் - இந்தப் பிறவியில் செய்யாது இனி வேறொரு பிறவியில் செய்யும் தவம் தான் எதற்கு

செம்மையுடைய திருமார்வில் சேர்த்தான் ஏலும் - செம்மையுடைய அவனது திருமார்பில் என்னை ஏற்றுக்கொண்டான் எனில் நன்று

ஒருஞான்று மெய்ம்மை சொல்லி முகம் நோக்கி - ஒருநாளேனும் உண்மை சொல்லி என் முகம் நோக்கி

விடைதான் தருமேல் மிக நன்றே - எனக்கு ஒரு விடை தந்தால்மிகவும் நன்று 

இரண்டு பருத்த முலைகள் துன்பம் தீர கோவிந்தனுக்கு ஒரு சிறு தொண்டு.இப்பிறவியில் செய்யாது அடுத்தப் பிறவியில் செய்ய தவம் செய்ய வேண்டுமெனில்..அப்படி ஒரு தவம் எதற்கு? அவனது சிவந்த மார்பில் என்னை சேர்த்து அணைத்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.அல்லது ஒருநாளேனும் உண்மை சொல்லி (என்னை ஏற்றுக் கொள்வானா? இல்லையா?என)என் முகம் நோக்கி
சொல்லி,விடத்தருவானாகில் நன்றி

131 - உள்ளே யுருகி நைவேனை

உள்ளே யுருகி நைவேனை
உள்ளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தன்னை கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே

உள்ளே யுருகி நைவேனை - (இவனுக்காக) என் உடல் மட்டுமின்றி உள்ளமும் உருக் உருகி நைந்து போய்க் கொண்டிருக்கிறது

உள்ளோ இலளோ என்னாத - இவள் உயிரோடு இருக்கிறாளா அல்லது இல்லாமல் போய்விட்டாளா என்னவெனக் கேட்காத

கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் -  என்னைக் கொள்ளைக் கொண்ட குறும்பனைக்

கோவர்த்தன் தன்னைக்  கண்டக்கால் - அந்த கோவர்த்தன கிரியைத் தூக்கியவனைக் கண்டீரகளே ஆனால்

கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கை தன்னை - அவனை அடையாமல் எந்த பயனற்றும் இருக்கும் என் கொங்கைகளை

கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு - வேருடன் பறித்து அள்ளிப் பறித்து

அவன் மார்பில் எறிந்தென் மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே - அவன் மார்பிலே எறிந்து காமத்தினால் (எனக்கு ஏற்பட்டுள்ள) உண்டான என் வெப்ப நோயைத் தீர்ப்பேன்

கண்ணனை எண்ணி என் உடம் மட்டுமின்றி, உள்ளமும் உருகி நைந்துப் போய்க் கொண்டிருக்கிறது/இவள் உயிரோடு இருக்கிறாளா..இல்லையா என்று கூடக் கேட்காத, அந்த கோவர்த்தன மலையைத் தூக்கியவனைக் கண்டீர்கள் ஆனால் சொல்லுங்கள்.அவனை அடையாமல் , எப்பயனும் இல்லா என் கொங்கைகளை வேருடன் பறித்து, அவன் மீது எறிந்து எனக்குண்டான காமத் தீயை தீர்த்துக் கொள்கிறேன்

130 - வெற்றிக் கருள கொடியான்றன்

வெற்றிக் கருள கொடியான்றன்
மீமீ தாடா வுலகத்து
வெற்ற வெறிதே பெற்றதாய்
வேம்பே யாக வளர்த்தாளே
குற்ற மற்ற முலைதன்னைக்
குமரன் கோலப் பனைத்தோளோடு
அற்ற மற்ற மலைதீர
அணைய வழுக்கிக் கட்டீரே

வெற்றிக்கு அருள கொடியான்றன்மீ  - மேன்மை பொருந்திய வெற்றிக் கருளக் கொடியான் தன்

மீ தாடா உலகத்து - ஆணையை மீறி ஆடாத செல்ல முடியாத உலகத்து

வெற்ற வெறிதே பெற்றதாய்  வேம்பே ஆக வளர்ந்தாளே - அவனைப் பெற்ற தாய் யசோதா அவனை ஒருவனுக்கும் சிறிதும் பயனில்லா கசப்பான வேம்பாக வளர்த்தாளே

குற்ற மற்ற முலைதன்னைக் - அவனைத் தவிர வேறு எவரும் தொடமுடியாத  என் குற்றமல்லா முலைகளை

குமரன் கோலப் பனைத் தோளோடு - குமரனின் அழகிய பருத்தத் தோளுடன்

அற்ற மற்ற மலைதீர அணைய வழுக்கிக் கட்டீரே - இதுவரை அவன் தோள் சேரா குற்றம்அவை தீர நன்கு அணைத்து அமுக்கிக் கட்டுங்களேன்
(கருளைக் கொடி முல்லை மாலுக்கு உரியது )
மேன்மை பொருந்திய வெற்றிக் கருளக் கொடியானின், ஆணையை மீறி எதுவும் செல்ல முடியாத உலகத்தில், அவனைப் பெற்ற தாய் யசோதா, அவனை யாருக்கும் பயனில்லா வேம்பாய் வளர்த்து விட்டாள்.அவனுக்கே ஆன என் குற்றமில்லா முலைகளை, குமரனின் அழகிய பருத்தத் தோளுடன் நன்கு அழுத்தி அமுக்கிக் கட்டுங்கள்

(முதல் பாட்டில் அவனை பொய்யன்  எனச் சொன்னவள், இப்பாட்டில் அவன் தாய் யசோதையைக் குரை சொலிகிறாள்.இது , அவளின் வேதனையைக் குறிக்கிறது.ஆகவே கோதையின் மனதை அறிந்து//அவள் இப்படிச் சொலவதை உணர வேண்டும்.தவிர்த்து..வளர்த்த தாயைப் பெற்றதாஉ என்றும் சொல்கிறாள்.குமரன் எனமுருகனைச் சொல்வோம்.ஆனால் இப்பாட்டில் கண்ணனைகுமரன் என்றும் சொல்கிறாள்)   

Monday, March 19, 2018

129 - நடையொன் றில்லா வுலகத்து

நடையொன் றில்லா வுலகத்து
நந்த கோபன் மகனென்னும்
கொடிய கடிய திருமாலால்
குளப்புக் கூறு கொளப்பட்டு
புடையும் பெயர் இல்லேன் நான்
போட்கன் மிதித்த அடிப்பாட்டில்
பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள்
போகா வுயிரென்னுடம்பையே

நடையொன்று  இல்லா உலகத்து - ஒழுங்குமுறை ஏதுமில்லா இவ்வுலகில்

நந்தகோபன் மகனென்னும் கொடிய கடிய திருமாலால் - நந்தகோபன் மகன் என்னும் கொடூரமான இரக்கமற்ற கல் போன்ற கடினமான திருமாலால்

குளப்புக் கூறு கொளப்பட்டு - பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகி

புடையும் பெயர் இல்லேன் நான் - அசையவும் முடியாமல் இருக்கின்றேன் நான்

போட்கன் மிதித்த அடிப்பாட்டில் - அந்தப் பொய்யன் மிதித்த அவன் கால் அடியில் கிடக்கும்

பொடித்தான் கொணர்ந்து பூசீர்கள் - பொடியினைக் கொணர்ந்து (காலடி மணலைக் கொணர்ந்து)பூசுங்கள்

போகா உயிர் என்னும் உடம்பையே - போக மறுக்கும் உயிர் கொண்ட என் உடம்பில்

நந்தகோபன் மகன் என்னும் கொடூரமான, கல் நெஞ்சம்  கொண்ட இரக்கமற்ற திருமாலால், பெரும் துன்புறுத்தலுக்கு ஆளாகி அசையவும் முடியாமல் இருக்கின்றேன் நான்.ஒழுங்கு முறை ஏதுமில்லா இவ்வுலகில்.
அந்தப் பொய்யன் மிதித்த கால் அடியில் கிடக்கும் மண்னை கொண்டு வந்து என் போக மறுக்கும் உயிரைத் தாங்கும் உடலில் பூசுங்கள்

(விரக்தியின் உச்சிக்கேப் போய் விட்ட ஆண்டாள்..திருமாலை பொய்யன் என் கிறாள்.அவள் அளவிற்கு அதிகப் பாசமே அவளை அப்படிச் சொல்லத் தூண்டுகிறது)

128 - அழிலும் தொழிலு முருக்காட்டான்

அழிலும் தொழிலு முருக்காட்டான்
அஞ்சே லென்னானவனொருவன்
தழுவி முழுகிப் புகுந்தென்னைச்
சுற்றிச் சுழன்று போகானால்
தழையின் பொழில்வாய் நிரைப்பின்னே
நெடுமா லூதி வருகின்ற
குழுவின் தொளைவாய் நீர்கொண்டு
குளிர முகத்துத் தடவீரே

அழிலும் தொழிலும் உர்க்காட்டான் - அழுதாலும், தொழுதாலும் பயனில்லை.தன்முன் என் உருவைக் காட்டாதவன்

அஞ்சேல் என்னான் எவனொருவன் - அச்சம் கொள்ளாதே! நான் இருக்கிறேன் என எனக்கு ஆறுதல் சொல்லவில்லை அவன்

தழுவி முழுகி புகுந்து என்னை - அந்த ஒருவன் என்னைச் சுற்றித் தழுவி என்னுள் புகுந்து என்னை

சுற்றிச் சுழன்று போகானால் - சுற்றிச் சுழன்றுப் போகிறான்

தழையின் பொழில் வாய் நிரைப் பின்னே - சோலையில்  மயில் தோகைக் குடையின் கீழ் பசுக்கள்பின்னே

நெடுமால் ஊதி வருகின்ற- நெடுமால் ஊதி வருகின்ற

குழுவின் தொளவாய் நீர் கொண்டு - புல்லாங்குழலின் துளையின் வழியாக வெளி வரும் நீர்கொண்டு

குளிர முகத்துத் தடவீரே! - என் முகம் முழுதும் தடவி விடுவீர்களாக

அழ்தாலும், தொழுதாலும், என் முன்னே தன் உருவைக் காட்டாதவன்.அவன் என்னைச் சுற்றித்  தழுவி, என்னுள் புகுந்து போகிறான்.சோலையில், மயில் தோகையைக் குடையாகக் கொண்டு , பசுக்களின் பின்னால், புல்லாங்குழல் ஊதி வருகின்ற கண்ணனின், புல்லாங்குழல் வழியே வெளிவரும் நீர் (ஆண்டாளைப் பொறுத்தவரை வாய் அமுதம்) கொண்டு, என் முகம் முழுதும் தடவி விடுவீர்களாக.

127 - ஆரே யுலகத் தாற்றுவார்

ஆரே யுலகத் தாற்றுவார்
ஆயர் பாடி கவர்ந்துண்ணும்
காரே றுழக்க வழக்குண்டு
தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை
ஆரா வமுத மனையான்றன்
அமுத வாயிலூறிய
நீர்தான் கொணர்ந்து புலராமே
பருக்கி யிளைப்பை நீக்கீரே

ஆரே உலகத்து ஆற்றுவார் - இந்த உலகத்தில் யார் என்னை ஆற்றுவார்கள்

ஆயர் பாடி கவர்ந்து உண்ணும் - ஆயர் பாடி முழுவதும் கவர்ந்து,அவர் மனம் கொள்ளை கொண்டிருக்கும்

காரேறுழக்க வழக்குண்டு - கரிய நிறத்துக் காளை என்னை வருத்த, அதனால் வருந்தி கொண்டு

தளர்ந்தும் முறிந்தும் கிடப்பேனை - தளர்ந்தும் முறிந்தும் கிடப்பவளை

ஆராவமுத மனையாறான் - என்னவன் ஆராவமுதனின்

அமுத வாயில் ஊறிய நீர் தான் கொணர்ந்து புலராமே - அமுத வாயில் ஊறிய நீரினை கொண்டு வந்து நான் தெளிய

பருக்கி இளைப்பை நீக்கீரே - அதைப் பருகத் துணை புரிந்து என் இளைப்பைப் போக்குங்களேன்

ஆயர்பாடி முழுதும் கவர்ந்து,கரிய நிறத்துக் காளை, அவர் மனம் கொள்ளைக் கொண்டிருக்கும் , தளர்ந்து, முறிந்தும் கிடக்கும் என்னை இவ்வுலகில் ஆற்றுவார் யாரும் இல்லையே!என்னவன் ஆராவமுதனின், அமுத வாயில் ஊறிய நீரினை கொணர்ந்து நான் தெளிய எனக்குக் கொடுத்து எனது இளைப்பைப் போக்குங்களேன் 

126 - கஞ்சைக் காய்ந்த கருவில்லி

கஞ்சைக் காய்ந்த கருவில்லி
கடைக்கணென்னும் சிறைக்கோலால்
நெஞ்சூ டுருவ வேவுண்டு
நிலையும் தளர்ந்து நைவேனை
அஞ்சே லென்னானவனொருவன்
அவன்மார் வணிந்த வனமாலை
வஞ்சி யாதே தருமாகில்
மார்வில் கொணர்ந்து புரட்டீரே

கஞ்சைக் காய்ந்த கருவில்லி - கம்சனை வீழ்த்திய, கருமை நிற வில்லனைப் போன்ற புருவம் கொண்ட

கடைக்கண் என்னும் சிறைக்கோலால் - கடைக்கண் பார்வை எனும் விழி அம்பால்

நெஞ்சு ஊடுருவ - (புருவ வில்லில் இருந்து புறப்பட்ட அந்த பார்வை அம்பு என்) நெஞ்சை ஊடுருவ

வேவுண்டு நிலையும் தளர்ந்து நைவேனை - நெஞ்சம் வெந்து என் நிலையும் தளர்ந்து நொந்து இருப்பவளை

அஞ்சேல் என்னான் அவன் ஒருவன் - அஞ்சாதே என சொல்லாத ஒருவன்

அவன் மார்  அணிந்த வனமாலை - அவன் மார்பில் அணிந்த வனமாலை

வஞ்சியாதே -என்னை வஞ்சிக்காமல்

தருமாகில் - தந்தான் என்றால்

மார்வில் கொணர்ந்து புரட்டீரே! - என் மார்பில் கொண்டு வந்து புரட்டுங்கள்

கம்சனை வீழ்த்திய, கருமை நிற வில்லனைப் போன்ற புருவம் கொண்டவன், கடைக்கண் பார்வை என்னும் விழி அம்பால் நெஞ்சை ஊடுருவ, ஏற்கனவே அவன் நினைவால் நெஞ்சம் வெந்து தளர்ந்து இருப்பவளை..அஞ்சாதே என சொல்லாதவன்..குறைந்தது அவன் மார்பில் அணிந்த வனமாலையையாவது தந்தான் எனில், அதை என் மார்பில் கொண்டுவந்து போடுங்கள்

Sunday, March 18, 2018

125 - பாலா லிலையில் துயில்கொண்ட

பாலா லிலையில் துயில்கொண்ட
பரமன் வலைப்பட் டிருந்தேனை
வேலால் துன்னம் பெய்தாற்பொல்
வேண்டிற் றெல்லாம் பேசாதே
கோலால் நிரைமேய்த் தாயனாய்க்
குடந்தைக் கிடந்த குடமாடி
நீலார் தண்ணந் துழாய்கொண்டென்
நெறி மென் குழல்மேல் சூட்டீரே

பால் ஆல் இலையில் துயில்கொண்ட - பால் உள்ள ஆல் இலையில் உறக்கம் கொண்ட

பரமன் வலைப்பட்டு இருந்தேனை - பரமனிடம் அன்புற்றுஅந்த வலையில் இருந்தவளை

வேலால் துன்னம் பெய்தாற்போல்- வேலால் துளை செய்தது போல

வேண்டிற்று எல்லாம் பேசாதே - உங்களுக்கு வேண்டியது எல்லாம் (வாய்க்கு வந்தபடி) பேசாமல்

கோலால் நிரை மேய்த் தாயனாய் - தடி கொண்டு பசு மேய்த்த ஆயனாய்

குடந்தைக் கிடந்த குடமாடி - திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் குடம் ஆடிய குடக் கூத்தன்

நீல் ஆர் தண்ணந் துழாய் கொண்டென் -
கருத்த அழகிய குளிர்ந்த துளசி கொண்டு (கருந்துளசி)

நெறி மென் குழல் மேல் சூட்டீரே- அடர்ந்த மென்மையான என் கூந்தல் மேல் சூட்டி விடுங்கள்

பால் உள்ள ஆல் இலையில் உறக்கம் கொண்ட பரமனிடம் அன்புற்று அந்த வலையில் சிக்கி இருந்தவளை,வேலால் துளை செய்தது போல, (என் மனம் புண்படும்படி) உங்களுக்கு வேண்டியது எல்லாம் (வாய்க்கு வந்தபடி) பேசாமல்,தடி கொண்டு பசு மேய்த்த ஆயபாய், திருக்குடந்தையில் கிடந்த கோலத்தில் குடம் ஆடிய குடக் கூத்தன் போல் கருத்த அழகிய குளிர்ந்த துளசி கொண்டு, அடர்ந்த மென்மையான என் கூந்தலில் சூட்டி விடுங்கள்

(பண்டைய காலத்தில் குடக்கூத்து மிகப் பிரபலமானது)

124 - கண்ணனென்னும் கருந்தெய்வம்

கண்ணனென்னும் கருந்தெய்வம்
காட்சிப் பழகிக் கிடப்பேனை
புண்ணில் புளிப்பெய் தாற்போலப்
புறநின் றழகு பேசாதே
பெண்ணின் வருத்த மறியாத
பெருமானரையில் பீதக
வண்ன ஆடைகொண்டு என்னை
வாட்டம் தணிய வீசீரே

கண்ணனென்னும் கருந்தெய்வம் - கண்ணன் என்னும் கருமை நிறத் தெய்வம்

காட்சிப் பழகிக் கிடப்பேனை - அவனைக் கண்டு, கற்பனையிலேயேவாழ்ந்து (அதிலேயே சுகம் கண்டு)பழகிக் கிடப்பவளை

புண்ணில் புளிப்பு எய்தாற் போலப் புறம் நின்று அழகு பேசாதே - நீங்களோ என் புறம் நின்று புண்ணில் புளிப்பு எய்தது போலப் புறம் பேசி அழகுக் காட்டாது

பெண்ணின் வருத்தம் அறியாத பெருமான் அரையில் - பெண்ணின் வேதனை வருத்தங்கள் அறியாத அந்தப் பெருமானின் இடையிலே

பீதக வண்ண ஆடை கொண்டு - அணிந்திருக்கும் மஞ்சள் பட்டாடைக் கொண்டு

என்னை வாட்டம் தணிய வீசீரே - என் வேதனையை / வாட்டத்தை தீர (அதனை)என் மீது வீசுவீர்களாக

கண்ணன் எனும் கருமைநி றத் தெய்வத்துடன் வாழ்ந்து வருவது போல கற்பனையில் பழகிக் கொண்ட என்னைப் பற்றி, புண்ணில் புளிப்பு எய்தது போல  புறம் பேசாமல், அந்தக் கண்ணனின் இடையிலே அணிந்திருக்கும் பட்டாடையை எடுத்து சாமரமாக எனக்கு வீசி என் வேதனையைத் தீர்ப்பீர்களாக  

123 - மன்னு மதுரை தொடக்கமாக

மன்னு மதுரை தொடக்கமாக
வண்துவ ராபதி தன்னையும்
தன்னைத் தமருய்த்துப் பெய்யவேண்டித்
தாழ்குழ லாள்துணிந் ததுணிவை
பொன்னியல் மாடம்பொ லிந்துதோன்றும்
புதுவையர் கோன்விட்டு சித்தன் கோதை
இன்னிசை யால்சொன்ன செஞ்சொல்மாலை
ஏத்தவல் லார்க்கிடம் வைகுந்தமே

மன்னு மதுரை தொடக்கமாக  - நிலைபெற்ற அழகைக் கொண்ட மதுரையைத் தொடக்கமாகக் கொண்டு

வண் துவராபதி தன்னையும் - அழகிய துவராபதிவரையிலும்

தன்னைத் தமர் உய்த்துப் பெய்ய வேண்டி - தன்னைத் தன் சுற்றத்தார் கண்ணனிடம் கொண்டு சேர்க்க வேண்டி

தாழ் குழலாள் துணிந்த துணிவை - நீண்ட கூந்தலைப் பெற்றவள்(கோதை) துணிந்த துணிவை

பொன்னியல் மாடம் பொலிந்து தோன்றும் - பொன் மாடங்கள் அழகுறத் தொன்றும்

புதுவையர் கோன் விட்டு சித்தன் கோதை - வில்லிபுத்தூர் தலைவன் விஷ்ணுசித்தர் என்ற பெரியாழ்வார் மகள் கோதை

இன்னிசையால் சொன்ன செஞ்சொல்மாலை - இன்னிசையால் சொன்ன செம்மையான சொல் பாமாலையை

ஏத்த வல்லார்க்கிடம் வைகுந்தமே - பாடிப் புகழ் வல்லார்களுக்கு உரிய இடம் வைகுந்தமே

நிலையான அழகுக் கொண்ட மதுரை தொடங்கி துவராபதி வரையிலும், தன்னை ,தன் சுற்றத்தார் கண்ணனிடம் சேர்க்க வேண்டி, நீண்ட கூந்தலைப் பெற்ற கோதையின் துணிவை, பொன் மாடங்கள் அழகுறத் தோன்றும், வில்லிப்புத்தூர் தலைவன் விஷ்ணுசித்தர் எனும் பெரியாழ்வார் மகள் இன்னிசையால் சொன்னாள்.அந்தப் பாமாலையை பாடிப்புகழ் வல்லாருக்கு உரிய இடமாக வைகுந்தம் அமையும்

(பென்னிரெண்டாம் திருமொழியின் பத்துப் பாடல்களிலும், கண்ணன் திருவிளையாடல் புரிந்தத் தலம்/வளர்ந்தத் தலம் ஆகியவற்றிற்குக் கொண்டு சென்று விடச்சொல்கிறாள்)

Saturday, March 17, 2018

122 - கூட்டிலிருந்து கிளியெப்போதும்

கூட்டிலிருந்து கிளியெப்போதும்
கோவிந்தா கோவிந்தா வென்றழைக்கும்
ஊட்டுக் கொடாது செறுப்பானாகில்
உலகள ந்தானென்றுயரக்கூவும்
நாட்டிற்றலைப் பழியெய்தி
உங்கள் நன்மையழிந்து தலையிடாதே
சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்துதோன்றும்
துவராப்பதிக்கென்னை யுய்த்திடுமின்

கூட்டிலிருந்து கிளி எப்போதும் - கூட்டில் இருந்த கிளி எப்போதும்

கோவிந்தா கோவிந்தா என்றழைக்கும் - கோவிந்தா கோவிந்தா என்று அழைக்கும்

ஊட்டுக்  கொடாது செறுப்பானாகில் - உணவுக் கொடாமல் நான் வெறுத்து தனித்தேனெனில்

உலகளந்தான் என்று உயரக் கூவும் - உலகளந்தான் என்று உயரக் கூவும்

நாட்டில் இற்றலைப் பழியெய்தி - நாட்டிலே இப்படி பெரிய பழியை அடைந்து

உங்கள் நன்மை யழிந்து தலையிடாதே - உங்கள் நல்ல பெயர் அழிந்து தலை கவிழ நேராது

சூட்டுயர் மாடங்கள் சூழ்ந்து தோன்றும் துவராப்பதிக்கே - உயர்ந்த மாடங்கள் சூழ இருக்கும்

என்னை யுய்த்தியுமின் - என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

கூட்டில் இருந்த கிளி எப்போதும், கோவிந்தா, கோவிந்தா என்றே கூவும்.உணவுக் கொடுக்காமல் நான் இருந்தால், உலகளந்தான் என உயரக் கூவும்.இப்படி ஒரு பழியை ஏற்று உங்கள் நல்ல பெயர் அழிந்து, உங்கள் தலை கவிழாமல் இருக்க வேண்டுமானால், துவாரபதிக்கு என்னைக் கூட்டிச் சென்று விட்டுவிடுங்கள்

(இப்போது இப்பாடலை , கோதை, தன்னைக் கிளியாய் நினைத்துப் பாடியதாய் எண்ணிப் பாருங்கள்)


121 - கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான்
காடுவாழ் சாதியு மாகப்பெற்றான்
பற்றியுரலிடை யாப்புமுண்டான்
பாவிகாள் உங்களுக்  கேச்சுக்கொலோ
கற்றன பேசி வசையுணாதே
காலிக ளுய்ய மழைதடுத்து
கொற்றக் குடையாக வேந்திநின்ற
கோவர்த் தனத்தென்னை யுய்த்திடுமின்

கற்றினம் மேய்க்கிலும் மேய்க்கப் பெற்றான் - கன்றுகள் இனம் மேய்த்து அதையேத் தொழிலாகப் பெற்றான்

காடுவாழ் சாதியுமாகப் பெற்றான் - காட்டிலே வாழ்ந்து இடையர் சாதியுமாகப் பெற்றான்

பற்றி உரல் இடையாப்பும் உண்டான் - தனது குறும்புத்தனங்களால் தனது தாயால் உரலில் கட்டப்பட்டும் கிடந்தான்

பாவிகாள் உங்களுக்கு ஏச்சுக் கொலோ - பாவிகளே! உங்களது ஏச்சுகளை நிறுத்தும் நாள் எந்நாளோ

கற்றன பேசி வசையுணாதே -  அவனை வசைப்பாடக் கற்றதை வைத்துக் கொண்டு ஏதேனும் பேசி என்னிடம் திட்டு வாங்காதீர்கள்

காலிகள் உய்ய மழை தடுத்து - பசுக்கள் உய்ய மழை தடுத்து

கொற்றக் குடையாக ஏந்தி நின்ற - ஒரு அரசனாக, தன்னைக் காப்பாற்றியவர்களை காக்க குடை ஏந்தி நின்ற

கோவர்த்தனத்து என்னை யுய்த்திடுமின் - கோவர்த்தன மலைக்கு என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

(காலிகள் - பசுக் கூட்டங்கள்)

கன்றுகள் மேய்ப்பதைத் தொழிலாகக் கொண்டு, இடையர் சாதியாயினாய்.உனது குறும்புத்தனங்களைப் பொறுக்கமுடியாது, தாயினால் , உரலில் கட்டப்பட்டாய்.இப்படி உன்னைப் பற்றிப் பாவிகள் ஏசுவதை என்று நிறுத்தப் போகிறார்களோ!இப்படி அவனை யேசுபவர்கள்!..அதானால் நான் உங்களை வசைப்பாடச் செய்து விடாதிர்கள்.
பசுக்களைக் காக்க , ஒரு அரசனாக, கோவர்த்தனமலையைக் கையில் ஏந்தி நின்ற கோவர்த்தன மலைக்கு என்னை கொண்டு சேர்த்துவிடுங்கள்

(மழை வேண்டி நந்தகோபர், இந்திரனுக்கு யாகம் செய்ய முயற்சிக்க, சில காரணங்களைச் சொல்லி அதைத் தடுத்தான்.அதனால் கோபமுற்ற, இந்திரன் , ஊரே அழியுமாறு பெரு மழையைத் தோற்றுவித்தான்.பசுக்களையும், மக்களையும் அழிவிலிருந்து காக்க கோவர்த்தனகிரியை தன் ஒற்றைவிரலில் ஏந்தி காத்தான் கண்ணன்.அந்த கோவர்த்தனகிரிக்கு என்னை அழைத்துச் சென்றுவிடுங்கள்)

120 - வண்ணம் திரிவும் மனங்குழைவும்

வண்ணம் திரிவும் மனகுழைவும்
மானமி லாமையும்ன்வாய்வெளுப்பும்
உண்ண லுறாமையு முள்மெ லிவும்
ஓதநீர் வண்ணனென் பானொருவன்
தண்ணந் துழாயென்னும் மாலைகொண்டு
சூட்டத் தணியும் பிலம்பன்றன்னைப்
பண்ணழி யப்பல தேவன்வென்ற
பாண்டி வடத்தென்னை யுய்த்திடுமின்

வண்னம் திரிவும் மனகுழைவும் - என் மேனி வண்ணம் மாறியது.மனம் குழைந்து , குழப்பித் தளர்வானது

மானம் இல்லாமையும் வாய் வெளுப்பும் - மானம் போனது.சிவந்த வாய் வெளுத்துப் போனது

உண்ணல் உறாமையும் உள் மெலிவும் - உணவு பிடிக்காமல் போனது.உள்ளத்தோடு உடலும் மெலிந்து போனது

ஓதநீர் வண்னன் என்பான் ஒருவன் - அலைகள் பொங்கும் கடல்நீரின் வண்னம் கொண்ட நீலவண்ணன் எனும் ஒருவன்

தண் அம் துழாய் என்னும் மாலை கொண்டு சூட்டத் தணியும் - குளிர்ந்த அழகிய துளசிமாலை கொண்டு எனக்கு சூட்ட தணி யும் நோய்

பிலம்பன் தன்னை பண்ணழியப் பலதேவன் வென்ற பாண்டிவடதென்னை யுத்திடுமின் - பிலம்பன் எனும் அரக்கனை அழித்து, பலதேவன் வென்ற இடமான பாண்டீரவடம் என்னும் தலத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்

என் மேனி வண்ணம் மாறியது.மனம் குழைந்து, குழப்பித் தளர்வானது.மானம் போனது.சிவந்த வாய் வெளுத்துப் போனது.உணவு பிடிக்கவில்லை.உடல் மெலிந்து போனது (காதல் வியாதி பொல்லாதது).அலைகள் பொங்கும் கடல் நீரில் வண்னம் கொண்ட நீலவண்ணன். அழகிய குளிர்ந்த துளசிமாலையைக் கொண்டு எனக்கு சுட்ட தணியும் நோயும்.(தயவு செய்து) பிலம்பன் எனும் அரக்கனை அழித்து,பலதேவன் வென்ற இடமான பாண்டீரவடம் என்ற தலத்திற்கு என்னை அழைத்துச் செல்லுங்கள்

(விருந்தாவனத்தில், காட்டில் கண்ணனும், பலராமனும் விளையாடிக் கொண்டிருந்த போது, அவர்களைக் கொல்லும் பொருட்டு பிலம்பன் அங்கு வந்தான்.அதை அறிந்த கண்ணன், பிலம்பனை விளையாட அழைத்தான்.யார் விளையாட்டில் தோற்கிறார்களோ , அவர்கள் வென்றவரை முதுகில் ஏற்றிச் செல்ல வேண்டும் என்றான் கண்ணன்.
பலராமர் வென்று விடவே, பிலம்பன் , பலராமரை முதுகில் தூக்கிச் சென்றான்.பாண்டீரவடம் என்ற இடத்திற்கு வந்த போது, பலராமர், பிலம்பனின் எலும்புகளை உடைத்துக் கொன்றார்.)
(பாண்டீரவடம் என்றால் கன்றுகள் மேயும் விளைச்சல் பகுதி என்று பொருள்)

119- கார்த்தண் முகிலும் கருவிளையும்

கார்த்தண் முகிலும் கருவிளையும்
காயா மலரும் கமலப்பூவும்
ஈர்த்திடு  கின்றன வென்னைவந்திட்
டிருடீகே சன்பக்கல் போகேயென்று
வேர்த்துப் பசித்து வயிறசைந்து
வேண்டடிசி லுண்ணும் போதுஈதென்று
பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும்
பத்தவி லோகநத் துய்த்திடுமின்

கார்த்தண் முகிலும் கருவிளையும் காயா மலரும் கமலப்பூவும் - கருமையான குளிர்ந்த முகிலும்,கருவிளைப்பூவும்,காயாம் பூவும், தாமரை மலரும்

ஈர்த்திடுகின்றன என்னை வந்து - என்னை வந்து ஈர்த்திடுகின்றன

இருடீகேசன் பக்கம் போகே என்று - இரிடீகேசன் (ரிஷிகேசன்) பக்கம் போ என்று

வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து வேண்ட- வேர்த்துப் பசித்து வயிறு அசைந்து உணவினை வேண்ட

அடிசல் உண்ணும் போது - அடிசல் உண்ணும் போது

ஈதென்று பார்த்திருந்து நெடு நோக்குக் கொள்ளும் -  உணவு உண்ணும் காலம் இதுவென்று நெடுநேரம் முனிவர்களின் வரவை எதிர்நோக்கிக் காத்திருக்கும்

பத்த விலோச நத்து உய்த்திடுமின் - பத்தவிலோசனத்தில் என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்

கருமையான குளிர்ந்த முகிலும், கருவிளைப்பூவும், காயாம் பூவும்,தாமரை மலரும், என்னை வந்து இரிடீகேசன் பக்கம் போ என ஈர்த்திடுகின்றன.வேர்த்துப் பசித்து உணவு வேண்டி வயிறு அசைய, அடிசல் உண்ணுகையில்..உணவு உண்ணும் நேரம் இது என முனிவர்களின் வரவை எண்ணிக் காத்திருக்கும்..பத்த விலோசனத்தில் (ஞாபகம் வர அங்கு) என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

(பத்தவிலோசனம் என்பது யமுனை ஆற்றின் கரையில் உள்ள ஒரு தலம்.ஒருநாள் கண்ணன், பலராமனுடனும், நண்பர்கலுடனும் பசுக்களை மேய்த்துக் கொண்டிருக்க,நண்பர்களுக்கு கடும் பசி வந்தது.உடன் கண்ணன்"அருகில் முனிவர்கள் "ஆங்கிரஸ்" என்ற வேள்வி செய்து கொண்டிருப்பதாகவும்,அவர்கள் மனைவியிடம் தன் பெயரைச் சொன்னால் உணவு அளிப்பார்கள்" என்றும் செல்லச் சொன்னான்.ஆனால் அங்கு சென்ற நண்பர்களை  நம்பாமல் முனிவர்கள் திருப்பி அனுப்பிவிட்டனர்.அதைக்கேட்ட கண்ணன், முனிவர்களின் மனைவிகளிடம், தான் அங்கு இருப்பதைச் சொல்லச் சொன்னான்.நண்பர்களும் அப்படிச் செறு ம்னைவிமார்களிடம் சொல்ல, அவர்கள் மனம் மகிழ்ந்து, எதிர்ப்பையும் பொருட் படுத்தாது உணவைக் கொண்டு வந்து கொடுத்து, கண்ணனையும் , பலராமனையும் வணங்கினர்.பின், தினமும் அவர்கள் உணவு கொண்டு வந்து கொடுப்பது வாடிக்கையாயிற்று.பக்தம் என்றால் சோரு.விலோசனம் என்றால் பார்வை.சோரு பார்த்திருக்கும் இடம் அதானால் அத்தலம் பக்தவிலோசனம் ஆயிற்று.)

கண்ணன் பழகிய இடமெல்லாம், தன்னை அழைத்துச் செல்லச் சொல்கிறாள் கோதை 

Friday, March 16, 2018

118 - ஆர்க்குமென் நோயி த்றியலாகா

ஆர்க்குமென் நோயி தறியலாகா
தம்மனை மீர்தூழ திப்படாதே
கார்க்கடல் வண்ணனென் பானொருவன்
கைகண்ட யோகம் தடவத்தீரும்
நீர்க்கரை நின்ற கடம்பையேறிக்
காளியனுச்சியில் நட்டம் பாய்ந்து
போர்க்கள மாக நிருத்தஞ்செய்த
பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்

ஆர்க்கும் என் நோய் அறியலாகாது - யாருக்கும் என் நோய் தெரிந்திருக்க நியாயம் இல்லை

அம்மனைமீர் துழதிப்படாதெ - தாய்மார்களே! உங்கள் உடல் வலி/பயணத் துன்பம் பற்றி பொருட்படுத்தாமல்

கார்க்கடல் வண்னன் என்பான் ஒருவன் - கடல் வண்ண  நிறம் உள்ள ஒருவன்

கை கண்ட யோகம் தடவத்திரும் - என் உடல் அவன் தொட்ட யோகம் , அவன்  தடவினால் என் நோய் தீரும்

நீர்க்கரை நின்ற கடம்பை ஏறி - குளக்கரையில் நின்ற கடம்ப மரம் ஏறி

காளியன் உச்சியில் நட்டம் பாய்ந்து - காளியன் என்ற பாம்பின் உச்சந்தலையில் எறி நடனமாடி

போர்க்களமாக நிருத்தஞ் செய்த- போர்க்களமாக அதனை நொறுக்கச் செய்த

பொய்கைக் கரைக்கென்னை யுய்த்திடுமின் - அந்த பொய்கையின் கரையில் என்னை கொண்டு விட்டு விடுங்கள்

யாருக்கும் என் நோய் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை., கடல் வண்ணநிறம் உள்ள ஒருவன், என் உடல் தொட்டு, தடவினால் என் நோய் தீரும்.குளக்கரையில் நின்ற கடம்ப மரம் ஏறி, காளியன் என்ற பாம்பின் உச்சந்தலையில் ஏறி நடனமாடி, போர்க்களமாக அதனை நொறுக்கச் செய்த, அந்த பொய்கையின் கரையில் , தாய்மார்களே ! நீங்கள் உங்கள் உடல் வலி, என்னுடன் பயணிப்பதால் ஏற்படப்போகும் பயண வலி ஆகியவற்றை பொருட்படுத்தாது, என்னைக் கொண்டு விட்டு விடுங்களேன்

117 - அங்கைத் தலத்திடை

அங்கைத் தலைத்திடை யாழிகொண்டான்
அவன்முகத் தன்றி விழியேனென்று
செங்கச்சுக் கொண்டுகண்ணாடையார்த்துச்
சிறுமானிடவரைக் காணில் நாணும்
கொங்கைத் தலமிவை நோக்கிக் காணிர்
கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா
இங்குத்தை வாழ்வை யொழியவேபோய்
யமுனைக் கரைக்கென்னை யுய்த்திடுமின்

அங்கைத் தலைத்திடை யாழிகொண்டான் - தமது அழகிய கைத்தலத்தில் சக்கரம் கொண்டவன்

அவன்முகத்தன்றி   விழியேன் என்று -  அவன் முகத்தைத் தவிர வேறு எதிலும் விழிக்க மாட்டேன் என்று

செங்கச்சுக் கொண்டு கண்ணாடையார்த்து- செந்திற ஆடையைக் கட்டிக் கொண்டு (மார்புக் கச்சை)

சிறுமானிடவரைக் காணில் நாணும் - (அந்தக் கண்ணனைத் தவிர) வேறு சிறு மானிடரை பார்க்கச் சகிக்காமல் வெட்கும்

கொங்கைத் தலமிவை நோக்கிக் காணிர்- என் கொங்கைகள் இருக்கும் இடத்தை நன் கு  கவனியுங்கள்

கோவிந்தனுக்கல்லால் வாயில் போகா - கோவிந்தனுக்கு அல்லாமல் வேறு எவனுக்கும் உண்ணக் கொடுக்காது

இங்குத்தை வாழ்வை ஒழியவே போய் - இவ்விடம் வாழ்வதை ஒழித்துப் போய்

யமுனைக் கரைகென்னை யுய்த்திடுமின் - யமுனைக் கரைக்குச் சென்று என்னை (அவனுடன்) சேர்த்து விடுங்கள்

தன் அழகிய கைகளில் ஆழி சங்கினைக் கொண்டவன், என் கொங்கைகள் அவனைத் தவிர வேறு சாதாரணமான மானிடனைப் பார்க்க மாட்டேன், என செந்நிற ஆடையைக் கண்டிக் கொண்டிருப்பதைப் பாருங்கள்.அவை கோவிந்தனுக்கு மட்டுமே வாய் புகும்.ஆகவே, என்னை இவ்விடத்திலிருந்து யமுனைக் கரையில் (அவனிடம்) சேர்த்து விடுங்கள்


(அவளது மார்பு செந்நிற ஆடை அணிந்து மற்ற மானிடர்களைக் காண வெட்கப்படுகிறதாம்.அவளது, முலைகளை மார்பின் கண்கள் என் கிறாள்.இப்படியெல்லாம் எழுதியுள்ளதால், இவற்றை எழுதியது ஆண்டாள் அல்ல என் கிறார்கள்.ஆனால், ஆண்டாள், பிடிவாதக்காரி, அழுத்தக்காரி, தன் முடிவில் உறுதியாய் நிற்பவள்..ஆகவெ அவள் இப்படி எழுதியதில் வியப்பில்லை எனலாம்)


Thursday, March 15, 2018

116 - தந்தையும் தாயுமுற் றாரும் நிற்க

தந்தையும் தாயுமுற் றாரும்நிற்கத்
தனிவழி போயினாள் என்னும் சொல்லு
வந்தபின்னைப்பழி காப்பரிது
மாயவன் வந்துருக் காட்டுகின்றான்
கொந்தள மாக்கிப் பரக்கழித்துக்
குறும்புசெய் வானோர் மகனைப்பெற்ற
நந்தகோ பாலன் கடைத்தலைக்கே
நள்ளிருட் கணென்னை யுய்த்திடுமின்

தந்தையும் தாயும் உற்றாரும் நிற்க - தந்தையும், தாயும்,உற்றாரும் தவித்து நிற்க

தனிவழி போயினாள் என்னும் சொல்லு வந்த பின்னை - அவர்கள் பேச்சைக் கேட்காது தனிவழியே சென்றாள் என்ற சொல்லும் வந்த பின்னே

பழி காப்பரிது மாயவன் வந்துருக் காட்டுகின்றான்- இனியும் பழி வராமல் காப்பது அரிது.மாயங்கள் காட்டும் மாதவன் வந்து தன் உருவத்தைக் காட்டுகின்றான்

கொந்தளம் ஆக்கிப் பரக் கழித்து- குழப்பம் ஆக்கிப் பெரும் பழி விளைவித்து

குறும்பு செய்வான் ஓர் மகனைப் பெற்ற - குறும்பு செய்கின்ற ஒரு மகனைப் பெற்ற

நந்த கோபாலன் கடைத்தலைக்கே- நந்தகோபாலன் இருக்கும் இடத்திற்கே

நள்ளிருட்கண் என்னை உய்த்திடுமின்- நள்ளிரவில் என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்

தந்தையும், தாயும், உற்றத்தாரும் தவித்து நிற்க, அவர்கள் பேச்சைக் கேட்காது, தனிவழியே சென்றாள் (கோதை) என்ற சொல்லும் வந்த பின்னே, இனியும் பழி வாராது காப்பது அரிது.மாயங்கள் காட்டும் மாதவன் வந்து அவன் உருவத்தை எனக்குக் காட்டுகின்றான்.ஆகவே, குழப்பி, பெரும் பழி விளைவித்து ,குறும்பு செய்கின்ற ஒரு மகனைப் பெற்ற நந்தகோபாலன் இருக்குமிடத்திற்கே, நள்ளிரவில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

(நள்ளிரவு என ஏன் சொன்னாள்? ஏற்கனவே பழி வந்து விட்டது.பகலில் போனால் ஊரார் மேலும் பேசுவர்.ஆகவேதான் நள்ளிரவில்...என் கிறாள் கோதை)

115 - நாணி யினியோர் கருமமில்லை

நாணி யினியோர் கருமமில்லை
நாலய  லாரும்  அறந்தொழிந்தார்
பாணியா தென்னை மருந்து செய்து
பண்டுபண் டாக்க வுறுதிராகில்
மாணியுருவா யுலகளந்த
மாயனைக் காணில் தலைமறியும்
ஆணையால் நீரென்னைக் காக்கவேண்டிய
ஆய்ப்பாடிக் கேயென்னை யுய்த்திடுமின்

நாணி இனியோர் கருமமில்லை-  இனி வெட்கப்பட்டு ஒரு வேலையுமில்லை

நால் அலயாரும் அறந்தொழிந்தார் - (என் வீட்டில் உள்ளவர்கள் மட்டுமே அறிந்த செய்தி) உற்றார், உறவினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது

பாணியாது என்னை மருந்து செய்து - காலம் தாழ்த்தாது என் நோய்க்கு நீங்கள் மருத்துவம் பார்த்து

பண்ணு பண்டாக்க உறுதிராகில் - முன்பு எப்படியிருந்தேனோ,அதுபோல பண்டுவம் பார்க்க உறுதியுடையவராக இருப்பார்கள் எனில்

மாணியுருவா உலகளந்த - குள்ள உருவில் வந்து உலகை அளந்த

மாயனைக் காணில் தலை  மறியும் - அந்த மாயவனைக் கண்டால் இந்நோய் குணமடைந்து நான் மீள்வேன்

ஆணையால் நீர் என்னைக் காப்பீர் - என் மீது ஆணையாக நீங்கள் என்னை காக்க வேண்டுமானால்

ஆயப்பாடிக்கே என்னை உய்த்திடுமின் - ஆயர்பாடியில் என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள்

என் வீட்டார் மட்டுமே அறிந்த செய்தி, இப்போது உற்றார், உறவினர் அனைவருக்கும் தெரிந்து விட்டது.காலம் தாழ்த்தாது என் நோய்க்கு மருத்துவம் பார்த்து, என்னை பழைய நிலைக்கு வரவழைக்க வேண்டுமானால்,   குள்ள உருவில் வந்து உலகை அளந்த அந்த மாயவனை நான் காண வேண்டும்;
நீங்கள் என் மீது ஆணையாக, என்னைக் காக்க வேண்டுமானால் என்னை (அவன் இருக்கும்) ஆயர் பாடியில் கொண்டு சேர்த்து விடுங்கள்

(பண்டுவம் - மருத்துவம்)

114- மற்றிருந் தீர்கட் கறியலாகா

(கண்ணனைக் காணவேண்டும் என்ற ஆசையை பன்னிரெண்டாம்  பத்தில் சொல்கிறாள்.ஆயர்பாடி செல்ல ஆசைப்படுகிறாள்)

மற்றிருந் தீர்கட் கறியலாகா
மாதவனென்பதோ ரன்புதன்னை
உற்றிருந் தேனுக் குரைப்பதெல்லாம்
ஊமைய ரோடு செவிடர் வார்த்தை
பெற்றிருந் தாளை யொழியவேபோய்ப்
பேர்த்தொரு தாயில் வளர்ந்தநம்பி
மற்பொருந் தாமற் களமடைந்த
மதுரைப் புறத்தென்னை யுய்த்திருமின்

மற்று இருந்தீர்கட்கு அறியலாகா - என்னுடம் மாற்றுக் கருத்துக் கொண்டவர்க்கு என் வேதனைத் தெரியப் போவதில்லை

மாதவன் என்பதோர் அன்பு தன்னை- மாதவன் மீது அன்பு

உற்றிருந்தேனுக்கு உரைப்பது எல்லாம்- கொண்டிருக்கும் எனக்கு நீங்கள் பேசுவது எல்லாம்

ஊமையரோடு செவிடர் வார்த்தை - ஊமைகளும், செவிடர்களும் பேசிக் கொள்வதைப் போன்றது

பெற்றிருந்தாளை ஒழியவே போய்- பெற்ற அன்னையான வாசுகியைப் பிரிந்து

பேர்த்தொரு தாயில் வளர்ந்த நம்பி-  வேறோரு தாயிடம் வளர்ந்த நம்பி

மற்பொருந்தாமல் களம் அடைந்த - மற்போரில் போர் புரிவதற்கு முன்பே களம் அடைந்த

மதுரைப் புறத்து என்னை உய்த்திருமின் - (கண்ணன் இருக்குமிடமான) மதுரையில் என்னைக் கொண்டு சேர்த்து விடுங்கள்

என்னுடன் மாற்றுக் கருத்துக் கொண்டோருக்கு என் வேதனைத் தெரியப் போவதில்லை (அப்போதே ஆண்டாளுக்கு எதிர்ப்பு இருந்தாற்போல் இருக்கிறது)மாதவன் மீது அன்பு கொண்டிருக்கும் எனக்கு, நீங்கள் பேசுவது எல்லாம்  ,ஊமைகளும், செவிடர்களும் பேசிக்கொள்வதைப் போன்றது.
பெற்ற அன்னையான வாசுகியைப் பிரிந்து, வேறொரு தாயிடம் (யசோதையிடம்) வளர்ந்த நம்பி, மற்போரில் போர் புரிவத்ர்கு முன்பே களம் அடைந்த (வீரர்களை அணைத்து, போர் புரிவத்ற்கு முன்) கண்ணன் இருக்கும் மதுரையில் என்னைக் கொண்டு சேர்த்துவிடுங்கள் (அவன் அணைப்பு முதலில் எனக்கே)

113 - செம்மை யுடைய திருவரங்கர்

செம்மையுடைய திருவரங்கர் தாம்பணித்த
மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்
தம்மை யுகைப்பாரைத் தாமுகப்ப ரென்னும்சொல்
தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே

செம்மை உடைய திருவரங்கர் - சிறப்பையுடைய திருவரங்கர்

தாம் பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டு சித்தர் கேட்டிருப்பர்- கட்டளையிட்ட உண்மைப் பெரும் பொருளை பெரியாழ்வார் விஷ்ணுசித்தர் கேட்டிருப்பர்

தம்மை உகப்பாரைத் தாமுகப்பர் என்னும் சொல் - தம்மை விரும்புபவரை தாமும் விரும்புவர் எனும் சொல்

தம்மிடையே பொய்யானால் சாதிப்பா ராரினியே - காப்பாற்றப் படாமல் ,அவ்விறைவனானாலேயே பொய் ஆகிப் போனால், இனி யார் தான் சாதிக்க முடியும்?

(பெரியாழ்வாரின் திருமொழி- ஓம் நமோ நாராயணாய
ஓம் என்பது இங்கு ஒரு எழுத்தாகக் கொள்ள வேண்டும்
ஓம்- அவனுக்கும் எனக்குமான உறவு(உயிர்களுக்கும், இறைவனுக்குமான உறவு)
நமோ- எதுவும் எனதில்லை
நாராயணாய-என் எல்லாமும் நாராயணுக்கே
(அரங்கனால் நான்-அரங்கனுக்காக நான்)

சிறப்பையுடைய திருவரங்கர், கட்டளையிட்ட உண்மைப் பெரும் பொருளை பெரியாழ்வார் விஷ்ணுசித்தர் கேட்டிருப்பார்.தம்மை விரும்புபவரை தாமும் விரும்புவர்(ஓம்)
அந்த சொல் காப்பாற்றப்படாமல், பொய் ஆக ஆகிப்போனால், இனி யாரால் அதை சாதிக்க முடியும்.
(தான் விரும்புன் திருவரங்கண் இன்னமும் தன்னை விரும்புவதாகத் தெரியவில்லையே என்ற ஆதங்கத்தில் கோதை கேட்கிறாள்)

இத்துடன் பதினோராம் பத்து முடிவுற்றது

Wednesday, March 14, 2018

112- கண்ணாலங்கோடித்து கன்னிதன்னைக்


கண்ணாலங்கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்
திண்ணார்ந் திருந்த சிசுபாலன் தேசழிந்து
அண்ணார்ந் திருக்கவே யாங்கவளைக் கைப்பிடித்த
பெண்ணாளன் பேணுமூர் பேருமரங்கமே

கண்ணாலங்கோடித்துக் கன்னி தன்னைக் கைப்பிடிப்பான்- புதுத்துணி உடுத்தி, திருமணம் செய்து கன்னியைக் கைப்பிடிக்கலாம் என்று

திண்ணார்ந்திருந்த சிசுபாலன் தேசழிந்து- உறுதியுடன் இருந்த சிசுபாலன் தன் ஒளி இழந்து

அண்ணார்ந்திருக்கவே ஆங்கு அவளைக் கைப்பிடித்த- அண்ணந்து பார்த்திருக்க அங்கே அவளைக் கைப்பிடித்த

பெண்ணாளன் போற்றும் ஊர் பேரும் அரங்கமே- பெண்ணாளன் போற்றும் ஊர்பேரும் அரங்கமே


புதுத்துணி உடுத்தி,திருமணம் செய்து கன்னியைக் கைப்பிடிக்கலாம் என, உறுதியுடன் இருந்த சிசுபாலன், ஒளி இழந்து அண்ணாந்து பார்த்திருக்க, அங்கு அவளைக் கைப்பிடித்த பெண்ணாளனை போற்றும் ஊர் பெயர் திருவரங்கமே!

(விதர்ப்ப நாட்டு மன்னன் பீஷ்மகனுக்கு குக்மி என்ற மகனும்,ருக்மணி என்ற மகளும் இருந்தனர்.ருக்மியின் நண்பன் சிசுபாலனுக்கு ருக்மணியை மணமுடிக்க முடிவு செய்தான் ருக்மி.ஆனால், ருக்மணியோ, கண்ணனை விரும்பினாள். அவன் கண்முன்னலேயே கண்ணன் ருக்மணியைத் தட்டிச் சென்றார்.அப்படிப்பட்ட கண்ணனை பெண்ணாளன் என்று சொன்ன கோதை, பேண் மனத்தை அறிந்து அன்று நடந்து கொண்ட படி இன்று என்னை அறிந்து நடந்து கொள்ளவில்லையே என் கிறாள்)

111 - பாசிதூர்த் துக்கிடந்த பார்மகட்கு

 பாசிதுர்த்  துக்கிடந்த பார்மகட்கு பண்டொருநாள்
மாசுடம்பில் நீர்வார மானமிலாப் பன்றியாம்
தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார்
பேசி யிருப்பனகள் போர்க்கவும் பேராவே

பாசி தூர்த்துக் கிடந்த பார் மகட்கு பண்டொருநாள்- முன்பு ஒருநாள் பசுமை நிறைந்து கிடந்த நிலமகளுக்காக

மாசு உடம்பில் நீர் வார மானமிலாப் பன்றியாம் - அழுக்கேறிய உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லாத பன்றியாக உருவெடுத்த

தேகடைய தேவர் திருவரங்கச் செல்வனார் - ஒளியுடைய தேவர் திருவரங்கச் செல்வனார்

பேசி இருப்பனகள் போர்க்கவும் பேராவே - என்னிடம் முன்பு பேசியவற்றை என் மனதில் இருந்து நீக்க முயன்றும் முடியவில்லையே!

பசுமை நிறைந்து கிடந்த நிலமகளுக்காக , அழுக்கேறிய உடம்பில் நீர் ஒழுக மானம் இல்லா பன்றியாய் அவதாரம் எடுத்த, திருவரங்கச் செல்வனார், என்னிடம் முன்பு பேசியவ ற்றையெல்லாம் என் மனதில் இருந்து நீக்க முயன்றும்..அது முடியவில்லையே (என பிதற்றுகிறாள்)

(ஆமாம்..அவர் எப்பொது, இவளிடம் என்னவெல்லாம் பேசினார்....எல்லாம் அவளது கற்பனை உலகில் பேசியவை)

110- உண்ணா துறங்கா தொலிகடலை

உண்ணா துறங்கா தொலிகடலை யூடறுத்து
பெண்ணாக்கை யாப்புண்டு தாமுற்ற போதெல்லாம்
திண்ணார் மதிள்சூழ்த் திருவரங்கச் செல்வனார்
எண்ணாதே தம்முடைய நன்மைகளே யெண்ணுவரே!

உண்ணாது உறங்காது ஒலி கடலை ஊடு அறுத்து- உணவு உண்ணாமல், தூங்காமல் நாளும் ஒலிக்கின்ற கடலின் உள்ளே சென்று பிளந்து

பெண் ஆக்கை யாப்புண்டு தாம் உற்ற போதெல்லாம்= பெண் உடல் மீது விருப்பம் கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு தாம் உற்ற மயக்கத்தை எல்லாம்

திண் ஆர் மதிள் சூழ்த் திருவரங்கச் செல்வனார்- உறுதி நிறைந்த மதிள்கள் சூழ்ந்த திருவரங்கத்து செல்வனார்

எண்ணாதே தம்முடைய நன்மைகளேயே எண்ணுவரே- மறந்துவிட்டு தம் நன்மைகளை மட்டும் எண்ணுகிறாரே!

உணவு உண்ணாமல் தூங்காமல் தினமும் அலைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் கடலைப் பிளந்து  ,பெண்ணான சீதையின் மீது கொண்ட பற்றினால் சென்று போரிட்டு திரும்பிய உறுதி சூழ்ந்த மதிள்கள் நிறைந்த திருவரங்கத்து செல்வம் மிக்கவன் (திருவரங்கன்),இன்று அனைத்தையும் மறந்துவிட்டு (இன்று அவனுக்காக காலமும் காத்திருக்கும் என்னை மறந்து) தன் நன்மைகளை மட்டுமே எண்ணுகிறாரே! 

109 - கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார்

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் காவிரிநீர்
செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார்
எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்
சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டார்

கைப்பொருள்கள் முன்னமே கைக்கொண்டார் - என் கையிலிருந்த அனைத்துப் பொருட்களையும் முன்னமேயே கைபற்றிக் கொண்டார்

காவிரிநீர் செய்ப்புரள வோடும் திருவரங்கச் செல்வனார் - காவிரி நீர் விளைநிலங்களில் புரண்டு ஓடும் திருவரங்கத்து செல்வனார்

எப்பொருட்கும் நின்றார்க்கு மெய்தாது நான்மறையின்- எல்லாப் பொருட்களிலும் உள் நின்று எவருக்கும் கிட்டாது நான்மறையின்

சொற்பொருளாய் நின்றாரென் மெய்ப்பொருளும் கொண்டாரே- சொற்பொருளாய் நின்றார்.அவரே என் உடலையும் கொள்ளை கொண்டாரே!

(நான் கு மறையின் உட்பொருள் "ஓம்" என்பதாகும்)

என் கையிலிருந்த அனைத்துப் பொருட்களையும் முன்னமேயே கைப்பற்றிக் கொண்ட, காவிரி புரண்டோடும் விளைநிலங்களின் செல்வனார் திருவரங்கனார், அனைத்துப் பொருட்களின் உள்ளும் இருந்து, எவருக்கும் கிட்டாத நான் கு மறையின் உட்பொருளான "ஓம்" என்றும் சொற் பொ ருளாகவும் நின்றார்.அப்படிப்பட்டவர் என் உடலையும் கொள்ளை கொண்டாரே!

Tuesday, March 13, 2018

108 - பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில்

பொல்லாக் குறளுருவாய்ப் பொற்கையில் நீரேற்று
எல்லா வுலகு மளந்துகொண்ட வெம்பெருமான்
நல்லார்கள் வாழும் நளிரரங்க நாகணையன்
இல்லாதோம் கைப்பொருளு மெய்துவானொத்துளனே

பொல்லாக் குறள் உருவாய்ப் பொற்கையில் நீர் ஏற்று - பொல்லாச் சிறிய உருவாக தன் பொன்னான கையில் நீர் ஏற்று

எல்லா உலகும் அளந்து கொண்ட எம் பெருமான் - எல்லா உலகங்களையும் கொண்ட எம்பெருமான்

நல்லார்கள் வாழும் நளிர் அரங்க நாகணையன் - நல்லவர்கள் வாழும் பெருமை மிக்க நாகத்தினை அணைத்த அரங்கன்

இல்லாதோம் கைப்பொருளும் எய்துவான் ஒத்து உளனே - இல்லாதவர்களிடம்  இருந்து அவர்களின் கைப்பொருள்களையும் கவருவான் போல இருக்கிறான்

பொல்லாச் சிறிய உருவாக தன் பொன்னான கையில் நீர் ஏற்று, எல்லா உலகங்களையும் கொண்ட எம்பெருமான், நலல்வர்கள் வாழும் பெருமை மிக்க நாடத்தினை அணைத்த அரங்கன்,இல்லாதவர்களிடம் இருந்து அவர்களின் கைப்பொருளையும் கவருவான் போல இருக்கிறான்

(மாவலியிடம் இருந்து சிறிய உருவில் உலகங்களை அபகரித்தவன், அதேபோல இல்லாத என்னிடம்  இருந்து, என் மனத்தை அபகரித்தான்.அவனையே எண்ணி எண்ணி மெலிந்த  என் வளையல்களை அபகரித்தான்.)

107- மச்சணி மாடமதிளரங்கர் வாமனனார்

மச்சணி மாட மதிளரங்கர் வாமனனார்
பச்சைப் பசுந்தேர் தாம்பண்டு நீரேற்ற
பிச்சைக் குறையாகி யென்னுடைய பெய்வளைமேல்
இச்சை யுடையரே லித்தெருவே போதாரே

மச்சு அணி மாட மதிள அரங்கர் வாமனனார்- மாடியும், அழகான மாடங்களும், மதில்களும் உடைய திருவரங்கம் உள்ள வாமனனார்

பச்சைப் பசுந்தேர்தாம்பண்டு நீர் ஏற்ற- பச்சை நிறத்தையுடையவர், தாம் முன்பு நீர் வார்த்து புவி பெற்ற போதிலும்

பிச்சைக் குறையாகி என்னுடைய பெய்வளைமேல்- பிச்சையில் என்ன குறை மிச்சம் இருந்ததோ என்னுடைய பெய்வளை மீது

இச்சையுடையரேல் இத்தெருவே போதாரே- ஆசை உள்ளவர் போல இத்தெருவிற்கு வருவாரோ!

அழகான மாடங்களும், மதில்களும் உள்ல திருவரங்கம் உள்ள வாமனனார், பச்சை நிறத்தவர்,தாம் முன்பு வாமன அவதாரம் எடுத்த போது,ஓங்கி உலகளந்த  போது நீர் பெற்று (மாவலியால் தாரைவார்க்கப்பட்டு) புவியைப் பெற்றார்.
அந்தப் பிச்சியிலும் இன்னமும் குறையிருக்கிறது போலும்.என்னுடைய பெய்வளைமீது ஆசைப்பட்டு இத்தெருவிற்கு வருவாரோ!

106 - பொங்கோதம் சூழ்ந்த புவனியும்

பொங்கோதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்
அங்காதுஞ் சோராமே யாள்கின்ற வெம்பெருமான்
செங்கோ லுடைய திருவரங்கச் செல்வனார்
எங்கோல் வளையா லிடர்தீர்வ ராகாதே

பொங்கு ஓதம் சூழ்ந்த புவனியும் விண்ணுலகும்- பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும், விண் உலகமும்

அங்கு யாதும்சோராமே ஆள்கின்ற எம்பெருமாள்- எந்தக் குறையுமின்றி, தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான்

செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார் - செங்கோல் உடைய  திருவரங்கச் செல்வனார்

எங்கோல் வளையால் இடர் தீர்வர் ஆகாதே - என் வளையாலா துன்பம் தீரப் பெறுவார்?  ஆகாதே!

பொங்கும் அலைகள் சூழ்ந்த நிலமும்,விண் உலகமும், எந்தக் குறையுமின்றி,தளர்வின்றி ஆள்கின்ற எம்பெருமான், செங்கோல் உடைய திருவரங்கச் செல்வனார், என் வளையாலா துன்பம் தீரப் பெறுவார்? அது முடியாதே

(அவர் நினைவால், இவளது உடல் மெலிந்ததாம்.வளையல்கள் கழண்டதாம்.)

105-எழிலுடைய வம்மனைமீர்

எழிலுடைய வம்மனைமீர் என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையைத் தாமும் கழல்வளையே யாக்கினாரே

எழிலுடைய அம்மனைமீர் என் அரங்கத்தின் இன் அமுதர் - அழகுமிக்க தாய்மார்களே! என் அரங்கத்தின் இனிமையான அமுதர்

குழல் அழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்- முடியழகர்,வாய் அழகர் கண்ணழகர் தொப்புளில்

எழுகமலப் பூவழகர் எம்மானார்- இருந்து எழுந்த தாமரைப்பூ கொண்ட அழகர் என் தலைவர்

என்னுடைய கழல்வளையைத் தாமும் கழல்வளையே ஆக்கினாரே!- என்னுடைய கழல்வளையைத் தாமும் என் கைகளில் இருந்து கழல்கின்ற வளையல் ஆக்கிவிட்டாரே!

(குழ்ந்தையை, கண்ணே, மூக்கே எனக் கொஞ்சுவது போல சொல்கிறாள்) என் அழகு தாய்மார்களே! என்னுடை திருவரங்க அமுதன், முடியழகர், வாய் அழகர், கண்ணழகர் , அவரது தொப்புளில் இருந்து எழுந்த தாமரைப்பூ கொண்ட அழகர்...என் தலைவர்(அவரை நினைத்து, நினைத்து வேதனையால்) என்னுடைய கழல்வளையை, கைகளிலிருந்து கழல்கின்ற வளை ஆக்கிவிட்டாரே (என புலம்புகிறாள்)

(கழல் வளை- ஒருவகை வளையல்) 

Monday, March 12, 2018

104- தாமுகக்கும் தம்கையில் சங்கமே..

(பதினோராம் திருமொழி ஆரம்பம்.இவை அணைத்தும் திருவரங்கனுக்கு அர்ப்பணம்)

தாமுகக்கும் தம்கையில் சங்கமே  போலாவோ
யாமுகக்கு மெங்கையில் சங்கமு மேந்திழையீர்
தீமுகத்து நாகணைமேல் சேரும் திருவரங்கர்
ஆமுகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே

தாமுகக்கும் தம்கையில் சங்கமே போலாவோ- தாம் விரும்பி தனது கையில் கொண்டுள்ள சங்குபோல் ஆகுமோ

யாம் முகக்கும் எம் கையில்சங்கமும் ஏந்திழையீர்- நான் விரும்பி என் கையில் அ ணிந்துள்ள  சங்குவளை?(சொல்லுங்கள் )சிறந்த அணிகலன் களை அணிந்துள்ள பெண்களே

தீ முகத்து நாகணை மேல் சேரும் திருவரங்கர்_ தீ கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைத்து அதன் மீது படுத்திருக்கும் திருவரங்கர்

ஆ முகத்தை நோக்காரால் அம்மனே அம்மனே-என் முகத்தைப் பார்க்க மாட்டாரா? (வேதனையுடன் அம்மாவை அழைக்கிறாள்) அம்மா..அம்மா

சிறந்த அணிகலங்களை அணிந்திருக்கும் பெண்களே! நான் விருமி என் கைகளில் அணிந்துள்ள சங்கு வலை, தீ கக்கும் முகம் கொண்ட நாகத்தினை அணைத்துப் படுத்திருக்கும் திருவரங்கர்< தானே விரும்பி தனது கையில் வைத்துள்ள சங்கு போல ஆகுமா> அவர் என் முகத்தைப் பார்க்க மாட்டாரா? (என வேதனையில், கவலையில்..சாதாரண மானிடர் போல )அம்மா...அம்மா..(என அம்மாவைத் துணைக்கிழுக்கிறாள்0

103- ந ல்ல என் தோழி

நல்ல என் தோழி நாகணைமிசை நம்பரர்
செல்வர் பெரியர் சிறுமா நிடவர்நாம் செய்வதென்
வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை
வல்லி பரிசு வருவிப்ப ரேலது  காண்டுமே

நல்ல என் தோழி நாக அணைமிசை நம்பரர்- நல்ல என் தோழி! நாகம் அணைத்து இருப்பவர் நம் பெருமான்.

செல்வர் பெரியர்.சிறுமானிடர் நாம் செய்வதென்=செல்வர், பெரியவர்.ந் நாமோ சிறு மானிடர்கள்.நம்மால் என்ன செய்ய முடியும்?

வில்லி புதுவை விட்டு சித்தர் தங்கள் தேவரை-வில்லிப்புத்தூர் விஷ்ணு சித்தர் பெரியாழ்வார் தங்கள் தேவரை

வல்லி பரிசு வருவிப்பரேல் அது காண்டுமே-தங்களால் முடிந்த அளவு வழிகளினால் அழைப்பாராகில்,அப்பொழுது நாமும் வந்து அவரைக் காணலாம்

நல்ல தோழி! நாகத்தை அணைத்து இருப்பவர் நம் பெருமான்.பெரியவர்.செல்வந்தர்.நாமோ சிரு மானிடர்.என்ன செய்வது? (நாம் கூப்பிட்டால் வரமாட்டார்).வில்லிபுத்தூர் விஷ்ணு சித்தர் எனும் பெரியாழ்வார் தங்கள் தேவரை, தங்கள் வல்லமைக்கு ஏற்ப அழைப்பாராகில் (அப்போது வரும் பெருமானை) நாமும் அவரைக் காணலாம்

(இவ்வளவு கூப்பிட்டும் திருமால் வராததால், சற்றே (பொய்க்) கோபத்துடன், நாம் சாதாரணர் .நாம் கூப்பிட்டால் வரமாட்டார்.பெரியவர் பெரியாழ்வார் கூப்பிடட்டும்,.அப்போது வருவாகில் பார்க்கலாம். என் கிறாள் சற்றே கோபத்துடன்)

இத்துடன் பத்தாம் பத்தி நிறைவு பெற்றது

102 - கடலே கடலே உன்னைக் கடைந்து

கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக்  கேசென்று ரைத்தியே

கடலே கடலே உன்னைக் கடந்து கலக்குறுத்து- கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்கி உறுத்தி உன்

உடலுள் புகுந்து நின்றூறல் அறுத்தவற்கு- உடலில் புகுந்து நின்று உன் செல்வமான அமுதத்தை அறுத்தவருக்கு

என்னையும் உடலுள் புகுந்து நின்றூறல் அறுக்கின்ற மாயற்கு- என்னையும் என் உடலில் புகுந்து நின்று என் உயிரை அறுக்கின்ற மாயனுக்கு

என் நடலைகளெல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே- என் கற்பனை வாழ்வும்,/துன்பங்கள் அனைத்தும் எல்லாம் நாகத்தை அணைத்தவனிடம் சென்று உரைப்பாயாக

கடலே! தேவர்களுக்காக உன்னைக் கடைந்து கலக்கி அழுத்தி,உன் உடலினுள் புகுந்து நின்று அமுதத்தை அறுத்தவர்க்கு,அதுபோலவே, என் உடலினும் புகுந்து,என் உயிரை அறுத்து அந்த மாயோனுக்கு என் துன்பங்களையெல்லாம் நாகத்தினை அணைத்தவனிடமே சென்று உரைப்பாயாக

(நடலை- ஒருவிதமான கற்பனையில் வாழ்வது)

101- மழையே மழையே மண்புறம்..

மழையே மழையே மண்புறம் பூசியுள் ளாய்நின்ற
மெழுகூற்றி னாற்போல் ஊற்றுநல் வேங்கடத்துள் நின்ற
அழகப் பிரானார் தம்மையென் நெஞ்சத் தகப்படத்
தழுவநின்று என்னைத் ததர்த்திக்கொண் டூற்றவும் வல்லையே

மழையே மழையே மண்புறம் பூசியுள்ளாய் நின்ற-மழையே மழையே வெளியே மண்பூசி உள்ளே நின்ற

 மெழுகூற்றினாற் போல் ஊற்று- மெழுகு ஊற்றியது போல ஊற்றி

நல் வேங்கடத்துள் நின்ற - நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற

அழகப் பிரானார் தம்மை என் நெஞ்சத் தகப்பட த் தழுவ நின்று-  அழகிய பிரான் தன்னை என் நெஞ்சத்திலே அவரை முழுவதும் ஆரத் தழுவ நின்று அணைக்கும்படி

என்னைததர்த்திக் கொண்டு ஊற்றவும் வல்லையே- என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு அவரை ஊற்றவும் வல்லாயோ

மழையே மழையே வெளியே மண்பூசி  உள்ளே நின்ற, மெழுகு ஊற்றியது போல ஊற்றி, நலம் செய்யும் வேங்கடத்தில் நின்ற, அழகிய பிரான் தன்னை என் நெஞ்சத்தில், ஆரத் தழுவி அணைக்கும்படி, என்னை அப்படியே நெருக்கிக் கொண்டு அவரை ஊற்றவும் வல்லாயோ (என் கிறாள்)

(மழைத்துளிகளிலால் மண் மெழுகு போல தோற்றமளிக்கும்.ஆண்டாள் தானே மெழுகாகி..அதை, பெருமாள் என்னும் உலோகத்தை. ஒரு சிறு இடைவெளி இன்றி, மெழுகு உடலில் எந்த இடைவெளியையும் விடாது நிரப்பி ஊற்றினால் அவனை ஆசைதீர கட்டி அணைப்பது போல அணைத்துக் கொள்வேன் என் கிறாள்.எவ்வளவு புத்திக்கூர்மை கோதைக்கு)

Sunday, March 11, 2018

97-முல்லை பிராட்டி

முல்லைப் பிராட்டி நீயுன்
முறுவல்கள் கொண்டு எம்மை
அல்லல் விளைவியே லாழிநங்க்
காய் உன்ன டைக்கலம்
கொல்லை யரக்கியை மூக்கரிந்
திட்ட குமரனார்
சொல்லும் பொய்யானால்
நானும் பிறந்தமை பொய்யன்றே

முல்லை பிராட்டி- முல்லை பிராட்டியே

நீயுன் முறுவல்கல் கொண்டு எம்மை அல்லல் விளைவியே- நீ உன் புன்முறுவல்கள் கொண்டு (எனக்கு) அல்லல் விளைவிக்காதே

ஆழி நங்காய் உன் அடைக்கலம்-சக்கரப் பொறி கொண்ட நங்கையே ! உன் (அவனையே) அடைக்கலம் என்றிருந்தேன்

கொல்லை அரக்கியை மூக்கரிந்திட்ட-அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட

குமரனார்- குமரனார்

சொல்லும் பொய்யானால்- சொல் பொய்யாகுமேயானால்

நான் பிறந்தமை பொய்யன்றே- நான் பிறந்தது பொய் என ஆகிவிடும்

(சூர்ப்பனகையின் மூக்கை அரிந்தது லட்சுமணன்.ஆனால் சொன்னது ராமன் என்ற எண்ணத்தால் அவரின் மீது பழிபோடுகிறாள்)

முல்லை மலரே! நீ உன் புன்முறு வலால் எனக்கு அல்லல் விளைவிக்கிராய்.சக்கரப்போரி கொண்ட நங்கையே! அடைக்கலம் என்றிருந்த என்னை, அரக்கி சூர்ப்பனகையின் மூக்கை அரிந்திட்ட குமாரனார் (வந்து சேராததால்) அவர் சொல் பொய்யாகுமேயாயின், நான் பிறந்ததும் பொய் என ஆகிவிடும்.

100- நடமாடித் தோகை விரிக்கின்ற

நடமாடித் தோகை விரிக்கின்ற
மாமயில் காள் உம்மை
நடமாட்டங்காணாப் பாவியேன்
நானோர் முதலிலேன்
குடமாடு கூத்தன் கோவிந்தன்
கோமிறை செய்துஎம்மை
உடைமாடு கொண்டானுங்களுக்
கினியொன்று போதுமே

நடமாடித் தோகை விரிக்கின்ற மாமயில்காள்- தோகைவிரித்து நடனம் ஆடும் பெருமயில்களே

உம்மை நடமாட்டம் காணாப்பாவியேன்-உங்கள் நடனமாட்டத்தைக் காணாத பாவியாகிவிட்டேன்

நானோர் முதல் இலேன்- நான் எந்த ஒரு உடமையும் இல்லாதவள் ஆகிவிட்டேன்

குடமாடு கூத்தன் கோவிந்தன் கோம் இறை செய்து-குடம் கொண்டு ஆடியஅரசனான  கோவிந்தன் வல்லடியாககவர்ந்து

எம்மை உடைமாடு கொண்டான்-என் உடமைகளை தன் உடமைகள் ஆக்கிக் கொண்டான்

உங்களுக்கு இனி ஒன்று போதுமே-உங்கள் ஆட்டத்தை நிறுத்த இந்த ஒரு காரணம் போதுமே

(வல்லடியாக-வலிய பெற்றுக் கொள்ளுதல்)

தோகைவிரித்து அழகாக நடனம் ஆடிடும் பெருமயில்களே, உங்கள் ஆட்டத்தைக் காணமுடியா பாவியாகி விட்டேன்.(கண்ணன் வராத சோகத்தில் உள்ளேன்).கோவிந்தன் வலிய வந்து என்னிடமிருந்த உடமைகளை தன் உடமைகள் ஆக்கிக் கொண்டு விட்டான்.( எனது எல்லாம் அவனுடையது ஆகிவிட்டது.என் நிலை உங்களுக்குப் புரிந்ததா).உங்கள் ஆட்டத்தை நிறுத்தச் சொல்ல எனது இந்த ஒரு காரணம் போதாதா!

99- கணமா மயில்காள்

கணமா மயில்காள் கண்ணபி
ராந்திருக் கோலம் போன்று
அணிமா நடம்பயின் றாடுகின்
றீர்க்கடி வீழ்கின்றேன்
பணமா டரவணைப் பற்பல
காலமும் பள்ளிகொள்
மணவாளர் நம்மை வைத்த
பரிசிது காண்மினே

கணமா மயில்காள் கண்ணபிரான் திருக்கோலம் போன்று- திரண்டு இருக்கும் பெரும் மயில்களே!கண்னபிரான் திருக்கோலம் போன்று இருக்கறீர்கள்
(கண்ணனின் நிறம் நீலம்.மயில்களும் நீல நிறம்)

அணிமா நடம் பயின்றாடுகின்றீர் அடி வீழ்கின்றேன்- அழகாக நடனம் ஆடுகின்ற (உங்கள்) பாதங்களில் வீழ்கின்றேன்

பணமாடு அரவணைப் பற்பல காலமும் பள்ளிகொள் மணவாளர்- படம் எடுத்து ஆடும் பாம்பினைப் பலகாலமாக படுக்கையாக்கித் தூங்கும் என் மணவாளன்

நம்மை வைத்த பரிசு இது காண்மினே-எனக்குக் கொடுத்த வாழ்வு (உங்கள் பாதத்தில் வீழ்ந்ததுதான்)இதுதான் பார்த்து கொள்ளுங்கள்

கூட்டமாய் உலவும் மயில்களே! நீங்கள் கண்ணபிரான் நிறத்தில் உள்ளீர்கள்.நான் அவனை மறந்து இங்கே வந்தால், நீங்கள் அவனை ஞாபகப்படுத்துகிறீர்கள்.என் மனம் உங்களுக்குப் புரியவில்லை.நீங்கள் ஆடும் நடனத்தை நிறு  த்து ங்கள் என உங்கள்  பாதங்களில் விழுகின்றேன்.படம் எடுத்து ஆடும் பாம்பினில் சயனம் கொண்டுள்ள என் மணவாளர் என்னை எப்படியெல்லாம் வாட்டுகிறார் பாருங்கள்.அவர் எனக்கு துன்பத்தையே பரிசாகக் கொடுத்துவருகிறார்.உங்கள் பாதங்களில் விழ வைத்துவிட்டார்.அவரையே எண்ணியுள்ள எனக்கு இது நல்ல பரிசு.

98- பாடும் குயில்காள் ஈதென்ன

பாடும் குயில்காள் ஈதென்ன
பாடல்நல் வேங்கட
நாடார் நமக்கொரு வாழ்வுதந்
தால்வந்து பாடுமின்
ஆடும் கருளக் கொடியுடை
யார்வந் தருள்செய்து
கூடுவ ராயிடில்  கூவிநும்
பாட்டுகள் கேட்டுமே

(குயில்காள் பாட்டு இசைக்கின்றனவாம்.அது இவளுக்கு வேதனையைத் த்ருகிறதாம்)

பாடும் குயில்காள் இதுஎன்ன பாடல்- பாடும் குயில்களே இது என்ன பாடல்(எனக்கு வேண்டாம்)

நல் வேங்கட நாடார் நமக்கு ஒரு வாழ்வு தந்தால் பாடுமின்- நல்ல எனக்கு நன்மை செய்யக் கூடிய திருவேங்கட நாட்டினையுடையவன், எனக்கு ஒரு வாழ்வு தந்த பிறகு வந்து பாடுங்கள்

ஆடும் கருளக் கொடி உடையார் வந்து அருள் செய்து-  பறந்திடும் கருடக் கொடியை உடையவன் வந்து எமக்கு அருள் செய்து

கூடுவராயிடில் கூவி நும் பாட்டுகள் கேட்டுமே- கூடுவாராயின், உன்னைக் குவி அழைக்கிறேன் வந்து பாடு.கேட்கிறேன்

பாடும் குயிலே! இது என்ன இப்போது பாடல்.எனக்கு வேண்டாம்.கருடனின் கொடியைக் கொண்டவன்அருள் செய்து , திருவேங்கட நாட்டினன் (திருமால்) வந்து எனக்கு வாழ்வினைத் தந்தபின் , உன்னை அழைக்கின்றேன்..வந்து பாடு.அப்போது கேட்கிறேன் என் கிறாள்.


96- கோவை மணாட்டி

கோவை மணாட்டி! நீயுன்
கொழுங்கனி கொண்டு எம்மை
ஆவி தொலைவியேல் வாயழ
கர்தம்மை யஞ்சுதும்
பாவி யேந்தோன்றிப் பாம்பணை
யார்க்கும்தம் பாம்புபோல்
நாவு மிரண்டுள வாய்த்து
நாணிலி யேனுக்கே

கோவை மணாட்டி நீயுன் கொழுங்கனி கொண்டு- கோவை மணாட்டியே!நீ உன் சிவந்த கொழுங்கனிகளைக் கொண்டு

எம்மை ஆவி தொலைவியேல் -என் ஆவியைத் தொலைக்காதே

வாய் அழகர் தம்மை அஞ்சுதும் பாவியேன் தோன்றி-வாய் அழகானவரின் சிவந்த அதரங்களை நினைவூட்டுகின்றன.பாவியாகிய நான் பிறந்து

பாம்பணையார்க்கும் தம் பாம்பு போல்-பாம்பினைப் படுக்கையாகக் கொண்டவனுக்குதனது பாம்பினைப் போல

நாவும் இரண்டு உள  வாய்த்து-இரட்டை நாக்கு வாய்த்துவிட்டது போல

நாணிலி யேனுக்கே- ஆனாலும் இன்னமும் அவனையே நினைத்துக் கொண்டு வெட்கமற்றுப் போனேனே!

கோவைக்கொடியே! நீ உன் சிவந்த திரண்ட கனிகளைக் கொண்டு என் உயிரை வாங்காதே!அவை,வாய் அழகரின் சிவந்த அதரங்களைப் போலத் தோன்றி அச்சுறுத்துகின்றன.
நான் அவனை சேரமுடியாத பாவியாகிப் பிறந்தேன்.பாம்பினைப் படுக்கையாகிக் கொண்டவனுக்கு, அந்தப் பாம்பினைப் போல இரட்டை நாக்குப் போல.(என்னை சேருவதாய் சொல்லிவிட்டு, இதுவரை மௌனம் ஏன்).நான் மட்டும் இன்னமும் அவனையே நினைத்துக் கொண்டு வெட்கமற்றுப் போனேனே!

95-மாற்றோன்றிப் பூக்காள்

மேற்றோன்றிப் பூக்காள் மேலுல
கங்களின் மீதுபோய்
மேற்றோன்றும் சோதி வேத
முதல்வர் வலங்கையில்
மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர்
போலச் சுடாது எம்மை
மாற்றோலைப் பட்டவர் கூட்டத்து
வைத்துக்கொள்கிற்றிரே

மேற்றோன்றிப் பூக்காள்- மரத்திலே பூத்திருக்கும் மருதாணிப் பூக்களே

மேலுலகங்களின் மீது போய்-மேல் உலகங்களில் கடந்து சென்று

மேற்றோன்றும் சோதி வேத முதல்வர் வலங்கையில்- அதற்கும் மேலாகத் தோன்றும் ஒளி வடிவமான  வேதங்களின் முதல்வன் வலக்கையின்

மேற்றோன்று மாழியின் வெஞ்சுடர் போலச் சுடாது-மீது இருக்கும் சக்கரத்தின் கோபச் சுடர் போல என்னைச் சுடாமல்

எம்மை மாற்றோலைப் பட்டவர் - என்னை அவனுக்கு மாற்றோலை எழுதி

கூட்டத்து வைத்துக் கொள்கிற்றிரே- என் தலைவனின் கூட்டத்துடன் என்னை வைத்துவிடுகிறீர்களா

(இம்முறை மருதாணிப் பூக்களிடம் பேசுகிறாள்)
மருதாணி மரத்தின் மீது பூத்திருக்கும் மருதாணி பூக்களே! நீங்கள் அப்படியே பறந்து போய் மேல் உலகத்திற்குப் போய் அவற்றையும் கடந்து அதற்கும் மேலாக உள்ள வைகுண்டத்தில் உறைந்துள்ள ஒளி வடிவமானவேதங்களின் முதல்வனின் வலக்கையில் உள்ள (தீயவர்களை அழிக்கும்)
சக்கரத்தின் வெஞ்சுடர் போல சுடாது, என்னை அவனுக்கே சொந்தம் என மாற்றோலை எழுதி, என் தலைவனின் கூட்டத்தில் என்னை வைத்துவிடுகிறீர்களா?

Saturday, March 10, 2018

94- கார்க்கோடல் பூக்காள்

(பத்தாம் பத்து ஆரம்பம்.பூவை இந்தப் பாடல்களில் பூக்களிடம் நியாயம் கேட்கிறாள்)..

கார்க்கோடல் பூக்காள்!.
கார்க்கடல் வண்ணனென் மேலும்மைப்
போர்க்கோலம் செய்து போர்
விடுத்தவனெங்குற்றான்
ஆர்க்கோ இனிநாம் பூசலிடுவது
அணிதுழாய்த் தார்கோடும் நெஞ்சந்
தன்னைப் படைகவல் லேனந்தோ

கார்க்கோடல் பூக்காள்-கருங்காந்தள் பூக்களே

கார்க்கடல் வண்ணனென் மேல் உம்மை-கருமையானக் க டலின் வண்ணன் என்மேல் உங்களை

போர்க்கோலம் செய்து போர் விடுவித்தவன் எங்குற்றான்-போர்க்கோலம் செய்து ஏவியன் எங்கு சென்றான்

ஆர்க்கோ இனி நாம் பூசலிடுவது-இனி நாம் வழக்காடுவது முறையோ

அணித் துழாய்த் தார்க்கு ஓடும்- அழகிய துளசி மாலைக்கு ஓடும்

நெஞ்சம் தன்னை படைக்க வல்லேன் அந்தோ=என் நெஞ்சத்தை தடுக்க முடியாதவள் ஆகிப்போனேன்...அந்தோ
(அந்தோ...பரிதாபம் என் கிறோம் அல்லவா?அது போல தன் மீது தானே இரக்கம் கொள்கிறாளாம்)

கருங்காந்தல் பூக்களே!கருமையானக் கடலின் வண்ணன் என் மேல் உங்களை போர்க்கோலம் செய்து ஏவியவன் எங்கு போனான். இனி நாம் சண்டைடிய்யுக் கொள்வது முறையல்ல.
அழகிய துளசி மாலை (அணிந்தவனை) நோக்கி ஓடும், என் நெஞ்சத்தைத் தடுக்க முடியாதவள் ஆகிப் போனேன்.அந்தோ (பாவம் அல்லவா நான்?)

93- சந்தொடு காரகிலும் சுமந்து வண்டுக

சந்தோடு காரகிலும் சுமந்து தடங்கள்பொருது.
வந்திழி யும்சிலம்பா றுடைமாலிருஞ் சோலைநின்ற
சுந்தரனை கரும்பார் குழல்கோதை தொகுத்துரைத்த
செந்தமிழ் பத்தும்வல்லார் திருமாலடி சேர்வர்களே

சந்தொடு காரகிலும் சுமந்து தடங்கள் பொருது-சந்தன மரங்களோடு காரகில் மரங்களும் சுமந்து

வந்தழியும் சிலம்பாரு உடை மாலிருஞ்சோலை நின்ற- வந்து, வழிகளை அழித்துக் கொண்டு பாயும் சிலம்பாறு உடைய, மால் இருஞ்சோலை நின்ற

சுந்தரனை கரும்பு ஆர் குழல் கோதை தொகுத்துரைத்த-சுந்தரப் பெருமானை வண்டுகள் ஆர்க்கும் மலர்களை சூடிய கூந்தலையுடைய கோதை தொகுத்து உரைத்த

செந்தமிழ் பத்தும் வல்லார் திருமால் அடி சேர்வர்களே-செந்தமிழ்ப் பாடல்கள் பத்தும் பாட வல்லவர்கள் ., திருமாலின் பாதங்களை அடைவர்

சந்தன மரங்களோடு, கார்கில் மரங்களும் சுமந்து ஒடி, வழிகளை அழித்து பாயும் சிலம்பாறு உடைய திருமாலிருஞ்சோலையில் நின்ற சுந்தரப் பெருமானை, வண்டுகள் சுற்றிக் கோண்டிருக்கும் மலர்களை சூடிய  கூந்தலையுடைய கோதை பாடிய இப்பத்து பாடல்களையும் பாட வல்லவர்கள் . திருமாலின் பாதக்கமலத்தை அடைவர்

(ஒன்பதாம் பத்து இத்துடன் முடிவுற்றது)

Friday, March 9, 2018

92- கோங்கல ரும் பொழில்மா லிருஞ்சோலை

கோங்கலரும் பொழில்மா லிருஞ்சோலையில் கொன்றைகள்மேல்
தூங்குபொன் மாலைகளோ டுடனாய்நின்று தூங்குகின்றேன்
பூங்கொள் திருமுகத்து மடுத்தூதிய சங்கொலியும் சாரங்கவில்
நாணொலியும் தலைப்பெய்வதெஞ் ஞான்று கொலோ

கோங்கலரும் பொழில்மாலிருஞ்சோலையில்- கொன்றை மரங்களின் பூக்கள் மலரும் திருமால் இருக்கும் சோலையில்

கொன்றைகள்மேல் தூங்கும் பொன் மலைகளோடு உடனாய் தூங்குகின்றேன்-கொன்றை மரங்களின் மேல் தூங்கும் பொன் நிறத்தை ஒத்த மஞ்சள்நிற மாலைகளோடு சேர்ந்து நின்று நானும் உற்ங்குகின்றேன்

பூங்கொள் திருமுகத்து மடுத்துஊதிய சங்கொலியும் சாரங்கவில்-பூவினைப் போன்ற மலர்ந்த திருமுகத்தில் உள்ள பவள வாயில் ஊதிய சங்கு ஒலியும், சாரங்க வில்லின்

நாண் ஒலியும் தலைப்பு எய்வதேஞ்ஞான்று கொலோ-நாண் ஒலியும் நான் கேட்பது எந்நாளோ?

கொன்றை மரங்களின் பூக்கள் மலரும் திருமால் இருக்கும் சோலையில், கொன்றை மரங்களின் மேல் தூங்கும் பொன் நிறத்தை ஒத்த மஞ்சள் நிற மாலைகளோடு சேர்ந்து நின்று நானும் உறங்குகின்றேன்.புவினைப் போன்ற மலர்ந்த திருமுகத்தில் உள்ள பவள வாயில் ஊதிய சங்கும், சாரங்க வில்லின் ஒலியும் நான் கேட்பது எந்நாளோ?(சங்கொலியும், நாணொலியும் கேட்டால் அவன் வருவதாகப் பொருள்.அவன் வரவு எந்ந்ளோ?என் கீராள் கோதை 

91- காலை யெழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள்

காலை யெழுந்திருந்து கரியகுருவிக் கணங்கள்
மாலின்  வரவுசொல்லி மருள்பாடுதல் மெய்ம்மைகொலோ
சோலை மலைப்பெருமான் துவராபதி யெம்பெருமான்
ஆலி னிலைப்பெருமான் அவன் வார்த்தை யுரைக்கின்றதே

காலை எழுந்திருந்து கரிய குருவிக் கணங்கள்-காலை எழுந்திருந்து கரிச்சான் குஞ்சுக் குருவிக் கூட்டங்கள்

மாலின்  வரவுசொல்லி மருள் பாடுதல் மெய்ம்மைகொலோ-திருமால் வருவார் எனச் சொல்லி மயங்கிப்பாடுதல் உண்மையாக நடந்து விடுமோ

சோலை மலையப்பெருமான் துவராபதி எம் பெருமான்-திருமாலிருஞ்சோலை அழகர்மலைப் பெருமான்,துவாரகை எம் பெருமான்

ஆலிநிலைப் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதே-ஆல் இலையில் துயில் கொள்ளும் பெருமான் அவன் வார்த்தை உரைக்கின்றதெ

கரிச்சான் குஞ்சுக் குருவிக் கூட்டங்கள் எல்லாம் திருமால் வருவார் என்று சொல்லி மயங்கிப் பாடுகின்றனவே அவை உண்மையாக நடந்துவிடுமா?
திருமாலிருஞ்சோலை மலைப் பெருமான், துவாரகையின் பெருமான் ஆல் இலையில் கண் வளரும் பெருமாள், அவன் வருவான் என்று அவனது செய்தியை சொல்கின்றனவே!
(இது நடக்குமா..அது நடக்குமா..என்றெல்லாம் கேட்பதன் மூலம் டஹ்ன் வேதனையைத் தெரிவிக்கிறாள்)

90-இன்றுவந் தித்த்னையும்


இன்றுவந் தித்தனையும் அமுதுசெய் திடப்பெறில்நான்
ஒன்றுநூ றாயிரமாக் கொடுத்தப் பின்னும் ஆளும்செய்வன்
தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள் நின்ற பிரானடியேன் மனத்தே வந்து நேர்படிலே

இன்று வந்து இத்தனையும் அமுது செய்திடப் பெறில் -இன்று வந்து இத்தனையும் சாப்பிட்டுவிட்டால்

நான் ஒன்று நூறாயிரமாக் கொடுத்தப் பின்னும் ஆளும் செய்வன்- நான் ஒன்றுக்கு நூறாயிரமாகக் கொடுத்து பின்னும் அவனை ஆட்செய்வேன்

தென்றல் மணங்கமழும் திருமாலிருஞ்சோலை தன்னுள்- தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னிலே

நின்ற பிரான் அடியேன் மனத்தே வந்து நேர்படிலே- நின்ற பிரான் அடியவளாகிய எனது மனதிலே வந்து நின்றாய்

(சென்ற பாடலில் சொன்னவற்றை) இன்று வந்து இத்தனையையும் சாப்பிட்டுவிட்டால்,நான் ஒன்றுக்கு நூறாயிரமாகக் கொடுத்து(இன்னமும் செய்வேன்) பின்னும் ஆட்செய்வேன்.தென்றல் மணம் கமழும் திருமாலிருஞ்சோலை தன்னிலே நின்ற பிரான், அடியவளாகிய என் மனதிலே வந்து நின்றாய்

89- நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை ந்ம்பிக்கு


நாறுநறும் பொழில்மா லிருஞ்சோலை நம்பிக்கு நான்
நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவிவைத்தேன்
நூறுதடா நிறைந்த அக்கார வடிசல் சொன்னேன்
ஏறுதிருவுடையான் இன்றுவந்திவை கொள்ளுங்கொலோ

நாறுநறும் பொழில் மாலிருஞ்சோலை நம்பிக்கு- நல்ல மணம் வீசும் சோலை கொண்ட திருமால் இருக்கும் சோலை நம்பிக்கு

நான் நூறுதடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்-நான் நூறு பானையில் வெண்ணெய் என் வாயால் நேர்ந்து கொண்டு நேர்த்திக்கடன் வைத்தேன்

நூறுதடா நிறைந்த அக்காரவடிசல் சொன்னேன்- நூறு பானை நிறைய அக்காரவடிசல் சொன்னேன்

ஏறுதிருவுடையான் இன்று வந்து இவை கொள்ளுங்கலோ-குறையாத செல்வங்களைக் கொண்டவன், இன்று வந்து இவற்றை ஏற்றுக்கொள்வானாக


நல்ல மணம் வீசும் சோலை கொண்ட திருமால் இருக்கும் சோலை நம்பிக்கு, நூறு சிறியபானையில் வெண்ணெயை உருக்கி அதில் நெய் செய்து, நேர்த்திக்கடன் செலுத்தி வழிபட்டேன்.நூறு பானை அக்காரவடிசல் படத்தெங்குறையாத செல்வங்களைக் கொண்ட திருமால் , இன்றுவந்தௌ அவற்றை ஏற்றுக்கொள்வானாக

88 - துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை

துங்க மலர்ப்பொழில்சூழ் திருமாலிருஞ் சோலைநின்ற
செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்
தொங்கிய வண்டினங்காள் தொகுபூஞ்சுசுனை காள்சுனையில்
தங்குசெந் தாமரைகாள் எனக்கோர் சரண் சாற்றுமினே

துங்க மலர்ப் பொழில் சூழ் திருமாலிருஞ்சோலை நின்ற-துங்க மலர்ச்சோலை சூழ்ந்த திருமாலிருஞ்சோலையில் நின்ற

செங்கட் கருமுகிலின் திருவுருப் போல்மலர்மேல்-செம்மையான கண்களும்,மழை பொழியும் மேகத்தின் கருமை நிறம் கொண்ட கண்ணனின் திருவுருவத்தைப் போல மலர்மேல்

தொங்கிய வண்டினங்காள் தொகு பூஞ்சுனைகாள் -தொங்கிய வண்டினங்களே!அங்கே மொத்தமாய் கூடியிருக்கும் பூஞ்சுனைகளே

சுனையில் தங்கு செந்தாமரைகாள் எனக்கோற் சரண் சாற்றுமினே-பூஞ்சுனையில் வாழும் செந்தாமரைகளே!அவன் நிறம் கொண்டு அவன் திருவுருவத்தை நினைவூட்டி விட்டுவிட்டீர்கள்(இப்போது)நான் அடைக்கலம் புக வழி சொல்லுங்கள்

கொன்றைமலர்ச் சோலை சூழ்ந்த திருமாலிருஞ்சோலை நின்ற, செம்மையான கண்களும்,மழை பொழியும் மேகத்தின் கருமை நிறம் கொண்ட கண்ணனின் திரு உருவத்தைப் போல உள்ள மலர் மேல் தொங்கிய வண்டினங்களே!அங்கு மொத்தமாய்க் கூடியிருக்கும் பூஞ்சுனைகளே! பூஞ்சுனையில் பூத்துள்ள செந்தாமரைகளே!
நீங்கள் யாவரும் அவன் நிறம் கொண்டு, அவனை நினைவூட்டிவிட்டீர்கள்.அவனை அடைக்கலம் புக எனக்கெ எனக்கென ஒரு சரண் என்னவென சொல்லுங்கள்

Thursday, March 8, 2018

87- பைம்பொழில் வாழ் குயில்காள்

பைம்பொழில் வாழ்குயில்காள் மயில்காள் ஒண் கருவிலைகாள்
வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்
ஐம்பெரும் பாதகர்காள் அணிமாலிருஞ் சோலைநின்ற
எம்பெரு மானுடைய நிறமுங்களுக் கெஞ்செய்வதே

பைம்பொழில் வாழ் குயில்காள் மயில்காள் ஒண் கருவிளைகாள்- பசுமையான சோலையில் வாழும் குயிலினங்களே!மயில்களே!அழகிய கருவிளை மலர்களே!

வம்பக் களங்கனிகாள் வண்ணப்பூவை நறுமலர்காள்-வாசனை மிகுந்த களங்கனிகளே! அழகிய வண்ணம் கொண்ட நஹ்றுமலர்களே!

ஐம்பெரும் பாதகர்காள் அணி மாலிருஞ் சோலை நின்ற-ஐம்பெரும் பாதகர்களே திருமாலிருஞ்சோலை நின்ற

எம்பெருமான் உடைய உங்களுக்கு எஞ்செய்வதே- எம்பெருமானின் நிறம் உங்களுக்கு ஏன்? (உங்களைப் பார்த்து பார்த்து, அவனை எண்ணி) என்னை வதைப்பதற்கா?


பசுமைமிக்க சோலையில் வாழும் குயில்களே,மயில்களே,அழகிய கருவிள (சங்குப்பூ) மலர்களே!வாசனை மிக்க களாம் பழங்களே! வண்ணம் கொண்ட நறுமணம் மிக்க காயமலர்களே! ஐம்பெரும் பாதகர்களே(மேற்கண்ட ஐந்தும் பாதகர்களாம்)உங்களுக்கு எதுக்கு எம்பெருமானின் நிறம்? அப்படியிருந்து கொண்டு என்னை, எல்லாவற்றிலும் அவரது நினைவையூட்டி வதைப்பதற்கா? (என் கிறாள்)


86- கருவிளை யொண்மலர்கான் காயாமலர் காள்திருமால்

கருவிளை யொண்மலர்காள்  காயாமலர் காள்திருமால்
உருவொளி காட்டுகின்றீர் எனக்குய்வழக் கொன்றுரைப்பீர்
திருவிளை யாடுதிண்டோள் திருமாலிருஞ் சோலைநம்பி
வரிவளை யில்புகுந்து வந்தி பற்றும் வழக்குளதே

கருவிளை ஒண் மலர்காள் காயாமலர்காள்-அழகிய கருவிளை மலர்களே! காயம் பூக்களே

திருமால் உருவொளி காட்டுகின்றீர் எனக்கு உய்ய வழக்கு ஒன்று உரைப்பீர்- என் திருமாலின் உருவத்தை நினைவூட்டுகின்றீர்கள்.அவர் மீது வழக்கொன்று உள்ளது.தீர்ப்பு சொல்லுங்கள்

திரு விளையாடு திண்தோள் திருமாலிருஞ்சோலை நம்பி- திருமகள் விளையாடும் திடம் மிக்க தோள்கொண்ட திருமாலிருஞ்சோலை நம்பி

வரிவளை இல் புகுந்து வந்தி பற்றும் வழக்கு உளதே-என் வீட்டிற்குள் புகுந்து என் வளையல்களைப் பலவந்தமாகத் திருடிய கள்வன் அவன்.அந்த வழக்கிற்கும் தீர்ப்பு சொல்லுங்கள்

(கருவிளை மலர்- சங்குப் பூ)

அழகிய சங்கு புஷ்பங்களே!காயாம் பூக்களே(இவை பூக்குமேயன்றி காய்க்காது.இவை திருமாலுக்கு மட்டுமே உரியது) என பூக்களிடம் நியாயம் கேட்கின்றாள்.(தன்னைச் சேராமல் திருமகளோடு உள்ளார் என ஒரு வழக்கு.அடுத்து) அவன் வீட்டிற்குள் வந்து பலவந்தமாக என் வளையல்களைக் களவாடிச் சென்றுள்ளான் என்று வழக்கு.பூக்களே! தீர்ப்பு சொல்லுங்கள் என் கிறாள்

(அவரை நினைத்து, நினைத்து மெலிந்ததால், வளையல்கள் கழண்டு விழுந்ததாம்) 

85- போர்களி றுபொரும்மா லிருஞ்சோலையம் பூம்புறவில்

போர்களிறு பொரும்மா லிருஞ்சோலை பூம்புறவில்
தார்க்கொடி  முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற
கார்க்கொள், படாக்கள்நின்று கழறிச்சிரிக் கத்திரியேன்
ஆர்க்கிடு கோதோழி அவந்தார்ச்செய்த பூசலையே

போர் களிறு பொரும் மால் இருஞ்சோலையும் பூம்புறவில்-போர் புரியும் தொழிலைக் கொண்ட யானைகள்
 இருக்கும்(திரு)மால் இருஞ்சோலை மலைச்சரிவுகளில்

தார்க்கொடி முல்லைகளும் தவளநகை காட்டுகின்ற- வரிசையாக உள்ள முல்லை அரும்புகள், அழகரின் வெண்மையான சிரிப்பைக் காட்டுகின்றன

கார்க்கொள், படாக்கள் நின்று கழறிச் சிரிக்கத் திரியேன்-அரும்புகள் கொண்ட படலம் கொடிகள் பூத்து நின்று இடித்துரைத்து சிரிக்கின்றன.இதை பொறுக்கமுடியவில்லை

ஆர்க்கிடு கோதோழி அவந்தார்ச் செய்த பூசலையே-அவன் தோள் மாலை என்னை எள்ளியதால், எனக்கும் அவற்றிற்கும் யார் அழகரின் தோள் சேர்வது என்ற உண்மையை நான் யாரிடம் சென்று முறையிடுவேன் தோழி

(புறவு- மலையும், காடும் சேரும் இடம்)

போர்புரியும் யானைகள் இருக்கும் திருமாலிருஞ்சோலையில், வாசனை கொண்ட முல்லைகளும், அரும்புகள் கொண்ட புடலம் பூக்களும் மாலையாகி, அவன் தோளை அலங்கரிக்கின்றன.அந்த முல்லை அரும்புகள் அழகரின் வெண்மையான சிரிப்பைக் காட்டுகின்றன.அந்தப் பிடவம் பூ மாலையோ, அழகரின் தோளை அலங்கரிக்கிறேன் என் கிறது..இந்தக் கோதை இருக்க வேண்டிய இடத்தில் இம்மலர்கள் அலங்கரிக்கின்றன.அவை என்னை இகழ்கின்றன.அதனால் நான் அவற்றுடன் சண்டையிடுகிறேன்...இதையெல்லாம் யாரிடம் சென்று முறையிடுவேன் தோழி. 

84- சிந்தூரச் செம்பொடியைப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்

(ஒன்பதாம் பத்து ஆரம்பம்,இந்தப் பாடல்களும் ஆண்டாள்..அழகருக்குவ் சமர்ப்பணம் செய்தவை.திருமால் இரும் சோலை என்பதே அழகர்மலையானது.அங்கிருக்கும் பூக்களிடம் பிதற்றுகிறாள் கோதை)

சிந்தூரச் செம்பொடியைப்போல் திருமாலிருஞ்சோலையெங்கும்
இந்திர கோபங்களே எழுந்தும்பரந் திட்டனவால்
மந்திரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட
சுந்திரத் தோளுடையான் கழலையினின் றுய்துங்க்கொலோ

சிந்தூரச் செம்பொடியைப் போல் திருமாலிருஞ்சோலையெங்கும்- பற்பல வண்ணங்கள் கொண்ட செம்மையான நுண்பொடி போல திருமால் இருக்கும் சோலையெங்கும்

இந்திர கோபங்களே எழுந்தும் பரந்திட்டனவால்-பல வண்ணங்கள் கொண்ட வண்ணத்துப் பூச்சிகளானவை மேலெழும்பியும். பறந்தும் சோலைக்கு வண்ணங்கள் இட்டன

மந்திரம் நாட்டியன்று மதுரக்கொழுஞ் சாறுகொண்ட- மந்திரமலையைக் கடந்து அமிழ்தம் பெற்ற பிறகு தோன்றிய,அமிழ்தம் போன்ற திருமகளை உண்டவன்

சுந்தரத்  தோளுடையான் கழலையின்று உய் துங்கொலோ- அழகிய தோளையுடையவன் காதல் என்னும் வலையில் சிக்கிக்கொண்ட நான் இதிலிருந்து எப்படி மீள்வேன்..

பற்பல வண்ணங்கள் கொண்ட வண்ணத்துப் பூச்சிகள், மலை மீது எழுந்தும், பரவியும் தன் வண்ணங்களை மலைக்கு இட்ட திருமாலிருஞ்சோலையில்.மந்திரமலையைக் குடைந்த பிறகு தோன்றிய வள் திருமகள்.அந்த அழகான பிரா ட்டியைக் கொண்டவன், அழகிய தோள்களைஉடையவன், அவன் மீது காதல் எனும் வலையில் சிக்கிக் கொண்டுள்ள நான் எப்படி மீள்வேன்

Wednesday, March 7, 2018

83- நாகத்தினணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்

நாகத்தின ணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்
மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்
போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்
ஆகத்து வைத்துரைப்பார் அவரடியா ராகுவரே

நாகத்தினைணையானை நன்னுதலாள் நயந்துரைசெய்- நாகத்தினை படுக்கையாக்கிப் படுத்தவனை, அழகிய நெற்றியை உடைய பெண் நயந்து உரை செய்த

மேகத்தை வேங்கடக்கோன் விடுதூதில் விண்ணப்பம்- திருவேங்கட அரசனுக்கு மேகத்தைத் தூதுவிட்டு விண்ணப்பம் செய்த

போகத்தில் வழுவாத புதுவையர்கோன் கோதைதமிழ்-ஒழுக்கத்தில் தவறாத வில்லிபுத்தூர் தலைவன் பெரியாழ்வார் மகள் கோதை தமிழ்ப் பாடல்களை

ஆகத்து வைத்துரைப்பார் அவரடியார் ஆகுவரே-தங்கள் மனதிலே வைத்து உரைப்பவர்கள் பெருமாளின் அடியவர்கள் ஆவார்கள்

நாகத்தை அணைத்துக் கிடப்பவனே, அழகிய நெற்றியை உடையப் பெண் நயந்து உரை செய்த,மேகத்தை விட்டு, வேங்கட அரசனுக்கு தூது விட்டு விண்ணப்பம் செய்தவளுமான, வழுவாத நெறியையுடைய, வில்லிப்புத்தூர் தலைவர் பெரியாழ்வாரின் மகள் கோதை சொன்ன இந்தப்பத்துப் பாடல்களை மனதில் வைத்து உரைப்பவர்கள் பெருமாளின் அடியவர்கள் ஆவர்

(மேகம் விடு தூது எட்டாம் பத்து இத்துடன் முடிவடைந்தது)

82- மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தை

மதயானை போலெழுந்த மாமுகில்காள் வேங்கடத்தைப்
பதியாக வாழ்வீர்காள் பாம்பனையான் வார்த்தையென்னே
கதியென்றும் தானாவான் கருதாது ஓர்பெண்கொடியை
வதைசெய்தான் என்னும் சொல் வையகத்தார் மதியாரே

மதயானை போலெழுந்தமாமுகில்காள்- மதம் கொண்ட யானையைப் போல கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே

வேங்கடத்தைப் பதியாக வாழ்வீர்காள் பாம்பனையான் வார்த்தையென்னே-வேங்கடத்தை உறவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே...பாம்பின் மீது படுத்து இருப்பவன் வார்த்தைதான் என்ன? (அவன் என்னதான் சொல்கிறான்)

கதியென்றும் தானாவான் கருதாது ஓர்பெண்கொடியை- அனைவருக்கும் புகலிடம் அவந்தான் என எண்ணாது, இங்கு ஒரு பெண்கொடியை (அவளைச் சென்று சேராமல்) வதை செய்தான் என்னும் கெட்டப்பெயர் அவனுக்கு உண்டானால் வையகம் அவரை மதியாது


மதம் கொண்ட யானையைப் போல கிளர்ந்து எழுந்த மேகங்களே! வேங்கடத்தை உறைவிடமாகக் கொண்டு வாழ்பவர்களே! பாம்பின் மீது படுத்திருக்கும் வேங்கடத்தான் என்ன தான் சொல்கிறான்? அனைவருக்கும் அவனே புகலிடம் எனும்போது , அவன் ஒரு பெண்கொடியை(தன்னை..இன்னும் வந்து சேராமல்) வதம் செய்தான் என்ற கெட்டப் பெயர் அவனுக்கு உண்டானால், வையகத்தார் அவனை மதிக்கமாட்டார்கள் (என்று சொல்லுங்கள் என் கிறாள் மேகத்திடம்)

81- கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்து

கார்காலத் தெழுகின்ற கார்முகில்காள் வெங்கடத்துப்
போர்காலத் தெழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி
நீர்காலத் தெருக்கிலம் பழவிலைபோல் வீழ்வேனை
வார்காலத் தொருநாள்தம் வாசகம்தந் தருளாரே

கார்காலத்து எழுகின்ற கார்முகில்காள் வேங்கடத்து- மழைக்காலத்தே எழுகின்ற வேங்கட மழை மேகங்களே

போர்காலத்து எழுந்தருளிப் பொருதவனார் பேர்சொல்லி- போர்க்காலத்தில் எழுந்தருளிப் போர் புரிந்தவரின் பேர் சொல்லி

நீர்காலத்து எருக்கம் பழ விலைபோல் வீழ்வேனை-நீர் சூழ்ந்த காலத்து பழுத்த எருக்கம் இலை போல வீழ்வேனே

வார்காலத்து ஒருநாள்தம் வாசகம் தந்து அருளாரே- வருங்காலத்தில் நான் வாழ ஒருநாளாவது என் உயிரைப் புதுப்பிக்கும் வாசகம் தந்து அருளச் செய்யுங்கள்

மழைக்காலத்தில் திருமலையில் எழுகின்ற மழை மேகங்களே! இராவணனுடன் போர் புரிய நேரிட்ட போர்க்காலத்தில் எழுந்தருளிய இராமபிரானனின் பெயர் சொல்லி, மழைகாலத்தில் பழுத்து விழுகின்ற எருக்க இலை போல ஒடிந்து கீழே விழுகின்ற எனக்கு,எதிர்வரும் காலத்தில் ஒருநாளாவது என் உயிர் வாழ வேங்கடவன், என்னைச் சேர தான் வருவதாக உங்களிடம் சொன்னார் என்ற நல்லசொல்லை தந்து அருளச் சொல்லுங்கள் 

Tuesday, March 6, 2018

80- சங்கமா கடல்கடைந்தான் தன்முகில்காள் வேங்கடத்து

சங்கமா கடல்கடைந்தான் தன்முகில்காள் வேங்கடத்துச்
செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்
கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்
தங்குமேல் என் ஆவி தங்கும் என்று உரையீரே

சங்கமா கடல்கடைந்தான் தன்முகில்காள்-சங்குகள் நிறைந்த கடலைக் கடைந்தவன் வாழும் வேங்கடத்தில் இருக்கும் குளிர் மேகங்களே

வேங்கடத்துச் செங்கண்மால் சேவடிக்கீழ் அடிவீழ்ச்சி விண்ணப்பம்-செம்மையான கண்களுடைய திருமாலின் திருவடி வீழ்ந்து என் விண்ணப்பத்தை வையுங்கள்

கொங்கைமேல் குங்குமத்தின் குழம்பழியப் புகுந்துஒருநாள்-என் மார்பின் மீது குங்குமக் குழம்பு அழிய அவன் அணைத்து என்னை சேருகின்ற நாளில்தான்

தங்குமேல் என் ஆவி தங்கும்  என்று உரையீரே-என் உயிர் தங்கும் என அவ்ரிடம் சொல்லிவிடுங்கள்

சங்குகள் நிறைந்த கடலைக் கடைந்தவன் வாழும் திருவேங்கடத்தில் இருக்கும் குளிர் மேகங்களே!செம்மையான கண்களுடைய திருமாலின் திருவடி வீழ்ந்து என் விண்ணப்பத்தை வையுங்கள்.என் மார்பின் மீது குங்குமக் குழம்பு அழிய அவன் என்னை அணைக்கு நாள்தான், என் உயிர் தங்கும் என அவரிடம் சொல்லிவிடுங்கள் (அதுவரை நடைப்பிணம் தான்  நான்)


79-சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்மு கில்காள் மாவலியை

சலங்கொன்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள் மாவலியை
நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்தேறியபொழிவீர்காள்
உலங்குண்ட விளங்கனிபோல் உன்மெலியப் புகுந்து என்னை
நலங்கொண்ட நாராணற்கென் நடலைநோய் செப்புமினே

சலங்கொண்டு கிளர்ந்தெழுந்த தண்முகில்காள்- நீர் கொண்டு கிளர்ந்து எழுந்த குளிர்ந்த மேகங்களே

மாவலியை நிலங்கொண்டான் வேங்கடத்தே நிரந்து ஏறிப் பொழிவீர் காள்- மன்னன் மாவலியினை மூன்றாம் அடியில் நிலத்தில் வைத்து அவனைக் கொண்டவரின் வேங்கடத்திலே வரிசையாக மேலேறிப் பரவிப் பொழியும் மேகங்களே!

உலங்குண்ட விலங்கனி போல் உன்மெலியப் புகுந்து என்னை- கொசு உண்ட விளாம்பழம்போல என் உள்ளே புகுந்து (உன் நினைவால்) என்னை மெலிய வைத்து

நலங்கொண்ட நாராயணனுக்கு என் நடலை நோய் செப்புமினே- என் நலத்தைக் கொள்ளை கொண்ட நாராயணனுக்கு என் துன்ப நோய் சொல்லுங்களேன்

கடலில் இருக்கும் நீரினைஎடுத்துக் கொண்டு, மேலேறி, பின் குளிர்ந்த மேகங்களே!ஓரடியில் மண்ணையும், இரண்டாம் அடியில் விண்ணையும்,மூன்றாம் அடியில் மாவலியின் தலையையும் கொண்டவனின், வேங்கடமலையில்,வரிசையாக மேலேறி, பரவி மழையாய் பொழியும் மேகங்களே!விளாம்பழத்தை கொசு மொய்த்து,அதன் உள்ளிருக்கும் சாற்றினை எடுத்து விட்டால், எப்படி கூடு மட்டும் இருக்குமோ. அதுபோல நாராயணன் மீது நான் வைத்த காதலால் மெலிந்தேன்.எனது இந்நிலைக்கு அவனே காரணம்.நீங்கள் அவனிடம் சென்று என் துன்ப நோயைச் சொல்லுங்களேன்  

78- வான் கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்து

வான்கொண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள் வேங்கடத்துத்
தேன் கொண்ட  மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்கள்
ஊன் கொண்ட வள்ளுகிரால் இரணியனை யுடலிடந்தான்
தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே

வான் கொ ண்டு கிளர்ந்தெழுந்த மாமுகில்காள்- மழைநீரைத் தன்னகத்தேக் கொண்டு வானிலே கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே
வேங்கடத்துத் தேன் கொண்ட மலர்ச்சிதறத் திரண்டேறிப் பொழிவீர்கள்- வேங்கடத்து மலையில் உள்ள தேன் கொண்ட  மலர்கள் சிதறும் அளவிற்குத் திரண்டு ஏறிப் பொழியும் மேகங்களே
ஊங்கொண்ட வள்ளுகிரால் இரண்யனை உடல் இடந்தான்- தசையைக் கொண்ட தன் கூரிய நகங்களால் இரண்யனின் தசையைப் பிளந்தவன்
தான் கொண்ட சரிவளைகள் தருமாகில் சாற்றுமினே-எடுத்துக் கொண்ட என் உடலின் வளைவுகளைத் திருப்பித் தருமாறு சொல்லுங்கள்

மழைநீரைத் தன்னகத்தேக் கொண்டு வானிலே கிளர்ந்து எழுந்த பெரும் மேகங்களே! வேங்கடத்து மலையில் உள்ள தேன் கொண்ட மலர்கள் சிதறும் அளவிற்குத் திரண்டு ஏறிப் பொழியும் மேகங்களே (மிகவும் மெல்லியது மலர்..ஆனால்..மழைப்பெய்து அம்மலரிலுள்ள தேனைச் சிதறடிக்கும் மேகங்கள்),  தன் கூரிய நகங்களால் இரண்யனின் தசையை பிளந்த என் மன்னனின்  நினைவால் உடல் மெலிந்து,என் அங்கங்களின் ஆங்காங்கே இருக்க வேண்டிய வளைவுகள் சரிந்தன.அவற்ரைத் திருப்பித் தரச்சொல்லி அவனிடம் கூறுங்கள்

Monday, March 5, 2018

77- மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்து

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள் வேங்கடத்துத்
தன்னாகத் திருமங்கை தங்கியசீர் மார்வற்கு
என்னாகத் திளங்கொங்கை விரும்பித்தாம் நாடோறும்
பொன்னாகம் புல்குதற்கென் புரிவுடமை செப்புமினே

மின்னாகத் தெழுகின்ற மேகங்காள்- உடம்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களே
வேங்கடத்துத் தன்னாகத் திருமங்கை தங்கிய சீர்மார்வதற்கு-வேங்கடத்தான் தன் உடம்பில் திருவாகிய தேவியை தங்க வைத்திருக்கும் அந்த சீர் திருவாழ்மார்பனாவனிடம்
என்னாகத்து இளம் கொங்கை விரும்பித்தாம் நாடோறும்-என் உடம்பில் உள்ள இளம் மார்பகங்கள் நானே விரும்பி நாள்தோறும்
பொன்னாகம் புல்குதற்கு என் புரிவுடமை செப்புமினே-அவனது பொன்னான உடம்பை அணைத்துக் கொள்ள ஆசைப்படுவதாகச் சொல்லுங்கள்

உடம்பில் மின்னல் தோன்ற எழும் மேகங்களே, வேங்கடத்தான் தன் உடம்பில்,திருவாகிய தேவியைத் தங்க வைத்திருக்கும் அந்த சீர் திருவாழ்மார்பனாவனிடம், என் உடம்பில் உள்ள இளம் கொங்கைகள் நானே விரும்பி நாள்தோறும்,அவனது பொன்னான உடம்பை அணைத்துக் கொள்ள ஆசைப்படுவதாக சொல்லுங்கள்

76-ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்

ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோ டிவையெல்லாம்
எளிமையா விட்டென்னை ஈடழியப் போயினவால்
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே

ஒளிவண்ணம் வளைசிந்தை உறக்கத்தோடு இவையெல்லாம்- மிகுந்த ஒளியும், வளையல்களும், சிந்தனைகளும்,உறக்கமும் இவையெல்லாம்
எளிமையா விட்டேன்னை ஈடழியப் போயினவால்-நான் எளிமையானதில் என்னை விட்டு நீங்கின
குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி -குளிர்ந்த நீர் கொண்ட அருவி வேங்கடமலை என் கோவிந்தன் குணம்பாடி
அளியத்த மேகங்காள் ஆவி காத்திருப்பேனே-அருள் செய்யும் மேகங்களே!என் உயிர் காத்து நிற்பேனே

(எனது) ஒளி மிகுந்ததேகம்  ஒளி இழந்துவிட்டது.நல்ல நிற த்தில் இருந்த உடலில் பசலை நோய் பரவ ஆரம்பித்துவிட்டது.ஊன் ,உறக்கம் இல்லாததால் உடல் மெலிந்து , அணிந்திருந்த வளையல்கள் கழண்டன.எப்போதும், கண்ணனைப் பற்றியே சிந்தனை.குளிர்ந்த அருவி கொண்ட வேங்கடத்தான்,என் கோவிந்தனின் நற்குணங்களைப் பாடி,தகித்திருந்த என் உடலும், அதன் வெளிப்பாடான கண்ணீரையும் குளிர்விக்கும் மேகங்களே!என் உயிரை அவருக்காக இருக்கிப் பிடித்து வைத்திருப்பேனே!

75- மாமுத்த நிதிசொரியும் மாமுகில்கள் வேங்கடத்து

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்கள் வேங்கடத்துச்
சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தையென்னே
காமத்தீ யுள்புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்குங்கிலக்காய்நா னிருப்பேனே

மாமுத்த நிதிசொரியும் மாமுகில்கள்- பெரும் முத்துகளைப் போன்று வெண்துளிகள் பொழியும் பெரும் மேகங்களே
வேங்கடத்துச் சாமத்தின் நிறங்கொண்ட தாடாளன் வார்த்தியென்னே-திருவேங்கடமலையின் சாமத்தின் (நடு இரவு)கருமை நிறம் கொண்ட தாடாளனிடம் இருந்து சேதி எதுவும் எனக்கு உண்டா?
காமத்தீயுள் புகுந்து கதுவப்பட்டு இடைக்கங்குல்-காமத்தீ என் உள் புகுந்து எனைக் கவ்வி இழுக்க முன் இரவுக்கும், நடு இரவுக்கும் இடையில்
ஏமத்தோர் தென்றலுக்கு இங்கு இலக்காய் நானிருப்பேனே- வீசும் இன்பம் தரும் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே

பெரும் முத்துகளியப் போல வெண்துளிகள் பொழியும் பெரும் மேகங்களே,திருவேங்கடமலையின் நடுஇரவில், கருமை நிறம் கொண்ட தாடாளனிடம் இருந்து எனக்கு ஏதும் சேதி உண்டா?காமத்தீ என் உள் புகுந்து  என்னைக் கவ்வி இழுக்கிறது இரவில்.வீசும் இன்பம் தரும் தென்றலுக்கு இங்கு இலக்காய் நான் இருப்பேனே!(இன்பம் தரவேண்டிய தென்றல், தாடாளனிடம் இருந்து சேதி வராததால் துன்பம் அளிக்கிறதாம்)   

Sunday, March 4, 2018

74-விண்ணில் மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்



(எட்டாம் பத்தில் கோதை மேகத்தை தூது விடுகிறாள். .ஆம்...மேகம் விடு தூது)

விண்ணில் மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளிசோரச் சோர்வேனை
பெண்ணீர்மை யீடழிக்கும் இது தமக்கோர் பெருமையே


விண்ணில் மேலாப்பு விரித்தாற்போல் மேகங்காள்- நீல வானத்தில் போர்வை விரித்தது போன்று தோற்றமளிக்கும் மேகங்களே
தெண்ணீர்பாய் வேங்கடத்தென் திருமாலும் போந்தானே-தெளிந்த நீர் பாயும் வேங்கடத்திற்கு என் திருமாலும் வந்தாரோ?
கண்ணீர்கள் முலைக்குவட்டில் துளைசோரச் சோர்வேனை-நான் சிந்தும் கண்ணீர்த் துளிகள் என் முலைஎனும் மலையிலே சிறுதுளிப் பட்டாலும் ஆவி ஆகிவிடும்
பெண்ணீர்மை ஈடு அழிக்கும் இது தமக்கோர் பெருமையே- என் பெண்மையைச் சிதைக்கும் இச்செயல் அவருக்குப் பெருமையா?

நீலமேகத்தில் போர்வை விரித்தாற்போல் செல்லும் மேகங்காள்,தெளிந்த நீர் பாயும் வேங்கடத்துக்கு என் திருமாலும் வந்தாரோ?நான் (அவரை எண்ணி) சிந்தும் கண்ணீர்த் துளிகள் என் முலை எனும் மலையிலே சிறிது பட்டாலும் (என் உள்ளச் சூட்டினால்) ஆவி ஆகிவிடும்.என் பெண்மையை சிதைக்கும் இச்செயல் கண்ணனுக்குப் பெருமையைத் தந்திடுமோ?

(கண்ணீர்த் துளி, சுடச் சுட வீழ்ந்து ஆவி ஆகி விடுகிறதாம்.உடல் அவ்வளவு தகிக்கிறதாம்)

73- பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்

பாஞ்சசன்னியத்தைப் பற்பநா பனோடும்
வாய்ந்தபெ ருஞ்சுற்ற மாக்கிய வண்புதுவை
ஏய்ந்தபுகழ்ப் பட்டர்பிரான் கோதைதமி ழீரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லா ரவரும ணுக்கரே

பாஞ்சசன்னியத்தைப் பற்பநா பனோடும்- பாஞ்சசன்னியத்தை பத்மனாபனோடும்
வாய்ந்த பெருஞ் சுற்றமாக்கிய வண்புதுவை-பெரும் உறவாக்கிய அழகிய வில்லிப்புத்தூரில் பிறந்தவளும்
ஏய்ந்தப்புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்-நிறைந்தப் புகழ்ப் பெற்ற பட்டர்பிரான் மகள் கோதை சொன்ன இந்தப் பத்து தமிழ் பாமாலையை
ஆய்ந்தேத்த வல்லார் அவரும்  அணுக்கரே -பொருள் புரிந்து பாட வல்லவர்கள் கண்ணனுக்கு நெருக்கமானவர்களே!

பாஞ்சசன்னியத்தை பத்மனாபனோடு, பெரும் உறவாக்கிய அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவளும்,நிறைந்த புகழ்பெற்ற பட்டர்பிரானின் மகளுமாகிய கோதை சொன்ன இந்தப் பத்து தமிழ் பாமாலையை, பொருள் புரிந்து பாட வல்லவர்கள் கண்ணனுக்கும் நெருக்கமானவர்கள் எனலாம்
(கண்ணனிடம் சங்கு, சதாசர்வ காலமும் இருப்பதால்,அதன் மீது கோதை பொறாமைக் கொண்டு, சண்டைடிவது போல அமைந்துள்லன இந்தப் பத்துப்பாடல்கள்)


72- பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப

பதினாறா மாயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன்றன்
வாயமுதம் பொதுவாக வுண்பதனைப் புக்குநீ யுண்டக்காய்
சிதையாரோ வுன்னோடு செவ்வப்பெ ருஞ்சங்கே

பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப-பதினாறு ஆயிரம் தேவிமார்கள் பார்த்துக் கொண்டிருக்க
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன்- தேனினை வாயில் கொண்டவனைப் போல மாதவனின்
வாயமுதம் பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்காய்-
வாயமுதம் என்ற பொது சொத்தை நீ ஒருவனாக தேனினை உண்பதுபோல நீ உண்டாய்
சிதையாரோ உன்னோடு செல்வப் பெருஞ்சங்கே- (இதை வேடிக்கைப் பார்க்கும் பெண்கள் மனம்) அதைக்கண்டு சிதைந்து போய் நோக மாட்டார்களா செல்வச் சங்கே

பதினாறு ஆயிரம் தேவிமார்கள் பார்த்துக் கொண்டிருக்க, தேனினை வாயில் கொண்டவனைப் போன்ற மாதவனின் , வாயமுதம் என்ற பொது சொத்தை நீ ஒருவன் மட்டுமே தேனினை உண்பது போல உண்கிறாய் .இதை வேடிக்கைப் பார்க்கும் பெண்கள் மனம் சிதையமாட்டார்களா செல்வச் சங்கே!

Saturday, March 3, 2018

71- உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்

உண்பது சொல்லிலு லகளந்தான் வாயமுதம்
கண்படை கொள்ளில்க டல்வண்ணன் கைத்தலத்தே
பெண் படை யாருன்மேல் பெரும்பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே

உண்பது சொல்லில் உலகளந்தான் வாயமுதம்-நீ உண்பது பற்றிச் சொல்ல வேண்டுமானால், அது உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல் வண்ணன் கைத்தலத்தே- நீ உறங்குவது பற்றி சொல்வதென்றால் அது கடல் வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே
பெண்படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றனர்- (இவ்வாறு நீ செய்வதால்) பெண்கள் கூட்டம் உன் மீது பெரும் குற்றம் சாற்றுகின்றனர் (சண்டையிடுகின்றனர்)
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே-(  இந்தப் பெண்கள் அனுபவிக்க வேண்டியதை நீ ஒருவனே அனுபவிக்கிறாயாம்)பண்பில்லாததை நீ செய்கின்றாயாம் பஞ்சசன்னியமே

பன்சசன்னியமே! நீ உண்பதைப் பற்றி சொல்ல வேண்டுமாயின், அது உலகளந்தான் வாய் அமுதம்.நீ உறங்குவது பற்றி சொல்ல வேண்டுமானால்,அது கடல் வண்ணம் கொண்டவன் கைத்தலத்திலே.இப்படி சங்கே! நீ செய்வதால் பெண்கள் கூட்டம் உன்மீது குற்றம் சொல்கின்றனர்.உன்னிடம் சண்டையிடுகின்றனர்.பெண்கள் அனுபவிக்க வேண்டியதை, நீ அனுபவிப்பதன் மூலம் பண்பில்லா செயலைச் செய்கிறாயாம்.

70- செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம் போல

செங்கமல நாண்மலர்மேல் தேனுகருமன்னம் போல
செங்கட்க ருமேனி வாசுதே  வனுடைய
அங்கைத்த லமேறி அன்னவ சஞ்செய்யும்
சங்கரையா உஞ்செல்வம் சாலவ ழகியதே

செங்கமல நான் மலர் மேல் தேன் நுகரும் அன்னம் போல- அன்று மலர்ந்த சிவந்த தாமரை மலர்மேல் தேன் நுகரும் அன்னத்தைப் போல
செங்கட்கருமேனி வாசுதேவனுடைய-சிவந்த கண்களும்,கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனுடைய
அங்கைத்தலம் ஏறி அன்னவசம் செய்யும்- அழகிய கைத்தலம் ஏறி அங்கே கண் வளரும்
சங்கரையா உன் செல்வம் சால அழகியதே- சங்குகளின் தலைவா!உன் செல்வம் மிகவும் அழகியதே

அன்றலர்ந்த தாமரை மலர்மீது தேன் அருந்தும் அன்னம் போல, சிவந்த கண்களும்,கருத்த மேனியும் கொண்ட வாசுதேவனின் அழகிய கைத்தலம் ஏறி (சிவந்த இதழ்களில் உள்ள வாய் அமுதத்தைப் பருகி) அங்கே கண் வளரும் (உறங்கும்) சங்குகளின் அரசனெ! உனக்குக் கிடைத்த இந்த செல்வம் அழகியதே

69-போய்த் தீர்த்த மாடாதே நின்றபு ணர்மருதம்

போய்த்தீர்த்த மாடாதே நின்றபுணர்மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே யேறிக்கு டிகொண்டு
சேய்த்தீர்த்த மாய்நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய்வ லம்புரியே

போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்-புண்ணிய நதிகளுக்குச் சென்று தீர்த்த்ம் ஆடாது,மருத மரமாக நின்றவர்களை
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக்கொண்டு-சாய்த்து,  (அவர்களின் சாபத்தைத் தீர்த்து) கைத்தலத்தில் குடிகொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடைய-இளமையான வேர்க்கும் உடம்புடன் நின்றசெம்மையான திருமாலின்
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே-வாய்த்தீர்த்தம் உன் மீது (சங்கின் மீது) படும் அளவிற்கு பாய்ந்தாட வலம்புரி சங்கே

(குபேரனின் பிள்ளைகள் நளகுபாரன், மாணீக்ரவன் இருவரும் பெண்கள் நீராடும் இடத்தில் நிர்வாணமாய் குளித்ததால் மருத மரமாக சாபம் பெற்றவர்கள்.கண்ணன், குழ்ந்தையாய் மர்த மரத்தால் செய்யப்பட்ட உரலில் கட்டிப் போடப்பட்டான்.அதை உடைத்து, குபேரனின் பிள்ளைகளின் சாப விமோசனம் அடைய வைத்தவன் கண்ணன்) 

68-உன்னோடு டனையொரு கடல் வாழ்வாரை

உன்னோடு டனையொரு கடல் வழ்வாரை
இன்னாரி னையாரென் றெண்ணுவா ரில்லைகாண்
மன்னாகி நின்றம துசூதன் வாயமுதம் பன்னாளு
முண்கின்றாய் பாஞ்சசன்னியமே

உன்னோடு உடனை ஒரு கடல் வாழ்வாரை- உன்னுடன் கூடவே பிறந்த ஒரே கடலில் வாழ்பவர்களை
இன்னார் இனையார் என்றெண்ணுவா ரில்லை காண்-இன்னார் என அ டையாளம் கண்டு மதிக்க எவரும் நினைப்பதில்லை என்பதைப் பார்

மண்ணாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம் பன்னாளு-எந்நாளும் நிலைத்து நிற்கும் மதுசூதன் வாய் எச்சில் எனும் அமுதம்
உண்கின்றாய் பாஞ்சசன்னியமே-நீ ஒருவன் மட்டுமே உண்ணுகிறாய் சங்கே!

உன்னுடனேயே, கடலில் பிறந்து வாழ்பவர்களையெல்லாம், இன்னார் என தனித்தனியே அடையாளம் கண்டு மதிக்க யாரும் எண்ணுவதில்லை.ஆனால் நீ மட்டுமே எந்நாளும் நிலைத்து புகழ் பெற்ற மதுசூதன் திருவாய் அமுதம் உண்ணும் பேறு பெற்றாய்  

67- சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்

சந்திர  மண்டலம்போல் தாமோதரன் கையில்
அந்தர மொன்றின்றி யேறிய வஞ்செவியில்
மந்திரம் கொள்வாயே போலும்வ லம்புரியே
இந்திரனு முன்னோடு செல்வத்துக் கேலானே

சந்திர மண்டலம்போல் தாமோதரன் கையில்- சந்திர மண்டலம் போல தாமோதரனின் கையில்
அந்தரம் ஒன்றின்றி ஏறிய வஞ்செவியில்-எப்போதும் அங்கு இருந்து கொண்டு அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே-ஏதோ ரகசியம் பேசுவாய் போல வலம்புரி சங்கே
இந்திரனும் உன்னோடு செல்வத்துக் கேலானே- அந்த இந்திரன் கூட உன்னுடைய இந்த செல்வத்திற்கு ஈடாக மாட்டான்

சந்திரமண்டலம் போல தாமோதரனின் கையில், எப்போதும் இருந்து கொண்டு, அவன் செவியில் , ஏதோ ரகசியம் பேசுவது போல இருக்கும் வலம்புரி சங்கே! அந்த இந்திரன் கூட உன்னுடைய இந்த பேறு பெற்ற செல்வத்திற்கு ஈடாக மாட்டான்

Friday, March 2, 2018

66-தடவரை யின்மீதே சரற்கால சந்திரன்

தடவரை யின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவா வில்வந்தெ ழுந்தாலே போல்நீயும்
வடமதுரை யார்மன்னன் வாசுதே வன்கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப்பெ  ருஞ்சங்கே

தடவரை இன் மீதே சரற்கால சந்திரன்- பெரிதாக நின்ற மலையின் மீதே இலையுதிர்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலெபோல் நீயும்- அந்த பெருமலைகளுக்கு இடைய்ல் வந்து எழுந்தாற்போல நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்- வடமதுரை மன்னன் வாசுதேவனின் கைகளில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே-குடியேறி வீற்றிருந்தாய் அழகிய பெரும் சங்கே

அரும் பெரும் சங்கு, பெரியதாக நின்றிருந்த மலைகளின் இடையில், இலையுதிர்கால சந்திரன் வந்து எழுந்தாற்போல, வடமதுரை மன்னன் வாசுதேவன் கையில் குடியேறி விற்றிருக்கிறாய் அழகிய பெரும் சங்கே

(பெரிய மலைகளிடையே உள்ள மரங்கள் , இலையுதிர்காலத்தில், இலைகளை உதிர்த்து விட்டதால் முழுநிலவையும் இடையூறின்றி பார்க்கமுடிகிறதாம்) 

65- கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்

கடலில்பி றந்துக ருதாது பஞ்சசனன்
உடலில்வ ளர்ந்துபோ யூழியான் கைத்தலத்
திடரில்கு டியேறித் தீயவசுரர் நடலைப்ப
டமுழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே

கடலில் பிறந்து கருதாது- சங்கே! நீ கடலில் பிறந்தாய்,பிறந்த இடத்தையும் மறைந்தாய்
பஞ்சசனன் உடலில் வளர்ந்து போயூழியான் கைத்தலத்-பஞ்சசசன் உடலிலே வளர்ந்தாய்,இறுதியால் ஊழியான் கைத்தலத்தில்
இடரில் குடியேறித் தீய அசுரர் நடலைப்பட-தீமைசெய்யும் அசுரர் நடுநடுங்க துன்பப்படும்படி
நடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே-முழங்கும் தோற்றமுடையவன் ஆனாய் சங்கே

அன்பின் நற்சங்கே! நீ பிறந்ததோ கடலில்.வளர்ந்ததோ பஞ்சசனன் எனும் அரக்கன் உடம்பில்.ஆனால், பிறந்து, வளர்ந்த இடத்தை மறந்துவிட்டு,ஆழிமறைக் கண்ணன், அந்த ஊழியானின் கைத்தலத்தில் குடியேறிக்கொண்டு, தீமை செய்யும் அசுரர் நடுநடுங்கத் துன்பம் வரும்படி முழங்கும் மேன்மை பெற்ற தோற்றமுடையவன்ஆனாய்.எப்படிப்பட்ட மேன்மையான சங்கு இது.

64-கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ

(நாச்சியார் திருமொழி ஏழாம் பத்து ஆரம்பம்.கடலில் பிறந்த வெண்சங்கு கண்ணனின் கையில் எப்போதும் காணப்படுவதால், எழுந்த பொறாமையால் பாடியவை)

கருப்பூரம் நாறுமோ கமலப்பூ நாறுமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும்நாற்றமும்
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!

கருப்பூரம் நாறுமோ கமலப் பூ நாறுமோ-பச்சைக்கருப்பூரம் மணக்குமோ அல்லது தாமரைப்பூவின் மணம் வருமோ
திருப்பவளச் செவ்வாய்தான் தித்தித்திருக்குமோ-(கண்ணனின்)பவளம் போன்ற சிவந்த வாய்தான் இனிமையாய் இருக்குமோ
மருப்பொசித்த மாதவன்றன் வாய்ச்சுவையும் நாற்றமும்-குவலய பீடம் என்னும் யானையின் கொம்பை உடைத்த மாதவனின் வாயும், சுவையும், அதன்மணமும் எப்படி இருக்கும் என
விருப்புற்றுக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே-வேண்டி விரும்பிக் கேட்கின்றேன், அதைச் சொல்லிவிடு கடல் வெண்சங்கே

பச்சைக்  கருப்பூரம் போன்ற மணமா அல்லது தாமரைப் பூவின் மணமா? பவளம் போன்ற செவ்வாய் இனிப்பாக இருக்குமா?குவலிய பீடம் என்ற யானையின் தந்தத்தினை உடைத்த மாதவனின் வாயும், சுவையும் எப்படி இருக்குமென (அவருடனேயே இருக்கும், அவர் ஊதுகையில் அவர் இதழின் சுவை அறிந்த) உன்னை விருப்பிக் கேட்கி ன்றேன் சொல்லிடு
சங்கே!