Thursday, April 5, 2018

திருப்பாவை

முதல் பாடல்
நோன்பு கொண்டாட விரும்பும் சிறுமியர், மற்ற சிறுமியர்களை விடியர்காலை நீராட அழைத்தல்

மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன் நாளால் ;
நீராடப் போதுவீர்! போதுமினோ, நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச் சிறுமீர்காள்!
கூர்வேல் கொடும் தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளம் சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்!
பாரோர் புகழப் படிந்து ஏலோர் எம்பாவாய்.

மார்கழி மாதம் பெளர்ணமி நாள் இது
குளிக்க வர விரும்புகின்றவர்களே! ஆபரணங்களை அணிந்தவர்களே!
செல்வம் நிறைந்துள்ள திருவாய்ப்பாடியில் இருக்கும் இளம் பெண்களே வாருங்கள்
கூர்மையான வேலைக் கொண்டு தீங்கு செய்பவருக்குத் கொடியவனான,
நந்தகோபனின் பிள்ளை
அழகான கண்களுடைய யசோதையின் சிங்கக் குட்டி
மேகம் போல உடல், சிவந்த கண், சூரியசந்திரனை போல முகம் கொண்ட
நாராயணன் நாம் விரும்பியதை கொடுப்பான்;

உலகம் புகழப் பாவை நோன்பில் ஈடுபடலாம் வாருங்கள்.

இரண்டாம் பாடல்-

நோன்பு நோற்க விரும்புவோர், முக்கியமாக மேற்கொள்ள வேண்டிய, தவிர்க்க வேண்டிய விதி முறைகள்
வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ!  பாற் கடலுள்
பையத் துயின்ற பரமன் அடி பாடி,
நெய் உண்ணோம், பால் உண்ணோம், நாட்காலே நீராடி,
மையிட்டு எழுதோம், மலர் இட்டு நாம் முடியோம்,
செய்யாதன செய்யோம், தீக்குறளை சென்று ஓதோம்,
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கை காட்டி
உய்யுமாறு எண்ணி உகந்து — ஏலோர் எம்பாவாய்.
பூமியில் வாழ்பவர்களே நம்முடைய பாவை நோன்புக்கு செய்ய வேண்டிய காரியங்களைக் கேளுங்கள்!
பாற்கடலில் உறங்குகிற பகவானுடைய திருவடிகளை பாடுவோம்
நெய், பால் இவற்றை உட்கொள்ளமாட்டோம்.
விடியற்காலை குளித்துவிட்டு, கண்ணுக்கு மை கிடையாது, கூந்தலுக்கு மலர் கிடையாது.
செய்யக்கூடாத காரியங்களைச் செய்யமாட்டோம். கோள் சொல்லமாட்டோம்.
தானத்தையும் பிச்சையையும் எங்களால் முடிந்த வரை கொடுப்போம்
இப்படிப் பிழைக்கும் வழியை எண்ணி சந்தோஷப்படுவது நம் பாவை நோன்பு.

மூன்றாம் பாடல்-

உத்தமனைப்பாடி நோன்பு எடுப்போர் அடையும் பெரும் செல்வம்

 ஓங்கி உலகு அளந்த உத்தமன் பேர் பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீர் ஆடினால்,
தீங்கு இன்றி நாடு எல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெறும் செந்நெல் ஊடு கயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறி வண்டு கண் படுப்பத்
தேங்காதே புக்கு இருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்:
நீங்காத செல்வம் நிறைந்து — ஏலோர் எம்பாவாய்.

மூன்று உலகத்தையும் தன் காலால் அளந்த திருவிக்கிரமனின் நாமங்களைப் பாடி
நாம் நோம்பிற்கு நீராடினால்
நாடு முழுவதும் தீமை இல்லாமல் மாதம் மூன்று முறை மழை பெய்யும் (அதனால்)
செந்நெல் வளர, நடுவே கயல் மீன்கள் துள்ளி விளையாடும்.
அழகிய நெய்தல் பூக்களில் வண்டுகள் உறங்கிக்கிடக்கும்.
பருத்த முலைகளைப் பற்றி இழுக்க இழுக்க அசையாமல் நின்று
வள்ளல்களை போல் பால் குடங்களை நிரப்பும் பசுக்கள் இருக்க
குறைவற்ற செல்வம் நிறைந்திருக்கும்.


நான்காம் பாடல்-
மழைபொழியவைக்கஒருஅரியமந்திரம்

ஆழிமழைக்கண்ணாஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி,
ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னிவலம்புரிபோல்நின்றதிர்ந்து,
தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல்
வாழஉலகினில்பெய்திடாய்நாங்களும்
மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய்.
வருணதேவனேசிறுதும்ஒளிக்காமல் 
கடலில்புகுந்துநீரைமொண்டுஇடிஇடித்துஆகாயத்தில்ஏறி 
திருமாலின்திருமேனிபோல்கறுப்பாகி 
அழகானதோள்கொண்டபத்பநாபன்கையில் 
உள்ளசக்கரம்போல்மின்னலடித்து,அவனுடையசங்கம்போல்அதிர்ந்துமுழங்க 
உன்னுடையவில்லாகியசார்ங்கம்வீசியபாணங்கள்போல்மழைபெய்து 
உலகம்அனைத்தும்வாழநாங்களும் 
மகிழ்ந்துமார்கழிநோன்புக்குநீராடுவோம்



ஐந்தாம் பாடல் 
கண்ணனை வாழ்த்தும் முறையும், அடையும் பலன்களும்

மாயனை மன்னு வட மதுரை மைந்தனைத்
தூய பெருநீர்  யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்
தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்
தூயோமாய் வந்து நாம் தூ மலர் தூவித் தொழுது
வாயினால் பாடி, மனத்தினால் சிந்திக்க,
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும்; செப்பு — ஏலோர் எம்பாவாய்.


மாயச் செயலுடைய கண்ணன் வடமதுரையில் பிறந்த திருக்குமாரனை
தூய யமுனை நதிக் கரையில் வசிப்பவனை
இடையர் குலத்தில் விளக்கை போல் அவதரித்து
யசோதைக்கு பெருமை தேடிக் கொடுத்த தாமோதரனை
பரிசுத்ததுடன் அணுகி, மலர்களைத் தூவி வணங்கி
வாயாரப் பாடி, நெஞ்சார தியானிப்போம்
முன்பு செய்த பாவங்களும், பின் வரும் பாவங்களும் அவன் அருளால்
நெருப்பில் விழுந்த பஞ்சாக உருத் தெரியாமல் அழிந்து போகும்
அகவே அவன் நாமங்களைச் சொல்!

ஆறாம் பாடல்
பறவைகளின் ஒலி, சங்கொலி இவை கேட்டும் எழாத பெண்களை எழுப்புதல்


புள்ளும் சிலம்பின காண், புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய்! எழுந்திராய், பேய்முலை நஞ்சுண்டு
கள்ளக் சகடம் கலக்கு அழியக் கால் ஓச்சி
வெள்ளத்து அரவில் துயில் அமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரி  என்ற பேர் அரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்து — ஏலோர் எம்பாவாய்.

பறவைகள் கூவிவிட்டன. கருடனை வாகனமாக கொண்ட விஷ்ணுவின் கோவிலில்
வெண்சங்கொலி பெரிய ஓசையிட்டு அழைப்பதைக் கேட்கவில்லையா?
இளம் பெண்ணே! எழுந்திரு பூதனா என்றும் அரக்கியின் நச்சுமுலையை உறிஞ்சி
வஞ்சகமான சகடாசுரன் வண்டி உருவில் வந்த போது கட்டுக் குலையும்படி காலால் உதைத்தான்
பாற்கடலில் பாம்பின் மேல் துயில் கொண்டு, உயிர்களுக்கெல்லாம் வித்தானவனை
முனிவர்களும் யோகிகளும் ஹரி ஹரி என்று கூறும் ஒலி
எங்கள் உள்ளம் புகுந்து குளிர்ந்தது.

ஏழாம் பாடல்
வைகளின் கீசு, கீசு ஒலி மற்றும் தயிர்கடையும் ஓசையும், நாங்கள் பாடுவதும் கேட்டும் இன்னும் படுத்துறங்கலாகுமோ?


கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்  கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்  மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய்.

கீசு கீசு என எங்கும் வலியன் பறவைகள் ஒன்று கூடி
கூவிய கூச்சல் ஒலி கேட்க வில்லையா பேதைப் பெண்ணே!
காசுமாலையும், குண்டுமாலையும் கலகலவென்று ஒலிக்க
வாசனையுடைய கூந்தலை உடைய இடைப்பெண்கள்
கைகளை அசைத்து மத்தினால் கடையும் தயிரின் ஓசை கேட்கவில்லையோ!
பெண்கள் தலைவியே! நாராயணனான கண்ணனை நாங்கள் பாட
கேட்டுக்கொண்டே படுத்துக் கிடக்கிறாயோ?
பிரகாசமானவளே ! கதவைத் திறப்பாயாக
எட்டாம் பாடல்
கண்ணனிடமிருந்து நாம் விரும்புவதை அடையும் வழி


கீழ்வானம் வெள்ளென்று, எருமை சிறு வீடு
மேய்வான் பரந்தன காண், மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்து  உன்னைக்
கூவுவான் வந்து நின்றோம்;  கோதுகலம் உடைய
பாவாய்! எழுந்திராய், பாடிப் பறை கொண்டு
மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைக் சென்று நாம் சேவித்தால்,
ஆவாவென்று ஆராய்ந்து அருள் — ஏலோர் எம்பாவாய்.

கிழக்குத் திசையில் வானம் வெளுத்துள்ளது
எருமைகள் சிறுது நேரம் பனிப்புல் மேய சிறு தோட்டங்களுக்குப் பரவின
கிளம்பிய மற்ற பெண்களை தடுத்து நிறுத்தி
உன்னையும் அழைத்துச்செல்ல வாசலில் வந்து காத்திருக்கிறோம்
குதூகலமுடைய பெண்ணே! எழுந்திரு. கண்ணனைப் பாடி நோன்பு மேற்கொள்வோம்
குதிரையாக வந்த அசுரனை(கேசியை) வாயை கிழித்தவன்
மல்லர்களைக் கொன்ற தேவாதிதேவன், அவனைச் சேவித்தால்
நம் குறைகளை ஆராய்ந்து ஐயோ என்று இரங்கி வருவான்.
 ஒன்பதாம் பாடல்
மாமன் மகளை எழுப்பிட, கண்ணன் புகழைப்பாடுவோம்!
 தூமணி மாடத்துக் சுற்றும் விளக்கொ¢யத்
தூபம் கமழத் துயில்-அணைமேல் கண்வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்,
மாமீர்! அவளை எழுப்பீரோ?  உன் மகள் தான்
ஊமையோ? அன்றிக் செவிடோ? அனந்தலோ?
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்று என்று
நாமம் பலவும் நவின்று — ஏலோர் எம்பாவாய்

தூய்மையான மணிகளைக் கொண்ட மாளிகையில் எங்கும் விளக்குகள் எரிய
வாசனைப்புகை வீசப் படுக்கையில் தூங்கும்
மாமன் மகளே! கதவை திறந்துவிடு
அம்மணி! உன் பெண்தான் எழுப்புங்கள்
அவள் ஊமையோ? செவிடோ? சோம்பேறியோ?
அல்லது மந்திரத்தால் மயங்கித் தூங்குகிறாளோ?
மாயன், மாதவன், வைகுந்தன் என்ற பகவானின்
நாமங்கள் பலவற்றைச் சொல்லி நற்பயன் அடைய வேண்டியிருக்கிறது
சீக்கிரம் உன் மகளை எழுப்பு
பத்தாம் பாடல்
பெருந்தூக்கம் தூங்கிடும் பெண்ணே! விழித்துக் கதவைத்திற!

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்?
நாற்றத் துழாய்முடி நாராயணன்  நம்மால்
போற்றப் பறை தரும் புண்ணியனால்;  பண்டு ஒருனாள்
கூற்றத்தின் வாய் வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தான் தந்தானோ?
ஆற்ற அனந்தலுடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திற — ஏலோர் எம்பாவாய்.

நோன்பு  நோற்றுச் சுகம் அனுபவிப்பவளே!
வாசல் கதவை திறக்காதவர்கள் பதில் கூடவா சொல்ல மாட்டார்கள் ?
நறுமணமுள்ள துளசிமாலையைச் சூடிய நாராயணன்,
நம்மால் போற்றப்பட்டு அருள் புரிபவனான ராமாவதாரத்தில்
யமன் வாயில் இரையாக வீழ்ந்த கும்பகர்ணனும் உன்னிடத்தில்
தோல்வியடைந்து தனது பேருறக்கத்தை உனக்குத் தந்தானோ ?
எல்லையற்ற சோம்பலுடையவளே! சிறந்தவளே
தெளிவுடன் வந்து கதவைத் திறப்பாயாக!

பதினொன்றாம் பாடல்

அசையாமல் பேசாமல் தூங்குவதன் மர்மம் என்ன?


கற்றுக் கறவைக் கணங்கள் பல கறந்து
செற்றார் திறலழியக் சென்று செருச் செய்யும்
குற்றம் ஒன்று இல்லாத கோவலர் தம் பொற் கொடியே!
புற்றரவு அல்குல் புனமயிலே! போதராய்,
சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்து  நின்
முற்றம் புகுந்து முகில் வண்ணன் பேர் பாடச்
சிற்றாதே பேசாதே, செல்வப் பெண்டாட்டி!  நீ
எற்றுக்கு உறங்கும் பொருள்?– ஏலோர் எம்பாவாய்.

இளம் கன்றுகளை ஈன்ற பசுக்களை கறப்பவர்களும்
பகைவர்களை அவர்கள் இருக்கும் இடத்தில் சென்று போர் புரிபவர்களும் ஆன
குற்றமற்ற ஆயர்கள் குடியில் பிறந்த தங்கக்கொடி போன்ற பெண்ணே!
பாம்பின் படம் போன்ற இடைபெற்ற, மயில் போன்ற பெண்ணே! எழுந்து வா
உறவு முறை யுடைய தோழிகளாய் இருக்கும் நாங்கள் எல்லோரும்
உன் வீட்டு முற்றத்தில் கார்மேக நிறக் கண்ணனின் நாமங்களை பாடுகிறோம்.
அசையாமலும் பேசாமலும் உறங்கும் செல்வமுள்ள பெண்ணே!
உறங்குவதன் பொருள் என்ன, நாங்கள் அறியோம்!

பன்னிரெண்டாம் பாடல்

விடியற்காலை பனியில் நனைந்து ஸ்ரீ ராமனின் புகழைப்பாடி உன் வீட்டிற்கு முன் நிற்கும் எங்களின் குரலைக் கேட்டும் உறங்குவதேன்?


கனைத்து இளங் கற்று-எருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலை வழியே நின்று பால் சோர
நனைத்து இல்லம் சேறாக்கும் நற் செல்வன் தங்காய்!
பனித் தலை வீழ நின் வாசற் கடை பற்றி,
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைக் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய் திறவாய்;
இனித்தான் எழுந்திராய், ஈதென்ன பேருறக்கம்!
அனைத்து இல்லத்தாரும் அறிந்து — ஏலோர் எம்பாவாய்.

எருமைகள் தங்கள் இளம் கன்றுகளை எண்ணி
இரக்கத்துடன் காம்புகள் வழியே பால் சுரக்கும்
இதனால் வீடு முழுவது சேறாகியிருக்கும் பெருஞ்செல்வனின் வீட்டுத்தங்கையே !
பனித்துளிகள் எங்கள் தலையில் விழ நாங்கள்
உங்கள் வீட்டு வாசலில் நிற்கிறோம்.
இராவணனைக் கொன்ற இராமனைப் புகழ் பாடுகிறோம்
நீ வாய்திறவாமல் தூங்குவதை எல்லா
வீட்டினரும் அறிந்து விட்டார்கள்.
பதின்மூன்றாம் பாடல்
படுத்துறங்குவதை விட்டு எழுந்து வா!



புள்ளின் வாய் கீண்டானைப் பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்ப்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக்-களம் புக்கார்;
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று;
புள்ளும் சிலம்பின காண், போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ? பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்ந்து கலந்து — ஏலோர் எம்பாவாய்.

பறவையாய் வந்த பகாசுரனின் வாயைப்பிளந்தவனும்
கொடிய இராவணனுடய தலையைக் கிள்ளியெறிந்த திருமாலைப் பாடிக்கொண்டு
பாவை நோன்பு நோற்கும் இடத்தை அடைந்துவிட்டார்கள்.
சுக்கிரன்(வெள்ளிக்கிரகம்) உச்சிக்கு வந்து குரு(வியாழன்) மறைந்துவிட்டது.
பறவைகள் கூவுகின்றன பூப்போன்ற மான்கண் உடையவளே
உடல் குளிர நீராடாமல் படுத்து கிடக்கிறாயோ?
நீ உன்னுடைய கபடத்தை விட்டுவிட்டு
எங்களுடன் வந்து கலந்துவிடு!

பதினான்காம் பாடல்
எங்களை எழுப்புவதாக சொல்லிவிட்டு, அவ்வண்ணம் செய்யாது தூங்குதல் முறையோ?



உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர்  வாய் நெகிழ்ந்து, ஆம்பல் வாய் கூம்பின காண்:
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்;
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்!  எழுந்திராய், நாணாதாய்! நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடு — ஏலோர் எம்பாவாய்.

உங்கள் வீட்டு பின்புறக்குளத்தில் செந்தாமரை மலர்கள் மலர்ந்து விட்டன
அல்லி மலர்களின் வாய்கள் மூடிக்கொண்டு விட்டன
காவி ஆடை அணிந்த வெண்மை பற்களுடைய துறவிகள்
தங்கள் கோயில்களுக்கு சங்கூதப் போகிறார்கள்
எங்களை முன்னதாக ஏழுப்புவதாக வீண் பெருமை பேசும் பெண்ணே
வெட்கமில்லாதவளே, பேச்சு மட்டும் இனிமையாக பேசுபவளே !
சங்கு சக்கரம் தரித்த விசாலமான கையையுடைய
கமலக்கண்ணனை பாட வேண்டும் எழுந்திரு

பதினைந்தாம் பாடல்
எழுந்திராமல் வாயாடுவதை விட்டு எங்களுடன் சேர்ந்து மாயனைப்பாட எழுந்துவா!



எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின், நங்கைமீர்! போதருகின்றேன்;
வல்லை உன் கட்டுரைகள், பண்டே உன் வாய் அறிதும்;
வல்லீர்கள் நீங்களே நானே தான் ஆயிடுக!
ஒல்லை நீ போதாய், உனக்கென்ன வேறு உடையை?
எல்லாரும் போந்தாரோ? போந்தார், போந்து எண்ணிக்கொள்;
வல் ஆனை கொன்றானை மாற்றாரை மாற்று அழிக்க
வல்லானை  மாயனைப் பாடு — ஏலோர் எம்பாவாய்.

__குறிப்பு: சென்ற பாடல் வரை ஆண்டாள் கோபியரை எழுப்பிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக இப்பாடலில் துயிலில் இருந்து விழித்துக்கொண்ட கோபியருடன் ஆண்டாள் உரையாடுவதைக் காணலாம்.__
[எழுப்புபவர்] இளங்கிளி போன்றவளே என்னே இன்னமா தூங்குகிறாய் ?
[எழுந்திருப்பவர்] பெண்களே ! இதோ வருகிறேன் ! ‘சில்’ என்று கூச்சலிட்டு எழுப்பாதீர்கள் !
[எழுப்புபவர்] நீ வாயாடி. நீ சொல்லும் கட்டுக்கதைகள் முன்னமே நாங்கள் அறிவோமே !
[எழுந்திருப்பவர்] நீங்கள்தான் வாயாடிகள்;பரவாயில்லை; நானே தான் வாயாடியாக இருத்துவிட்டு போகிறேன்
[எழுப்புபவர்] நீ உடனே புறப்பட்டு வா வேறு என்ன வேலை இருக்கிறது ?
[எழுந்திருப்பவர்] எல்லாப் பெண்களும் வந்துவிட்டார்களா ?
[எழுப்புபவர்] எல்லோரும் வந்து விட்டார்கள். நீயே வந்து எண்ணிப்பார்.
குவலயாபீட யாணையையும் கம்சன் முதலிய பகைவர்களையும்
அழித்த கண்ணன் புகழ் பாட எழுந்துவா
பதினாறாம் பாடல்

பாவயர்கள் நந்த கோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க வேண்டுதல்


நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே!  கொடித் தோன்றும் தோரண
வாயில் காப்பானே!  மணிக்கதவம் தாள் திறவாய்,
ஆயர் சிறுமியரோமுக்கு  அறை பறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய் நேர்ந்தான்;
தூயோமாய் வந்தோம், துயிலெழப் பாடுவான்;
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே, அம்மா!  நீ
நேய நிலைக் கதவம் நீக்கு — ஏலோர் எம்பாவாய்.

__சென்ற பாடல் வரை, தூங்கிக்கொண்டிருந்த கோபியரையெழுப்பிய பாடல்களைக் கண்டோம். இப்பாடலில் பாவையர்கள் நந்த கோபன் மாளிகையை அணுகி, வாயில் காப்போனை கதவைத்திறக்க சொல்லுகின்றனர்.__

எங்களுக்கு தலைவனான நந்தகோபனுடைய மாளிகையைக் காப்பவனே !
கொடிகள் கட்டப்பட்டு விளங்கும் தோரண வாசல் காப்பானே !
அழகிய தாழ்ப்பாளைத் திறந்து எங்களை உள்ளேவிடு !
ஆயர்குலப் பெண்களான எங்களுக்கு மாயன் கண்ணபிரான்
நேற்றே விரும்பியதைக் தருகிறேனென்று வாக்களித்துள்ளான்
எனவே, அவனை துயிலெழுப்ப (பாட) தூய்மையுடன் வந்துள்ளோம்
முதல் முதலிலே மறுக்காமல் பிணைந்து மூடிக்கொண்டுள்ள
கதவை திறந்து எங்களை உள்ளேவிடு
பதினேழாம் பாடல்
கதவு திறந்திடவும், கோபியர் உள்ளே சென்று, நந்த கோபனையும், யசோதையையும், பலதேவரையும் சயனத்திலிருந்து எழுப்புதல்

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபாலா ! எழுந்திராய்;
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெருமாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடு அறுத்து ஓங்கி உளகு அளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்;
செம் பொற் கழலடிச் செல்வா ! பலதேவா!
உம்பியும் நீயும் உகந்து — ஏலோர் எம்பாவாய்.

தூணி, தண்ணீர், சோறு இவற்றை தானம் செய்யும் எங்கள்
எசமானான நந்தகோபாலரே எழுந்திருக்கவேண்டும்!
வஞ்சிக் கொடிக்கு கொழுந்து போல் முதன்மையானவளே!
எங்கள் குலவிளக்கே ; எசமானியான யசோதையே! விழித்துக்கொள்
வானளாவிய ஓங்கி வளர்ந்த அனைத்துலகங்களையும்
அளந்த தேவர்களுக்கெல்லாம் தலைவனே எழுந்திரு
பொன்னால் செய்யப்பட்ட வீரக்கழலை அணிந்த
பலராமா நீயும் உன் தம்பியான கண்ணனும் எழுந்திருக்கவேண்டும்
பதினெட்டாம் பாடல்

நந்த கோபரின் மருமகளான நப்பின்னை பிராட்டியை எழுப்புதல்



உந்து மதகளிற்றன் ஓடாத தோள்-வலியன்
நந்த கோபாலன் மருமகளே! நப்பின்னாய்!
கந்தம் கமழும் குழலி கடை திறவாய்
வந்து எங்கும் கோழி அழைத்தன காண்,  மாதவிப்
பந்தல் மேல் பல்கால் குயில்-இனங்கள் கூவின காண்,
பந்தார் விரலி! உன் மைத்துனன் பேர் பாடச்
செந்தாமரைக் கையால் சீர் ஆர் வளை ஒலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.

மத யானையை மோதி தள்ளுகின்ற வலிமையும், போரில் பின் வாங்காத
தோள்ளை படைத்தவனுமான நந்தகோபாலன் மருமகளே ! நப்பின்னையே!
மணம் வீசும் கூந்தலை உடையவளே கதவைத்திற!
கோழிகள் சுற்றிலும் வந்து கூவுவதைக்கேள்!
குருக்கத்தி(மல்லிகைப்பூ) கொடிப் பந்தலில் குயில்கள் பலமுறை கூவி விட்டன
பந்தைத் தாங்கிய விரல்களையுடையவளே ! உன் கணவன் பேர் பாட வந்துள்ளோம்.
உன் தாமரைக் கையால் வளையல்கள் ஒலிக்க
மகிழ்ச்சியுடன் வந்து கதைவை திறக்கவேணும்.
**ராமானுஜருக்கு பிடித்த திருப்பாவை**
ராமானுஜருக்கு திருப்பாவையில் ஈடுபாடு மிக அதிகம். அதனால் அவர் திருப்பாவை ஜீயர் என்ற பெயர் பெற்றார். இந்த பெயரையே அவர் விரும்பினார்.

“உந்துமத களிற்றன்” என்ற திருப்பாவை பாடிக்கொண்டு பிக்ஷைக்கு ஒரு நாள் பெரிய நம்பி திருமாளிகைக்கு (வீட்டிற்கு) சென்ற போது “செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்துதிறவாய்” என்று பாடி முடிக்க, நம்பியின் மகள் அத்துழாய் கைவளை குலுங்கக் கதவை திறப்பதும் ஒரோ சமயம் நிகழ, ராமானுஜர் அவளை நப்பின்னை என்று நினைத்து ஸாஷ்டாங்கமாக விழுந்து தண்டம் சமர்ப்பித்தார் (சேவித்தார்) என்று கூறுவர்.
இதனால் இந்த பாட்டை கோயில்களில் இன்றும் இரண்டு முறை பாடுவது வழக்கம்.
 பத்தொன்பதாம் பாடல்
நப்பின்னை பிராட்டியையும் கண்ணனையும் எழுப்புதல்



குத்து விளக்கெரிய கோட்டுக் கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச-சயனத்தின் மேல் ஏறிக்
கொத்து அலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர் மார்பா! வாய் திறவாய்;
மைத் தடங் கண்ணினாய்! நீ உன் மணாளனை
எத்தனை போதும் துயில் எழ ஒட்டாய் காண்,
எத்தனை யேலும் பி¡¢வு ஆற்றகில்லாயால்;
தத்துவம் அன்று தகவு — ஏலோர் எம்பாவாய்.

நிலை விளக்குகள் ஒளிவீச, தந்தக் கால்களையுடைய கட்டிலில்
மெத்தென்ற பஞ்சு படுக்கை மீது
கொத்துதாக மலர்ந்திருக்கும் பூக்களை சூட்டிய கூந்தலுடைய
நப்பின்னையின் மார்பில் தலையை வைத்து கொள்பவனே வாய்திறந்து பேசு!
மைக் கண்ணுடைய நப்பின்னையே! நீ உன் கணவனை சிறுபொழுதும்
படுக்கையை விட்டு எழுந்திருக்க விடவில்லை.
கணமாகிலும், நீ அவன் பிரிவை சகிக்க மாட்டாய்
ஆ! நீ இப்படி (எதிராக)இருப்பது நியாமும் ஆகாது குணமும் ஆகாது.
இருபதாம் பாடல்
கண்ணனையும் நப்பின்னை பிராட்டியையும் மறுபடி எழுப்புதல்

முப்பத்து மூவர் அமரர்க்கு முன் சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே! துயிலெழாய்;
செப்பம் உடையாய்! திறல் உடையாய்!  செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா! துயிலெழாய்;
செப்பு அன்ன மென் முலைச் செவ்வாய்ச் சிறு மருங்குல்
நப்பின்னை நங்காய் திருவே துயிலெழாய்;
உக்கமும் தட்டொளியும் தந்து உன் மணாளனை
இப்போதே எம்மை நீர் ஆட்டு — ஏலோர் எம்பாவாய்.

முப்பத்து முன்று கோடி தேவர்களுக்குத் துன்பம் வரும்முன்பே சென்று
அவர்களின் நடுக்கத்தை போக்கும் வீரனே எழுந்திரு!
கருணையுள்ளவனே, வல்லமையானவனே, பகைவருக்கு
பயத்தைக் கொடுக்கும் பெருமானே! எழுந்திரு
தங்க கலசம் போன்ற மென் முலை, சிவந்த உதடு, சிறிய இடையை
உடைய நப்பின்னையே!, திருமகளே! எழுந்திரு
விசிறியும், கண்ணாடியும் உன் கணவனையும் எங்களுக்குக் கொடுத்து
எங்களுக்கு நீராட உதவி செய்வாயாக.
இருபத்தொன்றாம் பாடல்
உலகிற்கு ஒளியாய் திகழும் கண்ணனே! எழுந்தருள்வாயாக!


ஏற்ற கலங்கள் எதிர் பொங்கி மீது அளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல் பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே! அறிவுறாய்;
ஊற்றம் உடையாய்! பெரியாய்!  உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே! துயிலெழாய்;
மாற்றார் உனக்கு வலி தொலைந்து உன் வாசற்கண்
ஆற்றாது வந்து உன் அடி பணியுமா போலே
போற்றி யாம் வந்தோம் புகழ்ந்து — ஏலோர் எம்பாவாய்.

கறக்கும் பாலை வாங்கும் பாத்திரங்கள் எதிர்த்துப் பொங்கி மேலே வழிய
தங்கு தடையில்லாமல் பாலை கொடுக்கும் வள்ளல் போன்ற பசுக்களை
அதிகம் பெற்றுள்ள நந்தகோபனின் பிள்ளையே விழித்துக்கொள்!
சக்தி உள்ளவனே, பெரியவனே! உலகத்தில்
அவதாரம் செய்த ஒளி படைத்தவனே! எழுந்திரு.
எதிரிகள் உன்னிடம் வலிமையிழந்து உன் வாசலில்
கதியற்று வந்து உன் திருவடிகளில் பணிவது போல
நாங்கள் உன்னைத் துதித்துப் பாட வந்துள்ளோம்!
 இருபத்திரெண்டாம் பாடல்
கண்ணை விழித்து, செந்தாமலர்க் கண்ணினால் எங்களை நோக்குவாயோ?



அங்கண் மா ஞாலத்து அரசர்  அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்.

அழகிய அகன்ற உலகத்து அரசர்கள் அகங்காரம் குலைந்து
உன்னுடைய அரியணையின் கீழே கூடியிருப்பது போல
நாங்களும் நெருங்கி வந்துள்ளோம்.
சலங்கையின் மணியைப் போல, பாதி திறந்த தாமரைப்பூ என்னும்படி
உன் கண்கள் சிறுது சிறுதாக எங்கள் மேல் விழிக்கலாகாதோ ?
சந்திரனும் சூரியனும் உதித்தாற் போல
அழகிய இருகண்களாலும் எங்களைப் பார்த்தால்
எங்கள் பாவங்கள் தொலைந்து விடும்.















Friday, March 23, 2018

143- பருந்தாட் களிற்றுக் கருள்செய்த

பருந்தாட் களிற்றுக் கருள்செய்த
பரமன் றன்னை பாரின்மேல்
விருந்தா வனத்தே கண்டமை
விட்டு சித்தன் கோதைசொல்
மருந்தா மென்று தம்மனத்தே
வைத்துக் கொண்டு வாழ்வார்கள்
பெருந்தா ளுடைய பிரானடிக்கீழ்ப்
பிரியா தென்று மிருப்பாரே

பருந்தாட்களிறுக்கு அருள் செய்த - பருத்த கால்களையுடைய யானைக்கு அருள் செய்த

பரமன் தன்னை பாரின் மேல் - பரமன் தன்னை உலகினில்

விருந்தாவனத்தே கண்டமை - விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி

விட்டு சித்தன் கோதை சொல் - விஷ்ணுசித்தன் எனும் பெரியாழ்வார் மகள் கோதை சொல்

மருந்து ஆம் என்று தம் மனத்தே -  மருந்து என்றே கொண்டு தம் மனத்தே

வைத்துக் கொண்டு வாழ்வார்கள் - நினைத்து வாழ்பவர்கள்

பெருந்தாள் உடைய பிரானடிக் கீழ் - பெரிய திருவடிகளையுடைய எம்பெருமானின் அடிக் கீழ்

பிரியாது என்றும் இருப்பாரே - பிரியாமல் என்றும் இருப்பார்கள்

பருத்த கால்களையுடைய யானைக்கு அருளிய பரமனை, விருந்தாவனத்தில் கண்டு அமைந்ததுப் பற்றி, பெரியாழ்வார் மகள் கோதை சொன்ன பாடல்களை . வாழ்வு சிறக்கும் மருந்தென்று மனதில் எண்ணி வழிபட்டு, வாழ்பவர்கள், திருமானின் திருவடிகள் கீழ் என்றும் பிரியாமல் இருக்கும் நிலை எய்துவர்

இத்துடன் பதினான்காம் திருமொழியும், நாச்சியார் திருமொழியும் நிறைவுபெற்றது

Thursday, March 22, 2018

142 - நாட்டைப் படையென்று அயன்முதலா

நாட்டைப் படையென்று அயன்முதலாத்
தந்த நளிர்மா மலருந்தி
வீட்டைப் பண்ணி விளையாடும்
விமலன் றன்னைக் கண்டீரே
காட்டை நாடித் தேனுகனும்
களிறும் புள்ளு முடன்முடிய
வேட்டை யாடி வருவானை
விருந்தா வனத்தே  கண்டோமே

நாட்டைப் படையென்று அயன்முதலாத் தந்த - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை

நளிர் மா மலருந்தி - குளிர்ந்த தொப்புள் கொடியிலே உந்தை படைத்து ,(அந்த பிரம்மன் மூலம் பல உயிர்களை பிறப்பித்து)

வீட்டைப் பண்ணி விளையாடும் - பிறப்பு முதல் வீடு பேறு பெரும்வரை ஒருவரின் வாழ்வில் விளையாடும்

விமலன் தன்னை கண்டீரே - விமலனைப் பார்த்தீர்களா?

காடடி நாடித் தேனுகனும் - காட்டில் சென்று தேனுகன் என்ற அசுரனையும்

களிறும் புள்ளும் உடன் முடிய - குவலயபீடம் என்ற யானையையும், பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும்

வேட்டையாடி வருவானை - வேட்டையாடி வந்தவனை

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி - நாட்டைப் படைக்கச் சொல்லி பிரம்மனை ,குளிர்ந்த தொப்புள் கொடியிலே உந்தை படைத்து (அந்த பிரம்மன் மூலம்) பல உயிர்களை பிறப்பித்து, பிறப்பு முதல் வீடு பேறு பெரும்வரை ஒருவர் வாழ்வில் விளையாடும் விமலனைப் பார்த்தீர்களா?

பதில் - காட்டில் சென்று, தேனுகன் என்ற அசுரனையும், குவலயபீடம் என்ற யானையையும், பகாசுரன் என்ற பறவை வடிவ அசுரனையும், வேட்டையாடி வந்தவனை விருந்தாவனத்திலே கண்டோமே

141 - வெளியே சங்கொன்றுடையானைப்

வெளியே சங்கொன்றுடையானைப்
பீதக வாடை யுடையானை
அளிநன் குடைய திருமாலை
ஆழி யானைக் கண்டீரே
களிவண் டெங்கும் கலந்தாற்போல்
கழம்பூங்குழல்கள் தடந்தோள்மேல்
மிளிர நின்று விளையாட
விருந்தா வனத்தே கண்டோமே

வெளியே சங்கொன்று உடையானை - வெண்ணிற சங்கொன்று உடையவனை

பீதக வாடை யுடையானை - மஞ்சள் ஆடை உடுத்தியவனை

அளிநங்கு உடைய திருமாலே - இரக்கம்,அன்பு கொண்ட திருமாலை

ஆழி யானைக் கண்டீரே- சக்கரம் உடையவனைக் கண்டீரே

களி வண்டு எங்கும் கலந்தாற்போல - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தது போல

கழம் பூங்குழல்கள் தடந்தோள் மேல் மிளிர நின்று விளையாட - மணம் கமழும் பூக்கள் அவனது பெரிய தோள்களை அலங்கரித்து மிளிர விளையாடிக் கொண்டிருப்பவனை

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோமே

கேள்வி - வெண்சங்கு உடையவனை, மஞ்சள் ஆடை உடுத்தியவனை,இரக்கம் அன்பு கொண்ட திருமாலை (இரக்கமில்லாவதன் என முன்னர் கூறியவள்..இப்போது இரக்கம் கொண்டவன் என் கிறாள்.ஆண்டவ்ன் மீது கொண்ட காதல்..மாறி மாறி பேசத் தோன்றுகிறது) சக்கரம் கொண்டவனைக் கண்டீர்களா?

பதில் - மகிழ்வுற்று தேனுண்டு திரியும் வண்டுகள் எங்கும் கலந்தாற்போல, மணம் கமழும் பூக்கள் அவன் தோள்களை அலங்கரிக்க விருந்தாவனத்தில் விளையாடிக் கொண்டிருப்பவனைக் கண்டோமே

140 - பொருத்த முடைய நம்பியை

பொருத்த முடைய நம்பியைப்
புறம்போ லுள்ளும் கரியானை
கருத்தைப் பிழைத்து நின்ற அக்
கருமா முகிலைக் கண்டீரே
அருத்தித் தாரா கணங்களால்
ஆரப் பெருகு வானம்போல்
விருத்தம் பெரிதாய் வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

பொருத்த முடைய நம்பியைப் புறம் போல் உள்ளும் கரியானை - உள்ளும் புறமும் ஒன்றாய்ப் பொருந்திய நம்பியை, உடல் போல உள்ளமும் கருப்பானவனை

கருத்தைப் பிழைத்து நின்ற அக் கரு மாமுகிலைக் கண்டீரே- தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத அந்தக் கரிய நிற முகில் நிறத்தவனைக் கண்டீர்களா

அருத்தித் தாரா கணங்களால் - அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்களால்

ஆரப் பெருகு வானம் போல்- நிறைந்து வழியும் வானத்தைப் போல

விருத்தம் பெரிதாய் வருவானை - பெரிய கூட்டத்துடன் வருபவனை

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவத்தில் கண்டோம்

(ஆண்டாளின் மனநிலையைப் பாருங்கள்.இவள்..கற்பனை உலகில் அவனுடன் வாழ்ந்தாள்.ஆனால்..அவன் வராததால் கொடுத்த வாக்கைக் காப்பாற்றாதவன் என் கிறாள்.உள்ளும் புறமும் கருப்பானவன் என்கிறாள்/ மு ந்தைய பாட்டில் அழகற்ற புருவம் என்றாள்//இப்பாடலில் பொருத்தம் உள்ள நம்பி என் கிறாள். அவள் மனநிலையைப் பாருங்கள்.அவல் படும் வேத்னை புரியும்)

கேள்வி - தான் சொன்ன வாக்கை நிறைவேற்றாத, அந்த கரிய முகில் நிறத்தவனை, உடல் போலவே உள்ளமும் கருப்பானவனைக் கண்டீர்களா?

பதில் - அருந்ததி முதலான விண்மீன் கூட்டங்கள் நிறைந்த வானம் போல..த்ன்னை சுற்றிக் கூட்டத்துடன் விருந்தாவனத்தில் அவன் வருவதைக் கண்டோம்

139 - தரும மறியாக் குறும்பனைத்

தரும மறியாக் குறும்பனைத்
தங்கைச் சாரங்க மதுவேபோல்
புருவ வட்ட மழகிய பொருத்த
மிலியைக் கண்டீரே உருவு
கரிதாய் முகம் செய்தாய்
உதயப் பருப்ப தத்தின்மேல்
விரியும் கதிரே போல்வானை
விருந்தா வனத்தே கண்டோமே

தருமம் அறியா குறும்பனை - நியாயம் என்பதே என்ன என அறியா குறும்பனை

தன் கை சாரங்கம் அது போல- தனது கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போல

புருவ வட்டம் அழகிய பொருத்த மிலியைக் கண்டீரே - புருவ வட்டம் கொண்ட அழகிய பொருத்தம் இல்லாதவனைக் கண்டீர்களா?

உருவு கரிதாய் முகம் செய்தாய் - உருவம் கரியதாக, முகம் செம்மையாக

உதயப் பரப்பதத்தின் ;- மலையின் மீது

மேல் விரியும் கதிரே போல்வானை - விரிகின்ற கதிரைப் போன்ற முகம் கொண்டவனை

விருந்தாவனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் பார்த்தோம்

கேள்வி - (தான் அவன் மீது அவ்வளவு காதல் கொண்டும் மதிக்கத் தெரியாதவன்.தரும சிந்த்னையற்றவன் என்றெல்லாம் ஆண்டாள் கோபத்தில் சொல்வதெல்லாம் அவன் மீது கொண்ட காதலால்)நியாயம் என்றால் என்னவென்றே தெரியாதவன், தன் கையில் உள்ள சாரங்கம் எனும் வில்லைப் போன்று புருவத்தினைக் கொண்ட அழகற்றவன் ..அவனைக் கண்டீர்களா (அழகன் என்று சொல்லிவந்தவள்..கோபத்தால்..இப்படி சொல்கிறாள்)

பதில் - உருவம் கரியதாக, முகம் செம்மையாக, மலையின் மீது..விரிகின்ற சுரியனின் கதிரைப் போன்ர முகம் கொண்டவனை விருந்தாவனத்தில் கண்டோம்


Wednesday, March 21, 2018

138 மாத வன்என் மணியினை

மாத வன்என் மணியினை
வலையில் பிழைத்த பன்றிபோல்
ஏது மொன்றும் கொளத்தாரா
ஈசன் றன்னைக் கண்டீரே
பீதக வாடை யுடைதாழப்
பெருங்கார் மேகக் கன்றேபோல்
வீதி யார வருவானை
விருந்தா வனத்தே கண்டோமே

மாதவன் என் மணியினை - மாதவன் என் மணியினை

வலையில் பிழைத்த பன்றிபோல - வலையில் இருந்து தப்பி பிழைத்த பன்றி போல

ஏது ஒன்றும் கொளத்தாரா - ஏது ஒன்றும் நாம் கொள்ள, கைக்கு பிடி தராமல் செல்லும்

ஈசன் தன்னை கண்டீரே - இறைவனைக் கண்டீர்களா?

பீதக வாடை உடைதாழ - தனது மஞ்சள் பட்டாடை தாழ

பெருங்கார் மேகக் கன்றே போல் - பெரும் கார் மேகக் கன்றே போல் (கருமை நிற கன்றினைப் போல)

வீதியார வருவானை - வீதியில் நிறைந்து வருபவனை

விருந்தா வனத்தே கண்டோமே - விருந்தாவனத்தில் கண்டோம்


 கேள்வி - மாதவன் என் மணியினை (மணி என மாதவனை கொஞ்சுகிறாள்), வலையில் இருந்து தப்பிப் பிழைத்த பன்றி போல (உடனேயே பன்றிக்கு ஒப்பிடுகிறாள்? ஆனாலும் பன்றி அவதாரமே எடுத்தவர்.ஆகவே நாம் தவறாக எடுக்கக் கூடாது )நமது கைப்பிடியிலிருந்து தப்பி ஓடியவர்..அவனைக் கண்டீர்களா?

பதில் - பெரும் கருமை நிறக் கன்று போல, மஞ்சள் பட்டாடை உடுத்தி, வீதியில் வலம் வந்துக் கொண்டிருந்தவனைக் கண்டோமே