Thursday, March 1, 2018

60- இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்

இம்மைக்கு மேழேழ்பி றவிக்கும் பற்றாவான்
நம்மையு டையவன் நாராய ணன்நம்பி
செம்மை யுடையதி ருக்கையால் தாள்பற்றி
அம்மிமி திக்கக்க னாக்கண்டேன் தோழீநான் 

இம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் பற்றாவான்- இந்தப்பிறவி மட்டுமின்றி ஏழேழு பிறவிக்கும் இவனே நமக்குப் புகலிடம் (இவனது திருவடிகளே அடைக்கலம்)
நம்மையுடையவன் நாராயணன் நம்பி-என்றும் நமக்கானவன் நாராயணன் நம்பி
செம்மையுடைய திருக்கையால் தாள் பற்றி- சிவந்த அவர் தம் கையால், என் கால்களைப்  பற்றி
அம்மி மிதிக்கக் கணாக் கண்டேன் தோழீ நான்- அம்மி மீது வைத்து , அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழி நான்

ஏழேழு பிறவிக்கும், நாராயணனே புகலிடம்.என்றும் நமக்கானவன்.அவன் தன் சிவந்த கைகளால் என் கால்களைப் பற்றி, அம்மி மீது  வைத்து, அம்மி மிதிக்கக் கனாகக்ண்டேன் தோழீ
(அம்மி மிதித்தல் திருமணச்சடங்குகளில் ஒன்றுதானே) 

No comments:

Post a Comment