Friday, March 2, 2018

63- ஆயனுக் காகத்தான் கண்டகனாவினை

ஆயனுக் காகத்தான் கண்டக னாவினை
வேயர்பு கழ்வில்லி புத்தூர்க்கோன் கோதைசொல்
தூயத மிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்றும கிழ்வரே

ஆயனுக் காகத்தான் கண்ட கனாவினை- கண்ணனுடன்  தனக்குத் திருமணம் நிகழ்வதாகக் கண்ட கனவினை
வேயர் புகழ் வில்லிப்புத்தூர் கோன் கோதை சொல்- வேயர் குலப் புகழ் பெற்ர வில்லிப்புத்தூர் தலைவர் பெரியாழ்வார் மகள் கோதை சொல்ல
தூய தமிழ்மாலை ஈரைந்தும் வல்லவர்- (கனாக்கண்ட) பத்துப்பாடல்கள் அடங்கிய தூயதமிழ்மாலையைப் பாட வல்லவர்
வாயுநன் மக்களைப் பெற்று மகிழ்வரே- திருமணமாகி அருமையான நல்ல குழந்தைகளைப் பெற்று மகிழ்வார்கள்

கண்ணனுடன், தனக்குத் திருமணம் நடந்ததாக, பெரியாழ்வார் மகள் கோதை கண்ட கனவான பத்துப் பாடல்களையும் பாட வல்லவர் திருமணமாகி நன் மக்களைப் பெற்று மகிழ்வார்கள்

(143 நாச்சியார்திருமொழிகளில் இந்தப் பத்துப் பாடல்களே அதிகம் கொண்டாடப்படுகின்றன.திருமணங்களிலும் இவை பாடப்படுகின்றன)

No comments:

Post a Comment